உடலில் என்றும் இளமையை தக்கவைத்துக்கொள்ள சில எளிய ஆலோசனைகள்!

Ways to stay young forever
Woman with skin wrinkles
Published on

ன்றென்றும் இளமையாக இருக்க எல்லோருக்கும் ஆசைதான். அதைக் கருத்தில் கொண்டு அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வுகளில் கண்டறிந்து வெளியிட்ட இளமைக்கான ஆலோசனைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* தண்ணீர் அதிகமாகக் குடியுங்கள். உடலில் நீர் அளவு குறைந்தால் சருமத்தில் சுருக்கங்கள் விழும்.

* ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். உணவில் கலோரி குறைந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள். செரிமானத்துக்கு உணவிலுள்ள நார்ச்சத்து அவசியம். எனவே, நார்ச்சத்து நிறைந்த பதார்த்த வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

* எண்ணெய்களில் வறுத்த உணவுகளை முடிந்த மட்டும் தவிருங்கள். உப்பும், சர்க்கரையும் மிகவும் குறைவாக சாப்பிடுங்கள்.

இதையும் படியுங்கள்:
மூளைக்கு மட்டுமல்ல; உடல் தசைகளுக்கும் ஞாபக சக்தி உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?
Ways to stay young forever

* வாரம் ஒருமுறை அசைவ உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். அசைவ உணவுகளை நன்றாக வேக வைத்ததை மட்டுமே சாப்பிட வேண்டும்.

* வேகவைத்த காய்கறி சாலட்களை சிற்றுண்டி போல் அவ்வப்போது சாப்பிடுவது நல்லது.

* ஒரு நாளைக்கு மூன்று முறை மொத்தமாக சாப்பிடுவதை விட, நான்கைந்து வேளைகள் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவது ஆரோக்கியம்.

* உண்ணும் உணவுகளில் இருந்து உடம்பிற்குத் தேவையான வைட்டமின்கள் கிடைக்க வேண்டும். ஆகவே, வைட்டமின் சத்து அதிகம் உள்ள பால், முட்டை, மீன் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* சாப்பாட்டிற்கு அடுத்தபடியாக உடற்பயிற்சி அவசியம். நடப்பது, நீந்துவது, டென்னிஸ் விளையாடுவது என்று ஏதாவது ஒன்றை தினமும் செய்து வர வேண்டும்.

* ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
அலுவலக வேலை பளு எரிச்சலை சமாளிக்க சில பயனுள்ள ஆலோசனைகள்!
Ways to stay young forever

* நிறைய தூங்குங்கள். மதிய நேரத்தில் சாப்பிட்ட பிறகு குட்டி தூக்கம் போடுங்கள். அது உடலுக்கு உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் தரும்.

* எடையை அதிகரிக்க விடாமல், குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும்.

* எடையை குறைக்க விரும்பும்போது, மிதமான பத்தியமிருக்க வேண்டும். அதிகளவில் பத்தியம் இருந்தால் ஆபத்தான பின்விளைவுகள் ஏற்படும்.

* புகை பிடிக்கும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். புகை பிடிக்கும் பழக்கம் காரணமாக முகத்தில் சரும சுருக்கம் ஏற்படும். அதிக அளவில் மது அருந்தும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.

* வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் எதிர்கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
மன உளைச்சல் தரும் மனிதர்களை சமாளிக்க உதவும் 5 மந்திரங்கள்!
Ways to stay young forever

* உங்கள் பிரச்னைகளை ஓரமாக வைத்துவிட்டு மகிழ்ச்சியாக இருக்க முயற்சியுங்கள்.

* அடிக்கடி மனம் விட்டு சிரிக்க முயற்சி செய்யுங்கள்.

* வீட்டில் செல்ல பிராணிகளை வளர்த்து நேரம் கிடைக்கும்போது அவற்றை சிறிது நேரம் கொஞ்சி மகிழுங்கள்.

* எழுதுவது, படம் வரைவது, இசைக்கருவிகள் மீட்டுதல் என்று ஏதாவது ஒரு ஹாபியை வளர்த்துக் கொள்ளுங்கள்.

* ஆண்கள் மற்றும் பெண்கள் மேக் அப் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கெமிக்கல் கலந்த பொருட்களை தவிருங்கள்! தலைக்கு பெராக்சைடு கலக்காத சாயங்களைப் பூசுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com