30-30-30 ஃபார்முலா! மிரட்டலான அம்சங்களுடன் களமிறங்கிய புதிய ‘Yezdi Scrambler 350’!

யெஸ்டி நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்கிராம்ப்ளர் 350-ஐ (Yezdi Scrambler 350)என்ற பைக்கை இந்திய சந்தையில் அறிமுகப் படுத்தியுள்ளது.
Yezdi Scrambler 350
Yezdi Scrambler 350image credit-bikewale.com
Updated on

கரப் பயணங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்கள் ஆகிய இரண்டிற்கும் ஏற்ற, எடை குறைந்த மற்றும் பல்துறை பயன்பாடுள்ள மோட்டார்சைக்கிளைத் தேடும் ஓட்டுநர்களைக் குறிவைத்து, யெஸ்டி நிறுவனம் ஸ்கிராம்ப்ளர் 350-ஐ (Yezdi Scrambler 350)என்ற பைக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியச் சூழல்களுக்கு ஏற்ப செயல்திறனையும் நடைமுறைப் பயன்பாட்டையும் சமநிலைப்படுத்தும் நோக்கில், யெஸ்டி நிறுவனம் ஸ்கிராம்ப்ளர் 350 பைக்கை '30-30-30' ஃபார்முலா எனப்படும் 30 bhp, 30 Nm மற்றும் 30 kmpl எரிபொருள் சிக்கனம், மேம்படுத்தப்பட்ட இன்ஜின், புதுப்பிக்கப்பட்ட அம்சங்கள், புதிய வடிவமைப்பு மற்றும் ஸ்டைலான வடிவமைப்புடன் இந்த பைக் சந்தைக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பைக், இன்றைய இளைஞர்கள் விரும்பும் வகையில் நகர்புற பயன்பாடு மற்றும் ஆஃப்-ரோடு (trail riding) இரண்டிற்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது சாலை, மழை, ஆஃப்-ரோடு ஆகிய மூன்று ரைடிங் மோட்களைக் கொண்டுள்ளது.

இந்த வடிவமைப்பு, உயர்த்தப்பட்ட முன்பக்க அலகு, இறுக்கமான பின்பக்க ஃபெண்டர், நீள்வட்ட வடிவ பக்கவாட்டு பேனல்கள் மற்றும் பிராண்டின் பாரம்பரியத்தைக் குறிக்கும் '69' கிராஃபிக்ஸ் போன்ற அம்சங்களுடன், ஒரு ஃபேக்டரி-கஸ்டம் அழகியலைப் பின்பற்றுகிறது.

இதையும் படியுங்கள்:
'Flying Flea C6' : கிளாசிக் லுக்... மாடர்ன் டெக்னாலஜி... ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரிக் பைக்!
Yezdi Scrambler 350

இந்த பைக்கின் புதிய 334 சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்விட்-கூல்டு 'கத்தார்' (Katar) என்ஜின் பொருத்தப் பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 30 பிஎஸ் பவரையும்(8,100 rpm-ல்), 30 என்எச் டார்க்கையும் (6,750 rpm-ல்) வெளிப் படுத்தும் திறன் கொண்டது. செயல்திறன் மற்றும் ஓட்டும் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இந்த என்ஜின் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் அசிஸ்ட் & ஸ்லிப்பர் கிளட்ச் கொண்டுள்ளது. இந்த பைக் சுமார் 30 kmpl மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃப்யூயல் டேங்க் வடிவமைப்பு, சேசிஸ் (chassis) மற்றும் ஃபினிஷிங் மேம்படுத்தப்பட்டுள்ளது. டூயல்-சேனல் ABS (பின்புறம் ஆஃப் செய்யும் வசதியுடன்), மூன்று லெவல் டிராக்ஷன் கன்ட்ரோல் (Road, Rain, Off-road), டியூப்லெஸ் டயர்கள் மற்றும் ஸ்போக் வீல்கள் ஆகியவை உள்ளன.

சுமார் 174 கிலே எடையுடன் வரும் இந்த பைக் கையாள எளிதாக இருக்கும். அதாவது புதிய மாடலில் பழைய இரட்டை எக்ஸாஸ்டுகளுக்கு (double exhaust) பதிலாக, சிங்கிள் எக்ஸாஸ்ட் வழங்கப்பட்டுள்ளதால், எடை சுமார் 10 கிலோ குறைந்து 174 கிலோவாக (kerb weight) உள்ளது, இது பைக் ஓட்டுபவர் கையாளுதலை மேம்படுத்துகிறது. மேலும் சென்ட்ரல் ரூட் எக்ஸாஸ்ட், அகலமான ஹேண்டில்பார், மற்றும் உயரமான முன் மட்கார்டு (front fender) ஆகியவை உள்ளது.

இதில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், USB சார்ஜிங், LED ஹெட்லேம்ப் மற்றும் மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் எக்ஸ் ஷோரூம் விலை சுமார் ரூ.1.99 லட்சம் முதல் ரூ.2.10 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக் லெகசி பிளாக் (ரூ.1,99,950), ஓஜி யெல்லோ (ரூ.2,05,950), ரோக் ரெட் (ரூ.2,05,950) மற்றும் ரலி ப்ளூ (ரூ.2,08,950) ஆகிய நான்கு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகளாகும்.

இதையும் படியுங்கள்:
பைக் பிரியர்களுக்கு குட் நியூஸ்: ‘Bajaj Dominar 400’-ல் அதிரடி மாற்றங்கள்!
Yezdi Scrambler 350

இந்த புதிய மாடல் யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் 350 பைக் 4 ஆண்டுகள்/50,000 கி.மீ. நிலையான உத்தரவாதத்தை 6 ஆண்டுகள் வரை நீட்டிக்கும் வசதியுடன், சாலையோர உதவி மற்றும் விருப்பத்தேர்வான ஏஎம்சி தொகுப்புகளையும் வழங்குகிறது.

logo
Kalki Online
kalkionline.com