உங்கள் குழந்தை எப்போதும் போனும் கையுமாக இருக்கிறாரா? இதை உடனடியாக செய்யுங்கள்!

மொபைலை பிடுங்காமல், குழந்தைகளின் போக்கிலேயே சென்று நற்பழக்கங்களை உருவாக்கும் உளவியல் ரகசியங்கள்.
மொபைல் பழக்கம் - child smartphone addiction
மொபைல் பழக்கம் - child smartphone addiction
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on: 

தற்போது வயிற்றுக்கு உணவு இருக்கிறதோ இல்லையோ கைகளில் மொபைல் இல்லை என்றால் அவ்வளவுதான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கைகளில் இருக்கும் மொபைலில் மூழ்கி தங்கள் பொன்னான நேரங்களை தொலைத்துக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக சிறு குழந்தைகள் கூட மொபைலைக் காண்பித்தால்தான் சாப்பிடவும் செய்கிறார்கள். இது தற்போது அனைவராலும் சரி என ஏற்றுக்கொள்ள பட்டுள்ளது வேதனை. இதை சரி செய்ய வேண்டிய பொறுப்பும் நம்மிடமே உள்ளது.

மொபைலை முழுமையாக தடை செய்வதைவிட, குழந்தைகளின் போக்கிலேயே (மொபைல் பழக்கம்) சென்று அவர்களுக்கு சரியான பழக்கத்தை உருவாக்குவது நீண்ட காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

சரி குழந்தைகளின் மொபைல் நேரத்தை குறைக்க பெற்றோர் செய்ய வேண்டிய 7 காரியங்கள் என்னவென்று தெரியுமா?

1. வீட்டில் தெளிவான மொபைல் நேரம் நிர்ணயிப்பது அவசியம். காலை எழுந்தவுடன், சாப்பிடும் நேரம், படிக்கும் நேரம், தூங்குவதற்கு முன் போன்ற நேரங்களில் மொபைல் வேண்டாம் என்று குடும்ப விதியை அமைக்கலாம்.

2.பெற்றோர்களும் அதையே பின்பற்ற வேண்டியது மிகவும் முக்கியம். குழந்தையிடம் மொபைல் பார்க்காதே என்று சொல்லிவிட்டு, பெற்றோர் அவர்கள் எதிரிலேயே தொடர்ந்து மொபைல் பயன்படுத்தினால் குழந்தை அதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ளாது. பெற்றோரின் செயலை கண்காணிக்கும்.

3. மொபைலுக்குப் பதிலாக மாற்று வழிமுறைகளில் ஈடுபடுத்தலாம். விளையாட்டு, ஓவியம், புத்தகம் படித்தல், புதிர்கள், இசை, தோட்ட வேலை, குடும்பத்துடன் பேசுதல் போன்ற செயல்களை அவர்களுக்கு அறிமுகப் படுத்துங்கள்.

மொபைல் பழக்கம் - child smartphone addiction
மொபைல் பழக்கம் - child smartphone addiction

4. சாப்பிடும்போது மொபைல் வேண்டாம் என்பதை உறுதியாகக் கூறுங்கள். குறிப்பாக நீங்கள் முதலில் மொபைலை வைத்து உணவு ஊட்டும் பழக்கத்தை படிப்படியாக குறைக்கவும். குடும்பத்துடன் பேசிக் கொண்டே சாப்பிடும் பழக்கத்தை உருவாக்குவது நல்லது.

5. படுக்கையறையில் மொபைலை வைப்பது தவிர்க்க வேண்டும். தூங்குவதற்கு முன் மொபைல் பயன் படுத்துவதை தவிர்க்க இரவில் குழந்தையின் படுக்கைக்கு அருகில் போனை வைக்காமல் இருப்பது உதவும்.

6. ஒரு நாளில் பல மணி நேரம் மொபைல் பயன்படுத்தும் குழந்தையிடம் உடனடியாக “இனி மொபைல் இல்லை” என்று திடீரென பறித்துக் கொள்வது எதிர்ப்பை ஏற்படுத்தலாம். எனவே தினசரி நேரத்தை படிப்படியாகக் குறைத்து, முன்கூட்டியே குழந்தைக்கு தெரிவிக்கலாம். படிப்படியாக குறைக்கவும்.

