

கொண்டைக்கடலை சட்னி
தேவை:
கறுப்பு கொண்டைக்கடலை - 1/2 கப் (ஊறவைத்தது)
தேங்காய் துருவல் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2-3
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - அரைப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
ஊறவைத்த கொண்டைக்கடலையை வேகவைத்து கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் வேகவைத்த கொண்டைக்கடலை, தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, புளி மற்றும் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும். சுவையான, சத்தான கொண்டைக்கடலை சட்னி தயார்.
கொண்டைக்கடலை சாதம்
தேவை:
பச்சரிசி - 2 கப்,
சிறிய கருப்பு கொண்டைக் கடலை - அரை கப்,
தேங்காய்ப் பால் - 2 கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 3, இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன், தனியாத் தூள் - 1 டீஸ்பூன், எண்ணெய், நெய் - தலா 1 டேபிள் ஸ்பூன், பிரிஞ்சி இலை - 2, உப்பு தேவைக்கு.
செய்முறை:
கடலையை முதல் நாளே ஊறவைத்து மறுநாள் வேகவைத்து எடுத்து வையுங்கள். வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்குங்கள்.
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யை காயவைத்து, பிரிஞ்சி இலையை தாளியுங்கள். பிறகு வெங்காயம், தக்காளியை வதக்கி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியாத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். பிறகு தேங்காய்ப் பால், இரண்டு கப் தண்ணீர், தேவையான உப்பு, வேக வைத்த கடலை, அரிசி ஆகியவற்றைச் சேர்த்து மூடி வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி, மேலும் இரண்டு நிமிடங்கள் வைத்திருந்து இறக்குங்கள். சுவையான கொண்டைக்கடலை சாதம் ரெடி.
கொண்டைக்கடலை வடை
தேவை:
கறுப்பு கொண்டைக்கடலை - ஒரு கப்,
இஞ்சி - சிறிய துண்டு,
சோம்பு - அரை டீஸ்பூன்,
மிளகு - கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 3,
புதினா - சிறிதளவு,
கடலைமாவு - 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைக்கவும். நன்றாக ஊறியதும் அதனுடன் தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு, மிளகு, புதினா, கடலை மாவு உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால், சுவையான கொண்டைக்கடலை வடை தயார்.
கொண்டைக்கடலை கட்லெட்
தேவை:
வெங்காயம் - 1
பூண்டு பல் - 4
சீரகம் - 1/2 ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பூண்டு மற்றும் வெங்காயம் ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்க வேண்டும். பின் கொண்டைக்கடலையை 8 மணி நேரம் நீரில் ஊறவைத்து, அதனை நன்றாக கழுவி மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும்.
அடுத்து ஒரு கிண்ணத்தில் அரைத்த கொண்டைக் கடலையை போட்டு அதனுடன், பூண்டு, வெங்காயம், மல்லி தூள், பேக்கிங் சோடா, எலுமிச்சைச்சாறு, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிசைய வேண்டும். பின் அதனை கட்லெட் போல நன்றாக செய்து ஒரு தட்டில் வைக்கவேண்டும். இறுதியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, செய்து வைத்த கட்லெட்டுகளை போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி, வெந்த பின் திருப்பி போட்டு எடுத்தால் கொண்டைக்கடலை கட்லெட் ரெடி.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here