நீங்கள் உடற்பயிற்சி கூடத்துக்குச் செல்பவரா? இதையெல்லாம் அவசியம் கவனத்தில் கொள்ளுங்கள்!

Things to keep in mind for gym goers
Things to keep in mind for gym goers
Published on

ன்றைய வாழ்வியலில் வீட்டில் இருக்கும் அனைவருக்குமே உடற்பயிற்சி என்பது மிக மிக அத்தியாவசியமாக ஆகிவிட்டது. ஜிம்முக்கு செல்ல வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால், முறையாக உடற்பயிற்சிக்கூட விதிமுறைகளை கடைபிடிக்காமல் உடல் வலி ஏற்பட்டு ஓரிரு நாட்களிலேயே, ‘இதெல்லாம் நமக்கு சரியாக வராது’ என்று ஜிம்முக்கு செல்வதையே பலரும் நிறுத்தி விடுகிறார்கள். அப்படியில்லாமல், ஜிம்முக்கு செல்பவர்கள் சில விஷயங்களை தினமும் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும். அதில் சிலவற்றை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

முதல் முறையாக ஜிம்முக்கு செல்லும்போது சுய பரிசோதனையாக ஃபிட்னஸ் டெஸ்ட் எடுக்க வேண்டும். உடலின் நெகிழ்வுத்தன்மை, உடல் வலிமை, கார்டியோ உடற்பயிற்சிகளை செய்யும் திறன், உடலின் சமநிலைத் தன்மை, பி.எம்.ஐ. மதிப்பு ஆகியவற்றை பரிசோதித்து தெரிந்து கொண்டு அதன்பிறகு, தங்களது உடலமைப்புக்கு ஏற்றவாறு உடற்பயிற்சியை தொடங்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வண்ணங்களின் குணங்கள்!
Things to keep in mind for gym goers

ஜிம்முக்கு செல்லும்போது அணிந்திருக்கும் உடைகள் இறுக்கமாக இல்லாமல் தளர்வானதாக இருக்க வேண்டும். அதற்கு டி-ஷர்ட், டிராக் பேன்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ போன்றவற்றை அணிந்து செல்வது அவசியமாகும்.

உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன்பு 5 நிமிடங்கள் வார்ம்-அப் பயிற்சிகள் அவசியம் செய்ய வேண்டும். பின்னர் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை செய்ய வேண்டும். அப்போதுதான் உடற்பயிற்சி செய்வதற்கு உடலில் உள்ள தசைகள் ஒத்துழைக்கும். தசைப்பிடிப்பு உள்ளிட்ட கோளாறுகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அதிகமாக கார்டியோ பயிற்சிகளை செய்வதால் உடல் எடை குறையும். ஆனால், உடல் ஃபிட்டாக இருக்காது. எனவே, ஒரு மணி நேர உடற்பயிற்சியில் 40 நிமிடம் கார்டியோ பயிற்சிகளையும், 20 நிமிடம் வலுவூட்டும் பயிற்சிகளையும் செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
எண்ணெய் பலகாரம் செய்யும்போது அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!
Things to keep in mind for gym goers

உடற்பயிற்சியின்போது இடையில் தண்ணீர் குடிக்கக் கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். அது தவறானது. நாக்கு உலரும் போதெல்லாம் சிறிதளவு தண்ணீர் பருகலாம். பின்னர், உடற்பயிற்சி முடிந்தவுடன் 15 நிமிடங்கள் கழித்து தேவையான அளவு தண்ணீர் குடிக்கலாம்.

வாரத்தில் ஒரு நாள் அவசியம் உடற்பயிற்சிக்கு ஓய்வு கொடுப்பது உடலுக்கு நலம் தரும். இப்படி தசைகளுக்கு ஓய்வு கொடுத்தால் மட்டுமே அடுத்த வாரம் முறையாக உடற்பயிற்சி செய்ய இயலும். உடற்பயிற்சிகள் அனைத்தையும் முடித்தவுடன் தசைகளின் இறுக்கத்தை தளர்த்தும் வண்ணம் சில ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை செய்ய வேண்டும். 3 முதல் 5 நிமிடங்கள் வரை செய்யும் இந்தப் பயிற்சியை உடற்பயிற்சியாளர் கண்காணிப்பில் செய்ய வேண்டியது அவசியமாகும். இப்படி சில விதிமுறைகளைக் கடைப்பிடித்தால், தினசரி உடற்பயிற்சிகள் அனைவருக்கும் சாத்தியமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com