7. இது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. மொபைல் இல்லாத குடும்ப நேரத்தை உருவாக்க வேண்டும். தினமும் குறைந்தது ஒரு குறிப்பிட்ட நேரத்தை மொபைல் இல்லாத குடும்ப நேரமாக (No Phone Family Time) ஆக வைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்துடன் விளையாடும் விளையாட்டு, நடைப்பயிற்சி, கதை பேசுதல் போன்றவற்றில் பெற்றோரும் குழந்தையும் சேர்ந்து ஈடுபடுங்கள்.

அடுத்து குழந்தை மொபைலை அதிகம் பயன்படுத்து வதற்கான காரணத்தையும் கவனியுங்கள். சலிப்பு, தனிமை, மன அழுத்தம் அல்லது பெற்றோரின் கவனத்தைப் பெற முடியாமை போன்ற காரணங்கள் இருந்தால், நேரத்தை மட்டும் குறைப்பதைவிட அந்தக் காரணத்தை அறிந்து அதையும் சரிசெய்வது சிறந்தது.

மேலும் மொபைலைத் தவிர்க்கும் விதமாக குழந்தைகளும் பெற்றோரும் எளிதாகப் பின்பற்றும் வகையில் இந்த குடும்ப மொபைல் விதிகளை குழந்தைகள் கண்களில் படுவது போல் எழுதி வைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
பள்ளிக்குச் செல்ல குழந்தைக்கு பயமா? மௌனமாகத் தாக்கும் ‘புல்லிங்’ ஆபத்து: தப்பிப்பது எப்படி?
மொபைல் பழக்கம் - child smartphone addiction

1.சாப்பிடும்போது மொபைல் வேண்டாம்.

2. குடும்பத்துடன் பேசிக்கொண்டே சாப்பிடுவோம்.

3. படிக்கும் நேரத்தில் மொபைல் வேண்டாம்.

4. படிப்பு மற்றும் வீட்டுப்பாடம் முடிந்த பிறகு மட்டுமே பயன்படுத்துவோம்.

5. தூங்குவதற்கு முன் மொபைல் வேண்டாம்.

6. தூங்குவதற்கு குறைந்தது 1 மணி நேரத்திற்கு முன் மொபைலை ஒதுக்கி வைப்போம்.

7.படுக்கையறைக்கு மொபைல் கொண்டு செல்ல வேண்டாம்.

8.இரவில் மொபைலை ஒரு பொதுவான இடத்தில் வைப்போம்.

9. மொபைல் நேரத்தை முன்கூட்டியே முடிவு செய்வோம்.

10.நேரம் முடிந்ததும் கோபப்படாமல் மொபைலை ஒதுக்கி வைப்போம்.

11.வயதுக்கு ஏற்ற வீடியோக்கள் மற்றும் விளையாட்டுகளை மட்டுமே பயன்படுத்துவோம்.

12. தெரியாத நபர்களுடன் ஆன்லைனில் பேச மாட்டோம்.

13. தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிரமாட்டோம்.

14. பெயர், முகவரி, பள்ளி, தொலைபேசி எண், புகைப்படம் போன்றவற்றை அனுமதியின்றி பகிரக்கூடாது.

15. மொபைல் பயன்படுத்தும்போது பெற்றோரிடம் மறைக்க வேண்டிய அவசியமில்லை.

16. சந்தேகமான செய்தி அல்லது வீடியோ வந்தால் உடனே பெற்றோரிடம் சொல்வோம்.

இதையும் படியுங்கள்:
வெறும் படிப்பு மட்டும் போதாது! பிள்ளைகளை வெற்றியாளராக்கும் அந்த 7 ரகசியங்கள்!
மொபைல் பழக்கம் - child smartphone addiction

இந்த விதிகள் குழந்தைகளுக்கு எச்சரிக்கை தருவதாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் “மொபைலை நாம் பயன்படுத்துவோம்;

மொபைல் நம்மை பயன்படுத்த விடமாட்டோம்" எனும் தெளிவு குழந்தைகளிடம் இருந்தாலே மொபைலுக்கு அடிமையாவதை தவிர்க்கலாம்.

இந்த வழிகாட்டியைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் குழந்தைகள் மொபைல் திரையில் இருந்து விடுபட்டு, குடும்பத்துடனும் இயற்கையுடனும் மீண்டும் பிணைப்பை ஏற்படுத்துவார்கள். இதன் விளைவாக அவர்களின் கவனம், கற்றல் திறன் மற்றும் மன ஆரோக்கியம் கணிசமாக மேம்படும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுக்கு வீட்டுக் கல்வி (home schooling) ஓகேவா?
மொபைல் பழக்கம் - child smartphone addiction
logo
Kalki Online
kalkionline.com