Why is vitamin D necessary for the body? https://manithan.com
ஆரோக்கியம்

வைட்டமின் டி உடலுக்கு ஏன் அவசியமாகிறது?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

லும்புகளை ஆரோக்கியமாக வைக்கவும், நம் உடல் கால்சியம் சத்தை உறிஞ்சவும் வைட்டமின் டி அவசியமாகிறது. எலும்புகளின் ஆரோக்கியம், தசை செயல்பாட்டை ஒழுங்குபடுத்துதல், மனநிலையை மேம்படுத்துதல் போன்ற உடல் செயல்பாடுகளுக்கு நமக்கு வைட்டமின் டி தேவைப்படுகிறது. சூரிய ஒளி இல்லாத காரணத்தாலோ அல்லது தவறான உணவு முறையாலோ கூட உடலுக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்காமல் போனாலும் வைட்டமின் டி குறைபாடு ஏற்படலாம். குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாக இருக்கும். இந்த சமயங்களில் வைட்டமின் டியை எப்படி, எதன் மூலம் பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சருமத்தின் மீது சூரிய ஒளி படும்போது அதில் இருக்கும் புற ஊதாக் கதிர்களை கொண்டு வைட்டமின் டி உற்பத்தி செய்யப்படுகிறது. உடலில் வைட்டமின் டி குறைந்தால் எலும்பின் அடர்த்தி குறைந்து எளிதில் எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் உண்டு. வைட்டமின் டி குறைபாட்டால் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் பெரிதும் பாதிக்கப்படும். எலும்பின் அடர்த்தி குறைந்து எளிதில் எலும்பு முறிவு ஏற்பட வழி வகுக்கும்.

சூரிய ஒளியைத் தவிர வைட்டமின் டி நிறைந்த உணவுகள்:

1. காளான் (மஷ்ரூம்கள்): சைவ உணவுகளில் அதிக அளவில் வைட்டமின் டி நிறைந்த ஒரே உணவு காளான்தான்.

2. கடல் உணவுகள்: கடல் உணவுகளில் ஒமேகா 3 அதிக அளவில் இருப்பது போல் வைட்டமின் டியும் நிறைந்துள்ளது. குறிப்பாக சால்மன் மற்றும் மத்தி மீன் வகைகள்.

3. முட்டை: முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால், கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும்.

4. ஆரஞ்சு ஜூஸ்: மேற்கத்திய நாடுகளில் வைட்டமின் டிக்கு ஆரஞ்சு ஜூசை அதிக அளவில் எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸில் கிட்டத்தட்ட நூறு யூனிட் அளவுகள் வைட்டமின் டியை பெற முடியும்.

5. பசும்பால், பாதாம் பால், சோயா பால்: பாதாம் பால், சோயா பால் மற்றும் பசும் பாலில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்களுடன் வைட்டமின் டியையும் ஓரளவு பெற முடியும்.

6. ஓட்ஸ் மற்றும் செரல் வகைகள்: ஓட்ஸ் மற்றும் செரல் வகைகளில் நார்ச்சத்துக்களுடன் வைட்டமின் டியும் நிறைந்துள்ளது. ஓட்மீலில் கிட்டத்தட்ட நூறு யூனிட் அளவு வைட்டமின் டி கிடைக்கும்.

7. காட் லீவர் ஆயில்: சைவ உணவு சாப்பிடுபவர்கள் மீன் சாப்பிட முடியாது. இவர்கள் காட் லீவர் ஆயில் எடுத்துக் கொள்ளலாம். இவை மாத்திரைகளாகவும் கிடைக்கின்றது.

இவை தவிர, செறிவூட்டப்பட்ட தானியங்கள், பாதாம் போன்ற பருப்பு வகைகள், சீஸ் வகைகளிலும் வைட்டமின் டி உள்ளது. மேலும், கீரைகள், வெண்டைக்காய், கேரட், புரோக்கோலி, தயிர் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.

மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

SCROLL FOR NEXT