ஆளுமை திறனுக்கான 8 சீக்ரெட் கீஸ்(keys)! உங்களிடம் இருப்பது எத்தனை? Check list இதோ...

a men's Personality
a men's Personality
Published on

நீங்கள் உங்களின் வாழ்வில் அடுத்தவர்களோடு உரையாடும் போது என்ன சொல்கிறீர்கள், எப்படி சொல்கிறீர்கள் என்பது மிக மிக அவசியம். ஒரு அலுவலகத்திலோ அல்லது பொது இடத்திலோ நீங்கள் பேசுவதை பொறுத்து தான் உங்களின் ஆளுமையை பற்றி அடுத்தவர்கள் உணர முடியும்.

எந்த இடமாக இருந்திலும் சரி, நாம் பயன்படுத்தக் கூடிய சில சொற்றொடர்கள் தான் நமது உள் வலிமையையும் நம்பிக்கையையும் பிரதிபலிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நாம் சொல்லக் கூடிய இந்த சொற்றொடர்களால் நாம் தொடர்பு கொள்ளும் நபர்களின் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்த‌ வேண்டும். நாம் பயப்படாமல் நம்பிக்கையோடு ஒரு சில வார்த்தைகளை சொன்னால் தான் நம்மை பற்றி உயர்வான எண்ணமும் ஆளுமை (Personality) திறமையும் வெளிப்படும். ஆளுமை செய்யும் திறன் எல்லோருக்கும் இருக்காது. அதற்கென சில குறிப்பிட்ட திறமையும் செயல்படுத்தக் கூடிய தைரியமும் வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியமானது பேச்சுத் திறமை.

இந்த சிறந்த ஆளுமை (Personality) திறனை கொண்டவர்கள் தங்களுடைய அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் 8 முக்கியமான சொற்றொடர்களை இப் பதிவில் பார்க்கலாம்.

1) "நான் நம்புகிறேன்...":

வலுவான ஆளுமைகள் பெரும்பாலும் ஒருவரின் தன்னம்பிக்கையால் தான் உருவாகின்றனர். மேலும் இந்த வாக்கியமானது அவர்களின் ஆளுமையின் திறனை எடுத்து காட்டுகிறது.

இதையும் படியுங்கள்:
அடிக்கடி கவன சிதறல் ஏற்படுகிறதா? இது நல்லதில்லையே!
a men's Personality

வலுவான ஆளுமைகளைக் கொண்டவர்கள் தாங்கள் நம்புவதை மற்றவர்களிடம் வெளிப்படுத்தத் தயங்குவதில்லை. அவர்கள் தங்கள் கருத்துக்களை திணிப்பதாகவோ அல்லது மிகைப்படுத்துவதாகவோ கருதாமல் உறுதியுடன் முன்வைக்கிறார்கள். இந்த சொற்றொடர் குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் அவர்களின் நிலைப்பாட்டை உறுதி படுத்துகிறது.

மேலும், "நான் நம்புகிறேன்..." என்று சொல்லும் போது அவர்கள் தங்களிடம் உள்ள விஷயத்தைப் பற்றி சிந்தித்து, அதைப் பற்றி ஒரு சிறந்த கருத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்று தெளிவாக புரிகிறது.

இதையும் படியுங்கள்:
தோல்வியை வெற்றியாக மாற்ற இவர்கள் செய்த 'வித்தியாசமான' விஷயம் இதுதான்!
a men's Personality

2) "வேண்டாம், நன்றி":

எப்போது வேண்டாம் என்று சொல்ல வேண்டும் என்பதை அறிவதுதான் வலுவான ஆளுமைக்கு மிக முக்கியமான ஒன்றாகும். வலுவான ஆளுமை (Personality) திறனை கொண்டவர்கள் தங்கள் நேரத்தையும் தனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தையும் மற்றும் அதை மதிப்பதன் முக்கியத்துவத்தையும் நன்றாக புரிந்துகொள்வதால், தேவைப்படும்போது வேண்டாம் என்று சொல்ல அவர்கள் பயப்படுவதில்லை. ஆனால் அதை அவர்கள் கண்ணியமாகவும் மரியாதையுடனும் வெளிபடுத்துகிறார்கள் என்பதை இந்த "வேண்டாம், நன்றி" என்ற சொற்கள் குறிக்கின்றன.

