கல்யாண வீட்டுச் சுவையில் கதம்ப சாம்பார் செய்வது எப்படி? எளிய ரெசிபி!

கல்யாண வீடுகளில் பரிமாறப்படும் அதே மணத்துடன், வீட்டில் இருக்கும் பல காய்கறிகளைச் சேர்த்துச் சுவையான கதம்ப சாம்பார் செய்வதற்கான எளிய ரெசிபி இதோ.
கதம்ப சாம்பார் kadamba sambar recipe in tamil
கதம்ப சாம்பார் kadamba sambar recipe in tamilChatGPT Image
கிரி கணபதி

கிரி கணபதி, 8 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட எழுத்தாளர். Quora போன்ற தளங்களில் எழுதிய அனுபவம் உண்டு.. வீடியோ, பாட்காஸ்ட் வெளியிட்ட அனுபவமும், AI கருவிகளை கையாளும் திறனும் கொண்டவர். ஆரோக்கியம், தன்னம்பிக்கை, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வுப்பூர்வமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

கல்யாண வீடுகளுக்குச் சென்றால் அங்குப் பரிமாறப்படும் உணவுகளில் முதலில் நம் கவனத்தை ஈர்ப்பது மணக்கும் சாம்பார்தான். அதிலும் பல காய்கறிகள் சேர்த்துக் கொதிக்கும் அந்த கதம்ப சாம்பார் வாசனையே தனியாக இருக்கும். 

வீட்டில் தினமும் ஒரே மாதிரி சாம்பார் வைத்து போரடித்தவர்களுக்கு, விசேஷ நாட்களில் செய்வது போல ஒரு கலவையான காய்கறிகள் போட்ட சாம்பார் நிச்சயம் புது சுவையைக் கொடுக்கும். இதை வீட்டில் இருக்கும் மசாலாப் பொருட்களைக் கொண்டே எளிதாகச் செய்துவிடலாம்.

தேவையான பொருட்கள்

  • துவரம் பருப்பு - 1 கப்

  • புளி - நெல்லிக்காய் அளவு

  • கத்தரிக்காய், கேரட், பீன்ஸ், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு - தலா 1 கைப்பிடி

  • சின்ன வெங்காயம் - 15 

  • தக்காளி - 2 

  • மஞ்சள்

  • தூள் - 1/4 ஸ்பூன்

  • சாம்பார் தூள் - 2 ஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

  • கொத்தமல்லி இலை - சிறிதளவு

தாளிக்கத் தேவையானவை:

  • சமையல் எண்ணெய் - 2 ஸ்பூன்

  • கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1/2 ஸ்பூன்

  • சீரகம் - 1/2 ஸ்பூன்

  • காய்ந்த மிளகாய் - 2

  • பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

  • கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை:

முதலில் துவரம் பருப்பை நன்றாகக் கழுவி, குக்கரில் சேர்த்து அதனுடன் சிறிது மஞ்சள் தூள், ஒரு தக்காளி மற்றும் போதுமான தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும். வெந்த பருப்பை நன்கு மசித்துத் தனியாக எடுத்து வைக்கவும்.

அடுத்ததாக, புளியைத் தண்ணீரில் சுமார் பதினைந்து நிமிடங்கள் ஊறவைத்து, கெட்டியான கரைசலாகக் கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
கல்யாண வீட்டுப் பருப்பு உசிலி… பாட்டி முறையில் கட்டி தட்டாமல் உதிர உதிரச் செய்வது எப்படி?
கதம்ப சாம்பார் kadamba sambar recipe in tamil
இதையும் படியுங்கள்:
கல்யாண பந்தி சுவையில் கமகமக்கும் புளிக்காய்ச்சல்… எண்ணெய் பிரிய இந்த 4 டிப்ஸ் பாருங்க! 
கதம்ப சாம்பார் kadamba sambar recipe in tamil

பின்னர், ஒரு அகன்ற பாத்திரத்தில் அல்லது மண்சட்டியில் நறுக்கி வைத்துள்ள எல்லா காய்கறிகளையும் சேர்க்கவும். காய்கறிகளுடன் சிறிது மாங்காய் துண்டுகளைச் சேர்த்தால், புளிப்புச் சுவை கூடி சாம்பார் இன்னும் ருசியாக இருக்கும். அதனுடன் மீதமுள்ள தக்காளி, சின்ன வெங்காயம், உப்பு மற்றும் சாம்பார் தூள் சேர்த்து, காய்கறிகள் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.

சாம்பார் தூளுக்குப் பதிலாக, காய்ந்த மிளகாய், கொத்தமல்லி விதை, கடலைப்பருப்பு, வெந்தயம் மற்றும் சீரகம் ஆகியவற்றை வறுத்து அரைத்துப் பயன்படுத்தினால் சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும்.

காய்கறிகள் முக்கால் பதம் வெந்தவுடன், வடிகட்டி வைத்துள்ள புளிக் கரைசலை ஊற்றிக் கொதிக்கவிடவும். புளியின் பச்சை வாசனை போன பிறகு, மசித்து வைத்துள்ள துவரம் பருப்பைச் சேர்த்துக் கலக்கவும். சாம்பார் கெட்டியாக இருந்தால் சிறிது சுடுநீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.

இதையும் படியுங்கள்:
கல்யாண பந்தி சுவையில் அவியல் செய்யணுமா? இந்த ரகசிய ரெசிபியை ட்ரை பண்ணுங்க!
கதம்ப சாம்பார் kadamba sambar recipe in tamil
இதையும் படியுங்கள்:
இட்லிக்கு ஏற்ற அட்டகாசமான சென்னை சாம்பார்... சுவைக்கு இதுதான் முக்கிய காரணம்!
கதம்ப சாம்பார் kadamba sambar recipe in tamil

இப்போது, ஒரு சிறிய வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்க்கவும். கடுகு வெடித்ததும் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி, கொதிக்கும் சாம்பாரில் கொட்டி இறக்கவும்.

எல்லாம் சரியாக செய்த பின்னர் இறுதியில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவினால், கல்யாண வீடுகளில் பரிமாறப்படும் அதே மணத்துடன் கதம்ப சாம்பார் தயார்.

இனி உங்கள் வீட்டின் மதிய உணவு நேரத்தில் இந்த மணக்கும் சாம்பாருடன் சூடான சாதத்தைப் பரிமாறி அசத்துங்கள். இந்த அட்டகாசமான ரெசிபியை செய்து பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.