அல்சர் பிரச்னை 
ஆரோக்கியம்

அல்சரை குணப்படுத்தும் இயற்கை வழிமுறை சிகிச்சைகள்!

ம.வசந்தி

மது உணவுக்குழாயின் உணவுப் பாதையில் உண்டாகும் புண்களை அல்சர் என்று சொல்கிறோம். சிறுகுடலின் முன்பகுதியின் உட்சுவரில் உருவாகும் புண்களும் அல்சர்தான். அல்சர் ஏற்பட்டால், வயிற்றில் வீக்கம் அல்லது வயிறு நிரம்பியது போன்ற உணர்வு, நெஞ்சு எரிச்சல், குமட்டல், நெஞ்சு வலி, எடை குறைதல் உள்பட பல்வேறு அறிகுறிகள் ஏற்படுகின்றன.

உடலில் வெளியே தெரியக்கூடிய புண்களை விட, உள்ளே பொதுவாக வயிற்றின் உட்பகுதியில் குடலில் வரக்கூடிய புண்கள் பெப்டிக் அல்சர் என்று அழைக்கப்படுகின்றன. இந்தப் புண்களை கவனிக்காவிட்டால் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். பொதுவாக, அல்சருக்கு நிறைய மருந்து மாத்திரை இருந்தாலும் சில இயற்கை வழிகளை பின்பற்றினால் அந்த நோயிலிருந்து நிவாரணம் பெறலாம். அது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

1. அல்சரை குணப்படுத்த அதிக காரத்தன்மை உள்ள உணவுகளை தவிர்த்து விட வேண்டும்.

2. அல்சரை குணப்படுத்த பசி அதிகமாக இருக்கும்போதோ அல்லது பசிக்கும்போதோ சூப் போன்றவற்றை பருகக் கூடாது. இது அமில சுரப்பை அதிகப்படுத்தும்.

3. அல்சரை குணப்படுத்த புகை பிடித்தல், மது பழக்கம் போன்றவற்றை கைவிட வேண்டும்.

4. அல்சரை குணப்படுத்த காலையில் வேக வைத்த இடியாப்பம், இட்லி, புட்டு போன்றவற்றுடன் தேங்காய் பால், தேங்காய் துருவல், தேங்காய் சட்னி ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

5. அல்சரை குணப்படுத்த காலை உணவுடன் அல்லது தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வரலாம். வாழைப்பழம் வயிற்றுப் புண்களை குணமாக்கும்.

6. அல்சரை குணப்படுத்த மதியம் மோர் கலந்த சாதத்தை சாப்பிட வேண்டும். மோர் புண்களை ஆற்றும், வயிற்று எரிச்சல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

7. அல்சரை குணப்படுத்த கொதிக்கும் நீரில் சிறிதளவு சீரகம் சேர்த்து மூடி வைத்து ஆறிய பின் பருகலாம். இதனால் ஜீரணக் கோளாறுகள் குறையும்.

8. அல்சரை குணப்படுத்த பிரண்டை வயிற்றுப் புண்களை குணப்படுத்தும். அதனால் பிரண்டையை துவையல் செய்தோ அல்லது சட்னி போன்றோ உணவோடு சேர்த்துக் கொள்ளலாம்.

9. ஸ்ட்ராபெர்ரியில் அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்  உள்ளன. இது, உடலை அல்சரில் இருந்து பாதுகாக்கிறது. இது தவிர, வயிற்றுச் சுவர்களை வலுப்படுத்த உதவுகிறது. எனவே, அல்சர் குணமாக தினமும் ஒரு கப் ஸ்ட்ராபெர்ரியை மதிய வேளையில் சாப்பிடுங்கள்.

10. சீதாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, வயிற்றுப் புண்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கக்கூடியவை. எனவே, அல்சர் உள்ளவர்கள் சீதாப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டால், விரைவில் வயிற்றுப் புண்களில் இருந்து விடுபடலாம்.

குழந்தைகளின் பிடிவாத குணத்தை சமாளிக்க 6 எளிய வழிகள்!

விமர்சனம்: ஜீப்ரா (தெலுங்கு) - அக்கடதேசத்து அசத்தல் படம்!

விமர்சனம்: லைன்மேன் - அங்கீகாரத்தை தேடும் ஒரு இளைஞனின் போராட்டம்!

உறுதியான முடிவுகள்தான் பல வெற்றிகளைக் குவிக்கும்!

விமர்சனம்: ஜாலியோ ஜிம்கானா - பேரில் மட்டுமே ஜாலி; திரையில் சிரிப்பு காலி!

SCROLL FOR NEXT