சிறுவர் சிறுகதை: தாயின் குரல்!

இயற்கை தந்த சொந்தக் குரலின் மதிப்பை வாத்து குஞ்சு உணர்ந்த சுவாரசியமான சிறுகதை.
சிறுகதை | Duck and duckling
சிறுகதை | Duck and ducklingImage credit: Chatgpt
கே. அசோகன்

கவிஞர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் . மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கிய சிந்தனை செம்மல் திருவிக பேச்சரங்க திருவிக விருது தமிழக ஜோக் எழுத்தாளர்கள் குழும விருது வெளியிட்டுள்ள நூல்கள் அம்மா , சின்னசைக்காலாஜி நீங்களும் அம்பானிதான் தமிழ் இந்துவில் சிறுவர் கதைகள் வெளியானது தொகுப்பு ஆந்தைக்குகையில் இளவரசி, பீட்ஸா சாப்பிட்ட காகம் மற்றும் காதல் முதல் கடவுள் வரை கவிதை ஆகிய நூல்களின் ஆசிரியர்

Updated on: 

மலையடிவாரத்தில் சோலை என்ற கிராமம் இருந்தது. பெயருக்கேற்றவாறு பசுமை படர்ந்திருந்தன. காரணம், அந்த கிராமத்தில் மிகப்பெரிய என்றுமே வற்றாத ஏரி ஒன்று இருந்தது.

கோடைக்காலத்தில் குளிர்ந்த தென்றல் வீசும், ஆகையால் பக்கத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் வருவார்கள். தொலைதூரத்தில் இருந்து பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து இளைப்பாறும். ஆடு மாடுகளும் இதர விலங்கினங்களும் ஏரியில் தண்ணீர் அருந்தி தாகத்தைத் தீர்த்து கொள்ளும்.

அந்த ஏரியில் அழகான தாமரை மலர்கள் பூத்திருக்கும்… அதில் நிறைய வாத்துகள் நீந்தி செல்வது பார்க்க அழகாய் இருக்கும்.

அந்த வாத்துக்கூட்டத்தில் ஒரு தாய் வாத்து ஏரிக்கரைக்கு வழக்கமாய் வந்து ஏரியில் நீந்தி விட்டு தன்னிருப்பிடம் திரும்பும்.  ஒருநாள் தன்னுடைய குஞ்சு வாத்துடன் ஏரிக்கரைக்கு வந்த்து.

தண்ணீரைப் பார்த்த்தும், குஞ்சு வாத்திற்கு தலைகால் புரியவில்லை. அங்குமிங்கும் தத்தி தத்தி நடந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

தாய் வாத்து ”ஜாக்கிரதை.. ஜாக்கிரதை" என்று தன் மொழியால் எச்சரித்த்து.

ஆனால், குஞ்சு வாத்து துள்ளி குதித்து விளையாடிது. ”போதும்..போதும் போகலாம் வா” என்று தன்னிருப்பிடம் குஞ்சு வாத்தை அழைத்து சென்றது.

”வாத்து குஞ்சுக்கு ஏமாற்றமாகி விட்டது. அந்த கவலையில் தூங்கியது. தூக்கத்தில் ஏரிக்கரைக்கு தனியாக செல்வது போலவும். எதிர்ப்படும் மற்ற விலங்கினங்களிடம் தாமே பேசுவது போலவும் கனவு கண்டது.

திடுக்கிட்டு விழித்து பார்த்த்து. பொழுது விடிந்து விட்டிருந்தது. தாய் வாத்து தூங்கி கொண்டிருந்த்து. அதற்கு தெரியாமல் ஏரிக்கரைக்கு தனியாக சென்றது.

ஏரிக்கரைப் போகும் வழியில், எதிரே ஒரு நாய் தென்பட்டது.

”ஹிம், எங்கே போற?” வாத்து குஞ்சிடம் அதட்டலாக கேட்டது. வாத்து குஞ்சு பயந்தே விட்டது.

பயந்து கொண்டே ”ஏரிக்கரைக்கு போறேன்! தண்ணியிலே  நீச்சலடிச்சு விளையாடப் போறேனே!” என்று சொல்லி விட்டு, ”ஏன் ஒன்னோட குரல் கடுமையா இருக்குது?” என்று கேள்வி வேறு கேட்டது.

இதையும் படியுங்கள்:
தெனாலிராமன் கதை: சூடு பட்ட புரோகிதர்கள்!
சிறுகதை | Duck and duckling

”அப்படித்தானடா இருக்கும் பொடிப்பயலே!" என லொள் லொள் என்று கத்த பயந்து போய் தத்தி தாவி தூரமாய் ஓடியே விட்டது.

சிறிது தூரம் சென்றதும், ”அப்பாடா! கடுர குரலிடமிருந்து தப்பித்தோம் நல்ல குரலா கேட்காதா?” என்று யோசித்தது.

அப்போது பார்த்து ஒரு ஆடு ”மே..மே.மே…” என்று குரல் கொடுத்தது.

”அட, இந்த குரல் நல்லா இருக்கே! நாமும் அது போல பேசி  பார்ப்போமே! என்று வாயைத் திறந்து கத்தியது. ஆனால் ”குவாக்” சத்தம்தான் வந்தது.

