உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேரும்போதுதான் இந்தத் தொப்பை ஏற்படுகிறது. அதுவும் உடலுக்கு நெருக்கமான ஆடைகளை அணியும்போது சற்று அசிங்கமாகதான் தெரியும். அப்போது நமக்கே ஒரு மாதிரி அவமானமாக இருக்கும்.
ஆகையால் இந்தத் தொப்பையை குறைக்க நாம் தினம் தினம் அவ்வளவு முயற்சிகளை எடுப்போம். அனைத்து முயற்சிகளும் வீணாகத்தான் முடியும். அந்தவகையில் தொப்பையைக் குறைப்பதற்கு எலுமிச்சை சாறு எவ்வளவு உதவி செய்கிறது என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஏனெனில் எலுமிச்சை சாறில் ஆன்டி ஆக்ஸ்டன்டகள் வைட்டமின்கள் மற்றும் நார்சத்துகள் ஆகியவை நிறைந்துள்ளன.
இவை உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவுகிறது. மற்றும் உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. அதேபோல் இந்த சாறு கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. எலுமிச்சையில் கலோரிகள் குறைவாக உள்ளது. அதேபோல் நீரேற்றம் செய்யும் பண்புகளும் அதிகம் உள்ளன.
செரிமானத் தன்மையை அதிகரிக்க, உணவை உடைக்க மற்றும் வீக்கத்தைத் தடுக்க என அனைத்திற்கும் எலுமிச்சை சாறு உதவுகிறது. இப்படி பல நன்மைகளைத் தரும் எலுமிச்சை சாறில் இந்த மூன்று பொருட்களில் ஒன்றைக் கலந்து குடித்தால் கட்டாயம் உங்கள் தொப்பை குறைந்துவிடும்.
இஞ்சி:
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளதால் தொப்பை கொழுப்பு வேகமாக கரைய உதவுகிறது. எலுமிச்சை சாறுடன் இஞ்சி சேர்க்கும்போது செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டி இரப்பை குடல் சௌகரியத்தை நீக்கிக் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது ஆரோக்கியத்துடன் உடல் எடை அதிகரிக்க உதவுகிறது.
மஞ்சள்:
பச்சை மஞ்சளை அரைத்து எலுமிச்சை சாறுடன் சேர்த்துக் குடிக்கலாம். மஞ்சளில் ஆக்ஸ்ஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இது உடல் பருமன் மற்றும் தொப்பை கொழுப்பைக் குறைக்கிறது.
அப்படியில்லையெனில் மஞ்சளுடன், கருப்பு மிளகு மற்றும் வெந்நீர், எலுமிச்சை சாறு ஆகிவற்றைச் சேர்த்துப் பருகலாம். இதுவும் உங்களின் தொப்பையைக் குறைக்கும்.
சியா விதைகள்:
எலுமிச்சை சாறுடன் ஊற வைத்த சியா விதைகளைச் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். இது நார்சத்தை அதிகரித்து செரிமானத்திற்கும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. வைட்டமின் சி கொண்ட எலுமிச்சையில் சியா விதைகளைச் சேர்த்து சாப்பிடும்போது புத்துண்ரச்சி ஏற்படும். அதேபோல் இது உடல் எடையையும் குறைக்கும்.