

நாமெல்லாம் நினைக்கிறோம்... 'என்னடா வாழ்க்கை, ஒரே சீராக போகமாட்டேன் என்கிறது?' என்று! ஏதாவது சிக்கல்கள், சிரமங்கள் வந்து நம் வாழ்க்கை சிறகை ஒடித்துவிட்டு சென்றுவிடுகிறது. என்னதான் முயற்சி பண்ணினாலும், எதிர்பார்க்கிற பலன் கிடைக்காமல்தான் போகிறது.
இப்படியே பலப் பல சோகங்கள், சோர்வுகள், சிந்தனை சிதறல்கள் வாழ்க்கையில் இருக்கத்தான் செய்கின்றன! 'என்ன செய்ய?' இப்படி "என்ன செய்ய?" என்கிற கேள்வியுடன், 45 வருடங்களுக்கு முன், திருவண்ணாமலை சித்தர், 'விசிறி சாமியார்' என்று எல்லோராலும் அழைக்கப்பெற்ற சுவாமி யோகி ராம்சுரத்குமார் அவர்களை சந்திக்க சென்னை சேலையூரில் இருந்து கிளம்பினேன்.
அதற்கு முன் என் மானசீக எழுத்தாளர், எழுத்து சித்தர், பாலகுமாரனின் 'இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா' என்கிற கட்டுரைத்தொடரை படித்ததின் மூலம் எனக்கு திருவண்ணாமலை சென்று சுவாமிஜியை பார்த்துவிட வேண்டும் என்கிற ஆவல் என்னுள் இயல்பாகவே எழுந்திருந்தது.
'சென்று பார்த்துவிட வேண்டும்' என்று தோன்றியதே தவிர, 'என்ன கேட்கவேண்டும்' என்கிற எந்த முன்னேற்பாடும் என்னிடம் இல்லை.
வரிசையில் நின்று கொண்டு இருந்தேன். என் முன் பலபேர் வரிசையாக சென்று தரிசனம் செய்து, விபூதிப் பெற்று, தங்களுடைய காணிக்கைகளை செலுத்திவிட்டு, ஆசிர்வாதம் பெற்று சென்றனர்.
என் 'அதீத காத்திருப்பு' எந்த எதிர்பார்ப்பும் இல்லாததால் , அவரின் நயன தீட்சையை நான் வாங்கிய நொடியில் என்னிடமிருந்து இரண்டு கேள்விகள் அவரை நோக்கி பாய்ந்தன.
நாம் காரணிகளைக்கொண்டு காரணங்களை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம். அப்படி இருந்தும் வாழ்க்கையில் ஏற்றங்கள், இறக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றன! என்ன செய்ய ?
அதற்கு அவருடைய பதில்:
ஒரு புயல்போல் வந்த அவருடைய பதில், மற்றொரு கேள்வியைக் கேட்க வைத்தது.
நான் ஒரு எழுத்தாளன். சிந்தித்து பிறகு அதற்கு செயல் வடிவம் கொடுத்து எழுத்துக்களால் படைக்கிறேன். என்னுடைய பயம் என்னவென்றால் என்னால் சில நேரங்களில் எழுத முடியவில்லை. காரணம் என்னுடைய சிந்தனைகள் சிதறி அதன்மூலம் எனக்கு ஒரு அதீத பயம் உண்டாக்கிவிடுகிறது. இதற்கு சுவாமிஜி அவர்கள் அருள் கூறவேண்டும்.
இந்த இரு பொன்மொழிகளும் என் வாழ்க்கையை இன்றுவரை நான் நிதானித்து செயல்பட ஒரு நங்கூரமாக இருக்கின்றன.
இப்படியாக பலரும் பலவிதத்தில் அவரிடம் ஆசிபெற்று சென்று உள்ளனர்.
அவருடைய ஆசிகள் பலவிதம்:
1. பார்வைகள்
2. தொடுதல்கள்
3. சில சில சொற்கள்
4. உள்மன புரிதல்கள்
தெளிவு என்பது ஒருவருடைய 'சம்பாஷணைகளை' நாம் எவ்வாறு decode செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.
நாம் நம்முடைய காரியங்களைக் காரணிகள் கொண்டு அளவிட்டு, அதனுடைய விழுமியங்களை எதிர்நோக்கி செயல் வடிவம் கொடுக்கும்போது அதில் 'நல்லவைகள்' அதிகமாக இருக்குமே... ஆனால், அதுதான் காலப் போக்கில் நமக்கு நிம்மதியையும், ஞானத்தையும் அளிக்கவல்லது. (goodness leads)
நாம் எடுக்கும் 'முயற்சி ' என்பது தினந்தோறும் நிகழும் ஒரு 'தியானம்' போல உறுதிப்பாடு, செயல் திட்டம் ஆகியவற்றுடன் அனுதினமும் தொடர்ந்து நடந்திட வேண்டும்.
அடுத்ததாக... என் எழுத்து உலகக் கவலைகளை அவர் போக்கியவிதம் ஒரு அலாதியானது.
ஒரு எழுத்தாளன் என்பவன் எழுதும்போது தன் சுயத்தில் இருந்து பிரிந்து 'தான் கண்ட காட்சிகள், படித்த செய்திகள், மேற்கொண்ட பயணங்கள், அதன்மூலம் ஏற்படும் அனுபவங்கள், மேலும் பிறரிடம் பழகும்போது ஏற்பட்ட தாக்கங்கள்' எல்லாம் ஒன்றுகூட அதற்கு அவனுடைய சிந்தனைகளை மறுதலிக்க வேண்டும்.
ஆகவேதான் அவர்...
Writing is not one's own self... என்று என்னிடம் சொன்னார் .
அப்போது என்னிடம் இருந்த பயம் நீங்கி, என்மேல் ஒரு பற்று தொற்றிக்கொண்டது.
அதுதான் தினமும் படிப்பது, எழுதுவது என்கிற செயல்பாடு...
அப்போது ஒரு எழுத்தாளன் பிறரின் வாயிலாக ஒரு அனுபவத்தை அழகாக வடித்து படைக்க முடியும்.
எழுதுவது என்பது எழுதுவனிடம் இருந்து எழும் ஒரு செயல்; அது அவனிடம் இருந்து பிரிந்து, பலரின் சாத்தியபாடுகளைக் கண்டு அறிந்து, அதன் சத்தியங்களை உணர்ந்து அதை எழுத்தின் மூலம் படைப்பது ஆகும்.
இவ்வாறாக நான் உணர்ந்தேன்; இன்றுவரை செயல் வடிவம் கொடுத்துவர முயல்கிறேன்.