சிக்மா (2026) - தமிழ் - சினிமா விமர்சனம்!

சந்தீப் கிஷன் நடிப்பில் ஜெய்சன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள சிக்மா படத்தின் முழு திரைவிமர்சனம்
சிக்மா | Sigma move
சிக்மா | Sigma move
Updated on: 
ரேட்டிங்க் (2 / 5)

நாயகனின் அம்மா ஒரு புத்தகப்பைத்தியம். வீடு முழுக்கப் புத்தகங்களாக வாங்கிக் குவித்து வைத்திருக்கிறார். ஒரு லைப்ரரி போல அதை நடத்தி வருகிறார். நாயகனின் அப்பா ஒரு ஊதாரி. ஊர் முழுக்கக் கடனை வாங்கிக் குவித்து இருக்கிறார். மொத்தத்தில் நாயகனுக்கு ரூ. ஒன்றே கால் கோடி கடன் இருக்கிறது. உடனடி பணத்தேவையும் இருக்கிறது.

அம்மா, அப்பா மரணத்துக்குப்பின் நாயகன் தனியாகவே அந்தக் கடனை அடைக்க வேண்டிய நெருக்கடி. நாயகன் சொந்தமாக ஒரு யூ ட்யூப் சேனல் நடத்தி வருகிறான். ஆனால் அதில் பெரிய அளவில் வருமானம் இல்லை.

வில்லன் சொந்தமாக ஒரு தியேட்டர் வைத்திருந்தாலும் சட்டத்துக்குப் புறம்பாக சூதாட்ட கிளப் வைத்திருக்கிறான்.

இன்னொரு வில்லன் போதைப்பொருள் கடத்துபவன். இரண்டு வில்லன்களுக்கும் சொந்தமான 1000 கோடி ரூபாய் பணம் ஒரு இடத்தில் இருக்கிறது. அந்த சாவி எப்படியோ தவறுதலாக நாயகனிடம் வந்து சேர்கிறது. ஒரு பென் டிரைவும் கிடைக்கிறது. அந்த பென் டிரைவில் இருந்த விஷயம் என்ன? அதைத் தனக்கு சாதகமாக நாயகன் எப்படிப் பயன்படுத்திக் கொண்டான்?

இதற்குப்பின் நாயகன், வில்லன்கள் இருவர் தரப்புக்கும் இடையே ஏற்படும் மோதல்கள், துரத்தல்கள் தான் மீதித் திரைக்கதை.

நாயகனாக சந்தீப் கிசன் கச்சிதமாக நடித்திருக்கிறார். நாயகியாக பரீனா அப்துல்லா ரேடியோ ஜாக்கியாக அழகாக வந்து போகிறார். ஆனால் அதிக வாய்ப்பில்லை.

சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷிவ் பண்டிட் என மற்றவர்கள் நடிப்பும் ஓக்கே ரகம் தான்.

இதையும் படியுங்கள்:
கமலா தியேட்டரில் சர்ப்ரைஸ் விசிட்! ‘சிக்மா’ பார்க்க வந்த விஜய்யின் மனைவி சங்கீதா - சாஷா!
சிக்மா | Sigma move

ஒளிப்பதிவு, எடிட்டிங்க் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் ஓக்கே ரகம். படத்தின் ரன்னிங்க் டைம் 145 நிமிடங்கள்.

எஸ். தமனின் பின்னணி இசை ஓரளவாவது படத்தைக் காப்பாற்றுகிறது.

ஜேசன் சஞ்சய் இயக்கி இருக்கிறார். க்ளைமாக்சில் கெஸ்ட் ரோலில் ஒரு சீனில் வரும்போது தியேட்டர் ஆர்ப்பரிக்கிறது.

சபாஷ் டைரக்டர்:

1. ராஜூ சுந்தரம், அன்பு தாசன் வரும் காட்சிகள் ஓரளவு ரசிக்க வைக்கிறது.

2. பெரிய பட்ஜெட்டில் எடுத்த படம் என்பது காட்சிகளில் ரிச்னெஸ் உடன் தெரிகிறது.

3. முதல் பாதியில் கதைக்குள் ஆடியன்சை இழுப்பதில் இயக்குநருக்கு வெற்றி.

4. தமனின் இசை, பின்னணி இசை

லாஜிக் மிஸ்டேக்ஸ்:

1. மங்காத்தா, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பாணிக்கதை தான். ஆனால் அவற்றில் இருந்த சுவராஸ்யம் எதுவும் இதில் இல்லை.

