சிறுவர் சிறுகதை: கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு!’

குழந்தைப் பருவத் தவறுகளைத் தண்டனையால் பெரிதுபடுத்தாமல், சரியான வழிகாட்டுதல் மூலம் எப்படித் திருத்துவது என்பதை உணர்த்தும் சிறுகதை
சிறுவர் சிறுகதை | Two students punishment
சிறுவர் சிறுகதை | Two students punishmentImage credit: Chatgpt
வளர்கவி

இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர: வளர்கவி கோவை கவிஞர் இதுவரை 6 நூல்கள் பதிப்பித்தவர். சிறுவர்க்கான படைப்பிலக்கியத்தில் குழந்தைகளுக்கான கதைப்பாடல்கள் எழுதிவருபவர். பட்டி மன்றப் பேச்சாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், அகில இந்தியவானொலி கோவையில் 18 ஆண்டுகள் பகுதிநேர அறிவிப்பாளராகப் பணியாற்றியவர். சமூக அறிவியல் பட்டதாரி ஆசியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தினமலர் கவிதைச்சோலைப்பகுதியில் அதிக படைப்புகள் வெளியிட்டவர். சிறுவர் மணி நெய்வேலி, மாலை முரசு கோவை, பாரதி இலக்கிய அமைப்பு சென்னை, நடத்திய கவிதைப் போட்டிகளில் முதற்பரிசு வென்றவர்.

Updated on: 

ஸ்டாப் ரூம் வாசலில் நின்றிருந்தார்கள் முரளியும் சீனுவாசனும்.

இருவரும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள். ஸ்டாப் ரூமில் கண்கள்

நெருப்பு தெறிக்க உட்கார்ந்திருந்தார் பழனிச்சாமி ஓவிய ஆசிரியர். அவரோடு எப்பவும் ஒட்டியே இருக்கும் உடற்கல்வி ஆசிரியர் ஷண்முகமும் இருந்தார். அவர் கையில் ஒரு சின்ன நோட்டுப் புத்தகமும் கார்டோடு தொங்கின விசிலுமிருந்தன.

“சொல்லுடா பணத்தை என்ன பண்ணினே?” மிரட்டினார் முரளியைப் பார்த்து பழனிச்சாமி.

அவன் கொஞ்சம்கூட அசராமல் “சார், இவன் பணத்தை எங்கிட்ட கொடுக்கவே இல்லைங்கறேன்… நீங்க என்னசார் என்ன பண்ணினே என்ன பண்ணினேன்னு என்னையே மிரட்டீட்டிருக்கீங்க?” என்றான் கூலாக!. அவன் இந்தக் காலத்து மாணவன்.

ஆசிரியருக்கு மாணவர்கள் பயப்பட்டதெல்லாம் அந்தக் காலம்.

ஷண்முகம் சீனுவாசனைப் பார்த்து, “நீ கொடுத்தயாடா? பொய் சொல்லாம சொல்லு!” என்றதும், அவன் பொலபொலவென கண்ணீர் வடித்தான். உண்மை அவன் கண்ணீராய் உதிர்ந்தது!. அவன் பொய் சொல்லமாட்டான் என்று பள்ளிக்கூடத்தில் எல்லாருக்கும் தெரியும். அதனால் அவனை மிரட்டாமல் அன்பாக கேட்டார்கள்.

முரளி தன் முழியாங்கண்ணை உருட்டி சீனுவாசனைப் பார்த்து மென்மையாக அவனுக்குக் கேட்கும்படி சொன்னான். “டேய் சீனு! என்னையா இந்த டிராயியாங்கிட்ட மாட்டிவிடுற இருடி! இரு!வீட்டுக்குப் போகும்போது ஒன்னை என்ன செய்யறேன் பாரு!” மிரட்ட சீனு இன்னும் அழுதான்.

டிராயிங்க் மாஸ்டரும், பிடி மாஸ்டர் ஷண்முகமும்தான் அந்த பள்ளியின் நீதிபதிகள். குற்றங்களை விசாரிக்க தீர்ப்பளிக்க, தலைமை ஆசிரியர் இதிலெல்லாம் தலையிடமாட்டார்.

