Deseo (2026) விமர்சனம்: அடல்ட் கன்டென்ட் வித் 'த்ரிஷ்யம்' பாணி சஸ்பென்ஸ்!

டெரசா சிம் ஒன் இயக்கத்தில் உருவான 18+ அடல்ட் த்ரில்லர்; ஆண்களைக் கவரும் சஸ்பென்ஸ் காட்சிகள்!
DESEO 2026
DESEO 2026Source:twitter
Updated on

18/05/2026 முதல் மெக்சிகன் திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், தற்போது 17/07/2026 முதல் நெட்ஃபிலிக்ஸ் (Netflix) தளத்தில் காணக்கிடைக்கிறது..தமிழ் டப்பிங் இல்லை; ஆங்கில சப்டைட்டில் (Subtitles) உள்ளது.

ஸ்பாய்லர் அலெர்ட் (கதைச்சுருக்கம்):

நாயகி ஒரு பிரபல வக்கீல். அவளது கணவன் பெரிய கோடீஸ்வர தொழிலதிபர். இவர்களுக்கு டீன் ஏஜில் ஒரு மகள் இருக்கிறாள்.இவர்களுக்கு சொந்தமாக ஒரு ஸ்விம்மிங்க் பூல் அகாடமி உண்டு. நீச்சல் வீரர்கள், வீராங்கனைகளுக்கு நீச்சல் போட்டியில் பங்கு பெற பயிற்சி அளிக்கும் கோச்சிங் சென்டராக அந்த கிளப்பை நடத்துகிறார்கள்.

அந்த ஸ்விம்மிங் கிளப்பில், ஸ்விம்மிங்க் கோச் ஆக வில்லன் பணி புரிகிறான். அவன் ஒரு பிரமாதமான நீச்சல் வீரன். ஆனால், போதை மருந்து உபயோகித்த குற்றத்துக்காக நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்ள வாழ்நாள் தடை பெற்றவன்.ஆனால் மற்றவர்களிடம் அந்த உண்மையை மறைதது நான் போட்டியில் கலந்து கொண்டால் நான் மட்டுமே வெற்றி பெற முடியும், ஆனால் கோச் ஆக இருந்தால் பல நீச்சல் வீரர்களை வீராங்கனைகளை உருவாக்க முடியும் என ரீல் விடுபவன்.

நாயகிக்கு. வில்லன் மீது ஒரு கண், மகளை பிக்கப் பண்ண நீச்சல் குள கிளப்க்கு விசிட் அடிப்பது போல் அடிக்கடி வில்லனை சந்திக்கும் வாய்ப்பை உருவாக்கி கொள்கிறாள். ஒரு கட்டத்தில் இருவரும் நெருக்கமாகிறார்கள்.

திடீரென நாயகியின் உள்ளுணர்வு அவளை எச்சரிக்க, வில்லனுடனான உறவைத் துண்டிக்கிறாள். வில்லனிடம், "ஏதோ ஒரு மயக்கத்தில் நாம் தவறு செய்துவிட்டோம்; .இனி அது தொடரக்கூடாது.இனி என்னைப பார்க்க முயற்சிக்க வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறி விடுகிறாள்.வில்லனுக்குப் பெருத்த ஏமாற்றம். அவனால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

நாயகியின் மகளுக்கு வில்லன் மீது ஒரு க்ரஷ் (Crush) இருந்தது.அதை வில்லனிடம் வெளிப்படுத்தும்போது, வில்லன் நாசூக்காக அதை மறுத்திருந்தான். காரணம், நாயகியுடன் உறவில் இருப்பதால் அவளது மகள் தனக்கும் மகள் முறைதானே என்று நினைத்து ஒதுங்கியிருந்தான்.

ஆனால், நாயகி பிரேக்ப் (Breakup) செய்ததும் வில்லன் புதிய திட்டத்தைச் செயல்படுத்துகிறான். நாயகியின் வீட்டிற்கே வந்து, அவளது மகளை டேட்டிங் செல்ல வெளியே அழைக்கிறான். மகளும் கிளம்புகிறாள். மகளை பிணைய கைதியாக வைத்து, நாயகியை மிரட்டி அவளுடனான உறவைத் தொடர நினைப்பதுதான் வில்லனின் திட்டம்.

இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.

DESEO 2026
DESEO 2026source:heavenofhorror

நடிப்பு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்:

  • நாயகி (லட்விகா பலேட்டா): பிரமாதமாக நடித்திருக்கிறார். வில்லன் மீது காதல் கொள்வதும், தன் குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை என்றதும் அவனைக் கொல்ல துணிவதும் துடிப்பான நடிப்பு. முக வசீகரமும் அழகும் நடிப்பும் சரி விகித கலவை கொண்ட நல்ல நடிகை.