2. சிக்மா படத்தில் அனைத்துக் கேரக்டர்களையும் அறிமுகப்படுத்தவே இடைவேளை வரை டைம் எடுத்துக்கறாங்க. மெயின் கதை இடை வேளைக்குப்பின் தான் தொடங்குகிறது.

சிக்மா | Sigma move
சிக்மா | Sigma move

3. ஹாலிவுட்டில் வந்த பல ஹெய்ஸ்ட் திரில்லர் படங்களில் இருந்து காட்சிகளை உருவி இருக்கிறார்கள். சொந்த சரக்கு கொஞ்சம் கூட இல்லை.

4. நாயகியின் கேரக்டர் டிசைனில் முழுமை இல்லை. இரண்டரை மணி நேரப்படத்தில் ஒரு மணி நேரம் ஆள் அட்ரசே இல்லை.

5. நாயகன் ஒவ்வொரு ஆக்சன் சீக்வன்ஸ் முடிந்ததும் ரத்தக்களறியாக அடிபட்டுக் கிடக்கிறார். ரியலிசமா சொல்றேன்னு நினைத்து ஹீரோயிசத்தில் டேமேஜ் பண்ணி விட்டார்கள்.

6. அறுக்க மாட்டாதவன் கையில் ஆறு அரிவாள் எதுக்கு? என்ற பழமொழி மாதிரி இந்தக் கதையில் எதற்குத் தேவை இல்லாமல் ஒன்பது வில்லன்கள்?

7. சிக்மா படத்தில் எந்தக் கேரக்டருடனும் ஆடியன்சுக்கு எமோஷனல் கனெக்ட்டே இல்லை.

8. சுவராஸ்யமான சம்பவங்களே இல்லை.

9. புத்தக வாசிப்பே குறைந்து விட்ட சூழலில் லைப்ரரி வெச்சு வாழ்க்கை நடத்துவது எப்படி?

10. வில்லன் கேரக்டர் டிசைன் வலுவாக இருந்தால் தான் ஹீரோ எப்படி வில்லனை ஜெயிக்கப்போகிறார்? என்ற ஆவல் பிறக்கும். வில்லனே டம்மி எனில் எங்கே சுவராஸ்யம் வரும்?.

11. முதல் அரை மணி நேரத்தில் முழுக்கதையும் தெரிந்து விடுகிறது. எதிர்பார்ப்பு, பரபரப்பு, யூகிக்க முடியாத காட்சிகள், ட்விஸ்ட் அண்ட்ஸ் டர்ன்ஸ் எதுவும் இல்லை.

12. காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை.

ரசித்த வசனங்கள்:

1. நிலம், நீர், காற்று, முக்கியமா பணம் எல்லாத்துக்கும் மதிப்பு நாளுக்கு நாள் ஏறிக்கிட்டுதான் போகுது. ஆனா நாம யார் என்பதற்கோ, நம் உறவுகளுக்கோ எந்த மதிப்பும் இல்லை.

2. இன்னைக்கு நீ உயிரோட இருக்கியேன்னு சந்தோஷப்படு. ஏதாவது ஆகி இருந்தா?

3. ஏதாவது பிராடு வேலை பண்ணப்போறீங்களா? பயமா இருக்கு, சொல்லிடுப்பா.

4. இந்த சூதும், போதையும் ஒரு காய்னோட இரண்டு பக்கங்கள். இந்த ரெண்டையும் கலந்து விட்டு கோடி கோடியா சம்பாதிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
'வரதன்' பட ரீமேக்கா அசோக் செல்வனின் புதிய படம் 'அன்பில் அவன்'? தம்பதியின் போராட்டமும் த்ரில்லரும்!
சிக்மா | Sigma move

5. ஆடியன்சுக்கு என்ன தேவையோ அதைப்பண்ணு..

6. அவர் பசிக்காக வேட்டையாட ஆரம்பிச்சார். மொத்தக்காடே அவர் கண்ட்ரோலில் தான் இருந்தது.

7. ஒரு படைப்பை உருவாக்குவது எவ்ளோ முக்கியமோ அதை விட முக்கியம் அதைப் பாதுகாப்பது... நான் கொஞ்சம் கொஞ்சமா அதை உருவாக்கிட்டேன். இனிமே நீ தான் அதைப் பார்த்துக்கனும்.

8. நான் நிறைய தோத்திருக்கேன். ஆனா ஏமாந்து விட்டதில்லை.

9. கொஞ்சூண்டு டோப்பு, கொஞ்சிப்பேச ஒரு கீப்பு போதும் எனக்கு.

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+ வன்முறை அதிகம்.

கல்கி கமெண்ட் - மிக மிக சுமாரான கதை. சுவராஸ்யமே இல்லாத திரைக்கதை. விஜய் ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com