லட்சுமி தேவி உங்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் என்றும் குடியிருக்க இந்த ஒரு வரம் போதும்!

Lakshmi Kadatsham tips - லட்சுமி கடாட்சம்
Lakshmi Kadatsham tips - லட்சுமி கடாட்சம்
Updated on

பரஸ்பரம் அன்பு செலுத்தும் வீடுகளிலும், தூய்மையாக இருக்கும் வீடுகளிலும், சண்டை சச்சரவு இல்லாத வீடுகளிலும் நிச்சயம் மகாலட்சுமி குடி இருப்பாள்.

லட்சுமி கடாட்சம் பெற வீட்டில் சண்டைகளை தவிர்ப்பது எப்படி?

பெரும் பணக்காரனான ஒரு வியாபாரி வீட்டில் செல்வத்திற்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. அந்த வியாபாரி எல்லா செல்வங்களும் தன் வீட்டில் கொட்டி கிடந்தாலும், மனிதநேயம் மிக்கவனாகவும், மகாலட்சுமியை தினமும் பக்தியோடு கும்பிட்டும் வந்தான்.

ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, 'பக்தனே, நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ இதுவரை செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது. அதனால் இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள் என்று சொன்னாள்.

ஆனால் அதில் ஒரு நிபந்தனை விதிக்கிறேன். என்னை இங்கேயே தங்கியிருக்கும் படியாக எந்த வரத்தையும் நீ என்னிடம் கேட்கக் கூடாது’ என்றாள்.

மறுநாள் பொழுது விடிந்ததும், அந்த வியாபாரி தன் வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றை விபரமாக கூறினார். பிறகு மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் தம்முடைய குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார்.

குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான ஆலோசனைகள் கூறியது கேட்டு வியாபாரிக்கு தலை சுற்றியது. அவர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளிப்படுத்தினர். 'நவ ரத்தினங்களை வரமாக கேளுங்கள்; ஏராளமான பொற்குவியல்களை கேளுங்கள். மாட மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்’ என்று அடுக்கிக்கொண்டே போனார்கள்.

எல்லாவற்றையும் கேட்விட்டு மனித குணம் ஆச்சே இப்படித்தான் யோசிப்பார்கள் என்று நினைத்து வேதனையோடு காணப்பட்டான்.

இதையும் படியுங்கள்:
Margazhi Kolam: கோலத்தை இன்னும் அழகாக்க பெஸ்ட் ஐடியாஸ்!
Lakshmi Kadatsham tips - லட்சுமி கடாட்சம்
இதையும் படியுங்கள்:
எல்லாம் நம் செயல்!
Lakshmi Kadatsham tips - லட்சுமி கடாட்சம்
இதையும் படியுங்கள்:
'நிச்சயம் பலன் தரும்' 10 ரகசிய பரிகாரங்கள்!
Lakshmi Kadatsham tips - லட்சுமி கடாட்சம்

அப்போது அந்த வீட்டின் கடைசி பெண் தன் தந்தையின் அருகில் வந்து, 'அப்பா நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம், வீடு என எவற்றையும் வரமாக கேட்டு வாங்கினாலும், அது நம் வீட்டில் ஒருபோதும் நிலைக்கப் போவதில்லை. ஏனென்றால் எப்போது நம் வீட்டில் இருந்து மகாலட்சுமிதேவி வெளியேறப் போகிறேன் என்று கூறி விட்டாளோ, அவள் வெளியேறியவுடன் அவளது ஐஸ்வரியம் பொருந்திய இந்த பொருட்களும் கரைந்துவிடும், அல்லது அது எதுவும் நம்மிடம் நிலைக்காமல் போய்விடும்.

Lakshmi Kadatsham tips - லட்சுமி கடாட்சம்
Lakshmi Kadatsham tips - லட்சுமி கடாட்சம்

ஆகவே எப்போதும் எங்கள் வீட்டில் இப்போது இருக்கும் பரஸ்பரம் அன்பு என்றும் நிலைத்திருக்கும்படி மகாலட்சுமி தேவியிடம் வரம் கேளுங்கள்’ என்று கூறினாள். அதற்கான பலன் நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்றும் கூறினாள்.

வியாபாரிக்கு தன் இளைய மகள் கூறியதே சரி என்று தோன்றியது. அதையே இறுதி முடிவாகக் கொண்டு, இரவு தூங்கச் சென்றார் வியாபாரி. அன்றைய தினம் இரவில், அவர் கனவில் மகாலட்சுமி தோன்றினாள்.

அவளிடம், ‘அன்னையே! எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் இருக்கும் பரஸ்பர அன்பு மட்டும் நிலைத்து இருக்க வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம்.என்று கேட்ட வியாபாரி, இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது’ என்றும் வியாபாரி சொன்னார்.

மகாலட்சுமி சிரித்தபடி ‘மகனே! இப்படி ஒரு வரத்தைக் கேட்டு, மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டுவிட்டாய். இப்போதே உனக்கு அந்த வரத்தை தந்தேன் என்று சொன்னாள்.

என்றென்றும் உங்கள் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க எளிய வழிமுறைகள்:

ஒவ்வொருவரும் குடும்பத்தில் பரஸ்பரம் அன்பு செலுத்தியும், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லாமலும், தூய்மையான பக்தியோடும் வாழ்ந்து காட்டும் குடும்பங்களில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவு எடுத்துள்ளேன். எனவே நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உன் வீட்டிலேயே தங்கி விடுகிறேன்’ என்று கூறி அங்கேயே தங்கிவிட்டாள்.

இதையும் படியுங்கள்:
ஏன் சிலரால் அடுத்தவர் வெற்றியைத் தாங்க முடிவதில்லை?
Lakshmi Kadatsham tips - லட்சுமி கடாட்சம்

எந்த குடும்பத்தில் பெரியவர்களை மதித்து வழிபடுகிறார்களோ, எங்கு அன்பான முறையில் மற்றவர்களுடன் மரியாதையோடு பழகுகிறார்களோ, பிறருடைய செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ... அந்த வீடுகளில் எல்லாம் நான் வசிக்கிறேன்’ என்று இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது.

ஆகையால் லட்சுமி கடாட்சம் பெறுவதற்கு சண்டை போடுவதைத் தவிர்த்து, அன்பு கரங்கள் இணைந்து எல்லாரும் எல்லா சுகங்களையும் பெற்று நலமுடனும் வளமுடனும் வாழ்ந்து காட்டுவோம்.

logo
Kalki Online
kalkionline.com