  • வில்லன் (ஆஸ்கார் பாஸ்கல்): இளமை துடிப்புடன் கூடிய நடிப்பு. நீச்சல் பயிற்சியாளர் என்று சொன்னால் நம்ப தோன்றும் ஜிம்னாஸ்டிக் உடல் கட்டு இவரது பிளஸ்.

  • மகள் (பில்லர் பாஸ்கல்): இளமை கொண்டாட்டம்! அம்மா, அப்பாவை எதிர்த்து பேசும் சராசரி டீன் ஏஜ் பெண்ணாக துடிப்பான நடிப்பு

  • கணவன் (ஜோஸ் மரியோ): டம்மி ரோல்; நடிக்க அதிக வாய்ப்பு இல்லை.

மற்ற துணைக்கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் அனைவரும் தங்களுக்குத் தந்த வேலையை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு இத்திரைப்படத்திற்கு பெரிய பக்கபலம். நீச்சல் குளத்தில் நீருக்கு அடியில் பயிற்சி மேற்கொள்ளும் காட்சிகள் தத்தரூபம். ஒளிப்பதிவாளர், நாயகி மற்றும் அவளது மகள் இருவரையும் குளோஸ்-அப் (Close-up) காட்சிகளில் அழகாக காட்டியிருக்கிறார்.

குலியா கார்டமோன் மற்றும் வனேசா மிக்லோஸ் இருவரும் இணைந்து திரைக்கதை எழுத, டெரசா சிம் ஒன் இயக்கியிருக்கிறார்.

படத்தின் ரன்னிங் டைம் 105 நிமிடங்கள்.

சபாஷ் டைரக்டர்!

  1. 'த்ரிஷ்யம்' பாணியில்: குடும்ப நலனுக்காக வில்லனை கொன்றது யாராக இருக்கும்? என்ற சஸ்பென்ஸை கடைசிவரை மெயின்டைன் செய்தது குட்!

  2. திரைக்கதை உத்தி: வில்லனை நாயகி துரத்தி செல்லும் முக்கியமான இடத்தில் காட்சியை கட் செய்து, 'ஒரு மாதத்திற்குப் பின்' என்ற டைட்டில் போட்டு காட்சிகளை விவரிக்கும் உத்தி அருமை.

  3. வேகம்: படத்தின் முதல் காட்சியிலேயே கதைக்கு வந்துவிடுவது மற்றும் வில்லன் தரப்பு நியாயங்கள் அனைத்தும் கச்சிதம்.

லாஜிக் தவறுகள் (Logic Mistakes):

  1. வில்லனை ஒரு ஆயுதத்தால் பின்மண்டையில் அடித்து தாக்கி கொலை செய்யும் கொலையாளி, எளிதாகத் தப்புவது எப்படி? போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் அது தெரியவராதா?

  2. வில்லனுக்கு எந்தப்பின் புலமும் இல்லை. நாயகியின் கணவன் தான் சம்பளம் தரும் முதலாளி. பயமே இல்லாமல் மிரட்டுவது எப்படி ?

  3. வில்லனை விட நாயகி மீதுதான் அதிக தவறு இருக்கிறது. வில்லன் பாட்டுக்கு சிவனே என்றிருந்தவனை உசுப்பி விட்டு பயன்படுத்திக்கொண்டது நாயகிதான். அதனால் இக்கதையில் நாயகி மீது பரிதாபம் வரவில்லை; வில்லன்தான் பாவம் என்று தோன்றுகிறது. இப்படி ஒரு எண்ணம் தோன்றும்படி கதாபாத்திரங்களை வடிவமைத்தது இயக்குநரின் தவறு.

எச்சரிக்கை: அடல்ட் கன்டென்ட் உள்ளது (18+).

கல்கி கமெண்ட்: சின்ன படம் என்பதால் ஒரு 'Quick Watch'-ஆக இதை பார்த்துவிடலாம். ஆண்களுக்கு பிடிக்கும் க்ரைம் த்ரில்லர் இது.

ரேட்டிங்: 2.5 / 5

இதையும் படியுங்கள்:
மௌனம் கலைந்த திடுக்கிடும் தருணம்: சினிமா உலகைக் புரட்டிப் போட்ட கதை!
DESEO 2026
இதையும் படியுங்கள்:
என் 1.5 வருஷ உழைப்பு போச்சு..! நான் நடிச்ச காட்சி நீக்கம் - கண்கலங்கிய ‘ஜனநாயகன்’ நடிகை!
DESEO 2026
logo
Kalki Online
kalkionline.com