'நேற்று தண்ணியிலே ரொம்ப நேரமா விளையாடினதால தொண்டைக்கட்டிப் போயிருக்கும், அதனால ஆட்டோட குரல் வரலையாக்கும்' என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டது.

சிறிது தூரம் சென்றதும் நரி ஒன்று எதிர்ப்பட்டது. குஞ்சு வாத்தைப் பார்த்த்தும், ”சபாஷ்! நமக்கு காலை சாப்பாடு ரெடியா காத்து கிட்டிருக்கே!” என்று ஊளையிட்டது.

ஊளைச் சத்தம் கேட்டதும் வாத்து குஞ்சு பயந்து ஒரு பொந்தில்  பதுங்கி கொண்டது. சிறிது நேரம் கழித்தவுடன்  வெளியே எட்டிப்பார்த்த்து.

நரி அங்கு இல்லை.  ”சரி நரியைப் போல ஊளையிட்டுப் பார்க்கலாமே” என வாயைத் திறந்து சப்தமிட்டது. ஹிம் அதே குவாக்-தான்.

”சே! இன்னும் தொண்டைக் கட்டு சரியாகலை போல இருக்குது” என்று சிறிது தூரம் சென்றது.

மரத்தின் நிழலில் மயில் ஒன்று தோகை விரித்து அகவல் செய்தது.

”அட ! என்ன அழகு! என்ன அழகு! குரலும் அருமை” இதைப்போல குரல் நமக்கும் இருந்தால் எப்படி இருக்கும் என்று முயற்சி செய்தது.

முடியவில்லை. சோர்ந்து போய் ஏரியில் நீந்தி களைப்பைப் போக்கி கொண்டது. பிறகு இருப்பிடம் சேர்ந்தது.

”எங்கே போயிட்ட? பயமா இல்லையா?" என்றது.

சிறுகதை | Duck and duckling
சிறுகதை | Duck and ducklingImage credit: Gemini AI

”இல்லேம்மா! அது சரிம்மா! எனக்கு குவாக்.. குவாக்-தான் தெரியுது. ஒனக்கும் குவாக்.. குவாக்தான் தெரியது… வேற வார்த்தை தெரியாதா?” கேட்டது.

”குவாக் ..குவாக்” இதுதான் நமக்கு இயற்கை தந்தது. அதை மாற்ற முடியாதுடா செல்லம்” என்று விளக்கம் தந்தது.

”போம்மா நீ சமாளிக்கிற! வேற பாஷையை நீ கத்துக்கல அதால எனக்கும் சொல்லித் தரலை”  நானே நாளைக்கு போகும் போது கத்துகிட்டு வாரேன்” என்றது.

மறுநாள் ஏரிக்கரைப் பக்கம் குதிரை ஒன்று தென்பட்டது. அது கனைத்தது.

அதைப் பார்த்து வாத்து குஞ்சும் கனைத்து பார்த்த்து. கனைப்பு வராமல் குவாக் சப்தம்தான் வந்தது.

தத்தி தத்தி சிறிது தூரம் சென்றவுடன் கோழி ஒன்று ”கொக்.. கொக்” என்று கத்த அதைப் பார்த்தவுடன் அதே போல கத்த முயற்சித்தது. முடியவில்லை.

சோகத்துடன் இருந்த போது மரத்தின் உச்சியிலிருந்து இனிய குரல் ஒன்று கேட்டது. அண்ணாந்து பார்த்தது வாத்து குஞ்சு.. அங்கே குயில் ஒன்று அமர்ந்து கூவிக் கொண்டிருந்தது.

”உடனே குக்கூ.. குக்கூ” என கத்த முயற்சித்தது வாத்து குஞ்சு. வரவில்லை. ”அட! என்னடா இது நம் குரலுக்கு வந்த சோதனை” என்று நினைத்த சமயம் ஒரு பசுமாடு கன்றுடன் ஏரியில் நீர்குடிக்க வந்து கொண்டிருந்தது.

நீர் குடித்து விட்டு… அம்மா! என்று குரல் கொடுத்தது பசு.. அதைக் கேட்ட கன்று '..ம்மா.ம்மா' என்றது.

அந்த குரல் கேட்டவுடன் தாயின் நினைவுக்கு வந்தது. திரும்பி இருப்பிடம் வந்து சேர்ந்தது.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: நண்பா, இது உனக்காக!
சிறுகதை | Duck and duckling

தாயிடம் நடந்த விவரங்களை எல்லாம் விவரித்து… ”தனக்கு ஏன் மற்ற குரல்கள் வரவில்லை” என்று கேட்டது.

தாய் வாத்து… ”இதோ பாருடா செல்லம்… அன்னைக்கு சொன்னதுதான் இன்னைக்கும்… இதுதான் நமது இயல்பான குரல்… இயற்கை தந்த குரல், ”குவாக்..குவாக்”தான் என்றது.

நடந்த சம்பவங்களையும்.. தாயின் விளக்கத்தையும் புரிந்து கொண்ட வாத்து குஞ்சு… ”தாயின் குரல்தான் தமது குரல்” என்ற முடிவுக்கு வந்து சந்தோஷத்துடன், ”குவாக். ..குவாக்..குவாக்” என்று துள்ளி குதித்து மகிழ்ந்து விளையாடியது.