3) "ஒரு தீர்வைக் காண்போம்":

வலுவான ஆளுமை கொண்டவர்கள் பெரும்பாலும் மனதளவில் பிரச்னைகளைத் தீர்ப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவதில்லை; மாறாக, தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். அதனால்தான், "ஒரு தீர்வைக் காண்போம்" என்று அவர்கள் சொல்வதை அடிக்கடி கேட்டிருக்கலாம்.

இந்த சொற்றொடரானது அவர்களின் முன்னெச்சரிக்கை மற்றும் நேர்மறையான அணுகுமுறையை எடுத்துக்காட்டுகிறது. இது ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது மற்றும் மற்றவர்களை ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபட அழைக்கிறது.

எனவே, ஒரு வலுவான ஆளுமை கொண்ட ஒருவர், "ஒரு தீர்வைக் காண்போம்" என்று கூறும்போது, அவர்கள் கையில் உள்ள பிரச்னையை மட்டும் நிவர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நுட்பமாக தங்கள் தலைமைத்துவ திறன்களை நிறுவி, நேர்மறையான மற்றும் உற்பத்தி சூழலையும் வளர்க்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
உங்கள் தன்னம்பிக்கையை உயர்த்தும் 5 இரகசியங்கள்!
a men's Personality

4) "உங்கள் முயற்சியை நான் பாராட்டுகிறேன்":

வலுவான ஆளுமை கொண்டவர்கள் பாராட்டுதலின் உன்னதத்தை புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தங்கள் நன்றியைத் தெரிவித்து, "உங்கள் முயற்சியை நான் பாராட்டுகிறேன்" என்கிற சொற்களை அவ்வப்போது பயன்படுத்தி மற்றவர்களின் முயற்சிகளை அங்கீகரிக்கிறார்கள். இது அவர்களின் நன்றியுணர்வை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் மன உறுதியையும் ஊக்கத்தையும் அதிகரிக்க உதவுகிறது.

5) "நீங்கள் எங்கிருந்து வந்திருக்கிறீர்கள் என்று எனக்குப் புரிகிறது":

பச்சாதாபம் கொள்ளும் திறன் என்பது வலுவான ஆளுமைகளின் சக்திவாய்ந்த பண்பாகும். மக்கள் கேட்கப்படுவதையும் புரிந்துகொள்வதையும் உணர வைக்கும் திறமை அவர்களிடம் உள்ளது, பெரும்பாலும் "நீங்கள் எங்கிருந்து வந்திருக்கிறீர்கள் என்று எனக்குப் புரிகிறது" என்ற சொற்றொடர்களை அடிக்கடி பயன்படுத்துவார்கள்.

இதையும் படியுங்கள்:
ரோல்ஸ்ராய்ஸ் கார் தருமா ஸ்டேட்டஸ்? நம்ம ஸ்டேட்டஸ் உயர இதெல்லாமும் வேண்டும்!
a men's Personality

இவ்வாறு கூறும் போது அது மற்றவர்களின் பார்வைக்கு வேறுபட்டதாக இருந்தாலும், அவர்கள் அடுத்தவர்களின் பிரச்சனைகளை உண்மையாகக் கேட்டுப் புரிந்து கொள்ள நேரம் எடுத்துக்கொண்டதை வெளிப்படுத்துகிறது . இது ஒரு தொடர்பு மற்றும் மரியாதை உணர்வை வளர்க்கிறது, மற்ற நபரை மதிக்க வைக்கிறது.

இந்த சொற்கள் அவர்களின் உணர்ச்சி, நுண்ணறிவு மற்றும் குணத்தின் வலிமைக்கு ஒரு சிறந்த சான்றாகும்.

