Eat cardamom before bed.
Eat cardamom before bed. 
ஆரோக்கியம்

தூங்குவதற்கு முன் ஏலக்காய் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

கிரி கணபதி

தினமும் தூங்குவதற்கு முன் மூன்று இலக்காய் சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என உங்களுக்குத் தெரியுமா?. தெரியாது எனில் இந்தப் பதிவை முழுமையாகப் படியுங்கள், ஏலக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறித்தும், அதன் மருத்துவ குணங்கள் குறித்தும் முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம். 

மசாலா பொருட்களின் ராணி என அழைக்கப்படும் ஏலக்காய், பிரியாணி முதல் தேநீர் வரை பெரும்பாலான உணவுகளில் அதன் தனித்துவமான வாசனைக்காக  முக்கியப் பங்கு வகிக்கிறது. இவை சிலோன், மலபார், மைசூர், பிஜ்பூர் போன்ற பகுதிகளில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. உலகின் மிகவும் விலை உயர்ந்த நறுமணப் பொருட்களில், குங்குமப்பூவுக்கு அடுத்தபடியாக இருப்பது ஏலக்காய் தான். 

100 கிராம் ஏலக்காயில் 10 கிராம் புரதம், 311 கலோரி, 6.7 கிராம் கொழுப்பு, 178 மில்லிகிராம் பாஸ்பரஸ், 13.9 மில்லி கிராம் இரும்புச்சத்து, 18 மில்லி கிராம் சோடியம் மேலும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதன் மருத்துவ குணங்கள் என்று பார்க்கும்போது, பழங்கால மருத்துவ நூல்களிலேயே ஏலக்காயின் மருத்துவ குணங்கள் குறித்து தகவல்கள் எழுதப்பட்டுள்ளது.

குறிப்பாக, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கவும், சிறுநீரகத் தொற்றை குணப்படுத்தவும் இந்திய ஆயுர்வேத மருத்துவத்தில் ஏலக்காய் பெரிதும் உதவுகிறது.  ஏலக்காயை மெல்வது மூலமாக வாயில் துர்நாற்றம் ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்களை போக்கலாம். அதேபோல புகைப் பழக்கத்திற்கு அடிமையான நபர்களையும் ஏலக்காய் பயன்படுத்தி மீட்டெடுக்கலாம். 

ஒரு கிளாஸ் வெந்நீரில் மூன்று ஏலக்காய்களை சேர்த்து தினசரி இரவு தூங்குவதற்கு முன்பு பருகுவது மூலமாக, அஜீரணம், மலச்சிக்கல், வயிற்று பிரச்சனைகள், வாயுத் தொல்லை போன்றவை குணமாகும். மேலும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு ஏலக்காய் ஒரு சிறந்த வீட்டு வைத்தியமாகும். ஏலக்காயின் நறுமணம் நம் மனநிலையை சிறப்பாக மாற்றும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். 

சராசரியாக ஒரு நபர் ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று ஏலக்காய் வரை சாப்பிடலாம். ஏலக்காயை பொடி செய்து அத்துடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் கிடைக்கும். அதே நேரம் உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கிறது என்பதற்காக ஏலக்காயை அதிகமாகவும் சாப்பிடக்கூடாது. அதிகமாக ஏலக்காய் சாப்பிட்டால் பித்தப்பை மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். 

குறிப்பாக ஏற்கனவே கல்லீரல் மற்றும் பித்தப்பை தொடர்பான நோய்களுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள், மருத்துவரின் ஆலோசனை பேரிலேயே ஏலக்காயை சாப்பிட வேண்டும். அதேபோல கர்ப்பிணிப் பெண்களும் ஏலக்காய் அதிகம் சாப்பிடக்கூடாது. இதைக் கருத்தில் கொண்டு தினசரி இரண்டு அல்லது மூன்று ஏலக்காயை சாப்பிடுவது மூலமாக ஆரோக்கியமாக இருக்க முடியும். 

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT