0,00 INR

No products in the cart.

காக்கி உடையில் தக்காளி திருட்டு : வெளியானது சிசிடிவி காட்சிகள்

– காயத்ரி.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இதனால் தற்போது கையிருப்பில் உள்ள தக்காளியை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மிக பாதுகாப்புடன் கவனித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் சிக்கபல்லபுரா மாவட்டம், சிந்தாமனி தாலுக்காவில் காக்கி உடையில் வரும் இருவர் தக்காளியை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
சிந்தாமனி தாலுக்காவில் உள்ள வேளாண் விலை பொருள் மார்கெட்டில் விடியற்காலை விற்பனைக்காக தக்காளிகள் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டு அதன் மேல் தார்போய் கொண்டு வியாபாரிகள் மூடி வைத்து உள்ளனர். அந்த தக்காளியை விடியற்காலை 3 மணி அளவில் வந்த இரண்டு நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
காக்கி உடை அணிந்து வந்த 2 நபர்கள் பெட்டிகளில் உள்ள தக்காளியை திருடி பைகளில் கொண்டு செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகளை தற்போது மார்கெட் குழு சார்பில் வெளியிட்டு உள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

தமிழில் அனிமல் த்ரில்லர்: ‘கெஸ்ட் – சாப்டர் 2’

0
-லதானந்த் குட் ஹோப் பிக்சர்ஸ் சார்பில் D.கோகுலகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெஸ்ட் – சாப்டர் 2’. ரங்கா புவனேஷ்வர் படத்தை இயக்கியிருக்கிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான  ‘ஆறாவது வனம்’ என்கிற...

நடிகையின் கலெக்டர் ஆகும் கனவு!

0
-ராகவ் குமார்  நடிகைகளில் மனிஷா பிரியதர்ஷினி வித்தியாசமானவர். களவாணி படத்தில் விமலுக்கு தங்கையாக சுட்டி பெண்ணாக அறிமுகம் ஆனவர் இப்போது சில படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.     மனிஷாவின் தாய்க்கு தன் மகள்...

தாய்லாந்தில் ஹனிமூன்!

0
புதுமண ஜோடிகளான  நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும்  இப்போது தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாடி வருகின்றனர். இவர்களது ஹனிமூன் புகைப்படங்கள் இணையத்தில் இப்போது வைரலாகியுள்ளது. நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த  7 ஆண்டுகளாக காதலித்து...

O2  படத்தின் ஒளிப்பதிவில் சாதனை!

0
-லதானந்த் சவாலான கதைக் களத்தை சாமர்த்தியமாகப் படமாக்கியிருக்கிறார்  ’O2’ படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்! வெங்கட் பிரபுவின் ’மன்மதலீலை’ படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் 18 நாட்களில் முடித்து, கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்திய ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்,...

ஆஹா யோகா : காலட்சேபம் கேளுங்க!

0
- ஆர்.மீன லதா, மும்பை. ஐ.நா சபை அறிவிப்பின்படி, ஒவ்வொரு வருடமும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக 2015-ம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப் படுகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் பிரமாண்டமாக யோகா நிகழ்ச்சிகள்...