6) "நான் தவறு செய்தேன்":

ஒரு தவறை ஒப்புக்கொள்வது என்பது அத்தனை எளிதான செயல் அல்ல, ஆனால் வலுவான ஆளுமை கொண்டவர்கள் "நான் தவறு செய்தேன்" என்று சொல்ல பயப்படுவதில்லை. இந்த சொற்றொடர் தனிபட்ட வளர்ச்சிக்கும் மற்றும் வலுவான தலைமைக்கும் ஏற்ற அவசியமான பண்புகளான பணிவு மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றை பிரதிபலிக்கிறது .

இது, அவர்கள் தங்கள் தவறுகளை திருத்தி கற்றுக்கொள்ளவும், தங்கள் முன்னேற்றத்திற்கு ஈகோ தடையாக இருக்க விடாமல் இருக்கவும் மற்றும் எதற்கும் தயாராக இருப்பதையும் காட்டுகிறது.

இதையும் படியுங்கள்:
தொடங்குவது சுலபம்; தொடர்வதே சவால்!
a men's Personality

7) "எல்லா விதமான கண்ணோட்டங்களையும் கருத்தில் கொள்வோம்":

வலுவான ஆளுமை கொண்டவர்கள் பெரும்பாலும் உள்ளடக்கம் மற்றும் சிந்தனையின் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கிறார்கள். அவர்கள் தங்கள் உரையாடல்களில் "அனைத்து கண்ணோட்டங்களையும் கருத்தில் கொள்வோம்" என்கிற சொற்றொடர்களை தவறாமல் பயன்படுத்துகிறார்கள்.

இந்த சொற்றொடர், ஒரு முடிவை எடுப்பதற்கு முன் வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கருத்தில் கொள்ள அவர்கள் தயாராக இருப்பதைக் காட்டுகிறது. இது அவர்களின் திறந்த மனப்பான்மைக்கும், மற்றவர்களின் கருத்துக்களுக்கும் மரியாதை செலுத்துவதற்கும் ஒரு சான்றாகும்.

இதையும் படியுங்கள்:
ஒரு சாதாரண மனிதன் எப்படி பணக்காரன் ஆகிறான்?
a men's Personality

"எல்லா விதமான கண்ணோட்டங்களையும் கருத்தில் கொள்வோம்" என்று சொல்வதன் மூலம், அவர்கள் அனைவரையும் பங்களிக்க அழைக்கிறார்கள், மற்றும் அனைவருடைய ஒத்துழைப்பு உணர்வையும் மதிக்கிறார்கள். இது குழுவாக சேர்ந்து செயல்படும் போது ஏற்படும் கூட்டு சிக்கலை தீர்க்கும் திறனை மேம்படுத்துவதற்கான ஒரு நுட்பமான வழியாகும் மற்றும் இது பயனுள்ள தலைமைத்துவத்தின் மிக முக்கியமான பண்புமாகும்.

8) "உங்கள் தீர்ப்பை நான் நம்புகிறேன்":

வலுவான ஆளுமைகளைக் கொண்டவர்கள் பயன்படுத்தும் மிகவும் சக்திவாய்ந்த சொற்றொடர் "உங்கள் தீர்ப்பை நான் நம்புகிறேன்" என்பதுதான். இந்த சொற்றொடர் வெறும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகும். இது மற்றவர்களின் திறன்களில் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் நிரூபணம் ஆகும்.

இதையும் படியுங்கள்:
நமக்கு நாமே விஷமாக இருக்கிறோமா? அதை உணர்த்தும் 7 அறிகுறிகள் இதோ!
a men's Personality

"உங்கள் தீர்ப்பை நான் நம்புகிறேன்" என்று அவர்கள் கூறும்போது, அவர்கள் மற்றவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறார்கள், அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கிறார்கள், மேலும் முன்முயற்சி எடுக்க அவர்களை ஊக்குவிக்கிறார்கள் . மற்றவர்களை எவ்வாறு ஊக்குவிப்பது என்பதை அறிந்த ஒரு உண்மையான தலைவரின் அடையாளமாக இந்த சொற்றொடர் கருதப் படுகிறது.

சிறந்த ஆளுமை திறனை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த எட்டு சொற்றொடர்களை அன்றாட வாழ்வில் உபயோகப் படுத்தி முயற்சி செய்து பாருங்கள்...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com