

இந்தியாவின் மின்சார இரு சக்கர வாகனங்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மின்சார மின்சார பைக்குகள் (EVs) சுற்றுச்சூழலுக்கு உகந்தவை மற்றும் குறைந்த பராமரிப்பு செலவைக் கொண்டவை. மேலும் பெட்ரோல் வாகனங்களை விட மிகக் குறைந்த இயக்கச் செலவில் இயங்கும் இந்த வாகனங்கள், தினசரி நகரப் பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றவையாகும். இந்த வாகனங்களுக்கு பெட்ரோல் செலவை விட மிகக் குறைந்த மின்சாரச் செலவே (ரூ. 5-க்கு 25 கி.மீ வரை) ஆகும்.
PM E-Drive போன்ற இந்திய அரசுத் திட்டங்களின் கீழ் மானியங்கள் கிடைக்கின்றன. சாதாரண வீட்டுச் சாக்கெட் (Level 1 Charging) மூலமாகவே வாகனங்களை எளிதாக சார்ஜ் செய்ய முடியும் என்பதாலும், 10-12 மணி நேர சார்ஜிங் மூலம் சுமார் 40-60 கி.மீ வரை பயணிக்க முடியும் என்பதாலும் சமீப காலமாக வாடிக்கையாளர் களின் விருப்ப தேர்வாக மின்சார இரு சக்கர வாகனங்கள் உள்ளது.
இந்த இந்த மின்சார வாகனங்களின் பேட்டரிகள் பொதுவாக 3 முதல் 5 ஆண்டுகள் வரை உழைக்கும். சில நிறுவனங்கள் 3 முதல் 8 ஆண்டுகள் வரை வாரண்டி வழங்குகின்றன.
இதனால் பெரும்பாலான முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மின்சார வாகனங்கள் தயாரிப்பில் இறங்கி விட்டன. இந்த வகையில் மின்சார வாகனங்கள் தயாரிப்பில் ஓலா (Ola Electric), ஏத்தர் (Ather Energy), டிவிஎஸ் (TVS iQube), பஜாஜ் (Bajaj Chetak), ஆம்பியர் (Ampere) போன்ற நிறுவனங்கள் முன்னணியில் உள்ளது.
இந்த நிறுவனங்களுடன் போட்டியிடும் இந்தியாவில் முன்னணி நிறுவனமான PURE EV நிறுவனம் குறைந்த விலையில் அதிக தொழில்நுட்பத்துடன் கூடிய மின்சார வாகனங்களை தயாரித்து வருகிறது.
இது 2015-ம் ஆண்டு டாக்டர் நிஷாந்த் டோங்காரி மற்றும் ரோஹித் வதேரா ஆகியோரால் நிறுவப்பட்ட PURE EV நிறுவனம் (Power Using Renewable Energy) ஐஐடி ஹைதராபாத் (IIT Hyderabad) வளாகத்தில் தொடங்கப்பட்ட ஒரு முன்னணி இந்திய மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமாகும். இது மேம்பட்ட லித்தியம்-அயன் பேட்டரிகள் மற்றும் மின்சார இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்கிறது.
EPluto 7G, EcoDryft, ETrance Neo மற்றும் Etryst 350 போன்ற பிரபலமான ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்யும் இந்நிறுவனம் 5th Gen பவர் எலக்ட்ரானிக்ஸ், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான பேட்டரி கண்காணிப்பு அமைப்பு மற்றும் வெப்ப மேலாண்மை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.
இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி, வீடுகள் மற்றும் வணிக பயன்பாடுகளுக்கான சோலார் இன்வெர்ட்டர்கள் மற்றும் எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம்களையும் தயாரிக்கிறது.
இந்நிலையில் இந்தியாவில் வளர்ந்து வரும் மின்சார வாகன நிறுவனமாக திகழ்வது PURE EV நிறுவனம் தற்போது இந்தியாவில் மின்சார இரு சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
PURE EV EPluto 7G மின்சார பைக்:
PURE EV EPluto 7G மின்சார ஸ்கூட்டர் நவீன தொழில்நுட்பம் மற்றும் ரெட்ரோ வடிவமைப்புடன் கூடிய நீடித்த பயணத்திற்கு ஏற்ற வாகனம் ஆகும். இந்த ஸ்கூட்டர் 4 வேரியண்ட்களுடன், 101 முதல் 150 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது.