சிறுவர் சிறுகதை | two students and teachers
சிறுவர் சிறுகதை | two students and teachersImage credit: Gemini AI

பழனிச்சாமி டிராயிங்க் மாஸ்டர் சொன்னார்.. “டேய் ரெண்டு பேரும் நல்லாக் கேட்டுக்குங்க வெள்ளைத்தாளில் ஒரு கருப்புப்புள்ளி விழுந்துட்டா… அதுதான் தெரியுமே ஒழிய வெள்ளை தெரியாது! அது மாதிரிதாண்டா நீங்க எவ்வளவு நல்லவனா எத்தனை நாள் இருந்தாலும் ஒருநாளிட்டி ஒருநாள் எதாவது ‘தப்பு’ ஒரு கரும்புள்ளி விழுந்துட்டா அவ்வளவுதான். அதுதான் கண்ணுக்குள் நிக்கும்!’

மெல்ல லேடீஸ் டீச்சர்சைப் பார்க்க, முத்தம்மா டீச்சர் முறுவளித்தாள்.

எதிர்பாராத வேளையில் தன் விசில் கார்டை சுழற்றி இருவர் முதுகிலும் விளாசினார் ஷண்முகம். முரளி அசரவில்லையே. சீனுதான் ‘குய்யோ முறை’யோன்னு ஊரைக் கூட்டக் கத்தினான். செய்யாத தப்புக்குத் தண்டனையா?ன்னு அவன் அழுகை கேட்டது.

முத்தம்மா டீச்சர் இருவரையும் பார்த்து அடுத்து "என்ன பீரியட்?" என்று கேட்க அவர்கள் "மாத்ஸ்" என்றார்கள்.

“சரி! சரி... போங்கடா கிளாசுக்கு! மத்தியானம் மூணு மணிக்கு வாங்க”ன்னு அனுப்பினாள். பழனிச்சாமி பக்கம் திரும்பி “விட்டுத் தொலைங்க சார் எவ்வளவு பணம் பிரச்னை?”

“முப்பது ரூபா!”

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: ஒற்றை வைக்கோல் செல்வந்தன்!
சிறுவர் சிறுகதை | Two students punishment

“நாம் மூணு பேரும் ஆளுக்கு பத்து ரூபா போட்டு பிரச்னையை முடிச்சுடலாம். இந்தாங்க என்ஷேர் பத்து ரூபாய்...” என்று ஹாண்ட் பாக்கிலிருந்து நீட்டினாள்.

“பணம் பெரிசில்ல டீச்சர்.. வெள்ளைப் பாலில் ஒரு துளி விஷம் கலந்தா பால் பூராம் விஷமாயிடமாதிரி.. வெள்ளை மனசுல திருட்டுங்கற கறுப்பு விழுந்தா… அதான் சொல்றேன்” என்றார் பழனிச்சாமி. அவர் தொட்டதுக்கெல்லாம் உதாரணம் சொல்லும் உதாரண புருஷர்.

முத்தம்மாள் சொன்னாள்... “போங்க சார்.. நீங்களும் உங்க உதாரணமும். இப்ப, வாழைத்தண்டை வெட்டி சும்மா வச்சா அது கருத்துத்தான் போகும் ஆனா, அதே சமயம் அதை வெள்ளை நிற மோர்க்குவளையில் போட்டுட்டா.. மோரும் கறுப்பாகாது…! வாழைத்தண்டும் வெளுப்பாவே இருக்கும்.! தப்பு செய்யாம மாணவப் பருவத்தைக் கடக்கமுடியாது!

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: டெங்கு மன்னன் 65-ம் கொசு இராஜ்யம்!
சிறுவர் சிறுகதை | Two students punishment

அதை உதாரணம் சொல்லி ஊதிப் பெரிசாக்காம, அறுத்தா கறுப்பாகும் வாழைத்தண்டை வில்லைவில்லையாய் நறுக்கி மோரில் போட்டாமாதிரி, தப்புங்கற கறுப்பைப் போக்க போடணும். தப்பைத் தண்டிக்காம விட்டுட்டாலே குற்றம் குறைய வாய்ப்பிருக்கு. தண்டிச்சா கண்டுபிடிக்காம தப்பைச் செய்ய வழியைச் தேடுவானுக! நம்ம மேல இருக்கற பயமும் கொறைஞ்சு நமக்கு மரியாதை இல்லாம போகும்! அதுதான் விடலை வயசின் இயல்பு!” என்றதும் பழனிச்சாமியும் ஷண்முகமும் அமைதியானார்கள்.