1.8 கிலோவாட், 2.5 கிலோவாட், 3 கிலோவாட் மற்றும் 3.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் உள்ளது. ரூ. 82,143 முதல் ரூ. 1,19,787 வரை விலையில் கிடைக்கிறது.
PURE EV EcoDryft மின்சார பைக்:
PURE EV மின்சார வாகன நிறுவனத்தின் புகழ்பெற்ற இ பைக் PURE EV EcoDryft. 2 வேரியண்ட்களுடன் கிடைக்கும் PURE EV EcoDryft பைக் , 151 முதல் 171 கிலோமீட்டர் தரும் ஆற்றல் கொண்டது. ஒரு வேரியண்ட் 3 கிலோவாட் மற்றும் மற்றொரு வேரியண்ட் 3.5 கிலோவாட் பொருத்தப்பட்டது. விலை ரூ. 1,20,807 முதல் ரூ. 1,30,295 வரை கிடைக்கிறது.
PURE EV Etryst 350 மின்சார பைக்:
PURE EV நிறுவனத்தின் மற்றொரு புகழ்பெற்ற இ பைக் இந்த PURE EV Etryst 350. இதில் ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே உள்ளது. 3.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட இ பைக். ஒரு முறை சார்ஜ் செய்தாலே 111 முதல் 171 கிமீ வரையிலான மைலேஜையும், அதிகபட்சமாக 85 முதல் 94 கி.மீ வரை வேகத்தையும் வழங்கக்கூடியது.
இதில் 3.5 kWh லித்தியம்-அயன் (Li-ion) பேட்டரி மற்றும் 4 kW BLDC மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. வழக்கமான வீட்டு உபயோக சார்ஜர் மூலம் முழுமையாக சார்ஜ் ஆக 6 மணி நேரம் வரை ஆகும்.
இந்த வாகனத்தின் எடை 120 கிலோ ஆகும். முன் மற்றும் பின் சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. ரிவர்ஸ் அசிஸ்ட் (Reverse Assist), புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் எல்.இ.டி விளக்குகள் உள்ளன. இதன் ஆரம்ப விலை சுமார் ரூ. 1.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.
PURE EV ETrance Neo மின்சார பைக்:
PURE EV நிறுவனத்தின் வெற்றிகரமான இ ஸ்கூட்டர் இந்த PURE EV ETrance Neo. இது அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற அதிவேக மின்சார ஸ்கூட்டர் ஆகும். 0-ல் இருந்து முழுமையாக சார்ஜ் ஆக 4 மணி நேரம் ஆகும். இது ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 101 கிலோமீட்டர், 120 கிலோமீட்டர் மற்றும் 150 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரக்கூடியது.
மலிவு விலை மற்றும் நீண்ட தூரப் பயணத்திற்கு இது மிகவும் சிறந்த தேர்வாகும். அதிகபட்சமாக மணிக்கு 60 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
அதிகபட்சமாக 150 கிலோ எடை வரை சுமக்கும். 1.8 கிலோவாட் பொருத்தப்பட்ட வேரியண்ட், 2.5 கிலோவாட் பேட்டரி(லித்தியம்-அயன் (Li-ion) பேட்டரி) பொருத்தப்பட்ட வேரியண்ட், 3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் உள்ளது. பேட்டரிக்கு 10 ஆண்டுகள் அல்லது 50,000 கி.மீ வரை நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் வழங்கப்படுகிறது.
சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் ட்ரம் ப்ரேக்கும், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் டிஸ்ப்ளே, ப்ளூடூத் வசதி, செல்ஃப் ஸ்டார்ட் வசதி, பேட்டரி ஸ்டேட்டஸ் வசதி, எல்இடி முகப்பு விளக்குகள் வசதி உள்ளது.
இதில் மொத்தம் 3 வேரியண்ட் உள்ளது. வேரியண்ட்டைப் பொறுத்து தோராயமாக ரூ.75,000 முதல் ரூ.1.13 லட்சம் வரை மாறுபடும்.
Reference: Ministry of Heavy Industries