

"அப்பா எங்கேடா போனார்? ரொம்ப நேரமாக் காணோம். டேபிள்லே வச்ச காபி ஆறி, அவலாப்போயிக் கெடக்கு. மாடிலேருந்தே இன்னும் எறங்கி வந்தபாடில்லியா? போய்ப் பாருங்கடா..." கொஞ்சம் கவலையோடு பிள்ளைகளை விரட்டினாள் லலிதா.
"மாடிலே யாரும் இல்லேம்மா. நான் இப்போதான் அங்கேருந்து ரோஜா பறிச்சுண்டு வரேன்..." என்கிறாள் மகள் நிரவத்யா.
ஆளுக்கு ஒரு பக்கம் போய் அவனைத் தேடப் போனார்கள். அப்படியெல்லாம் யாரிடமும் சொல்லாமல் எங்கும் போகிறவன் இல்லை சுமந்திரன். அக்கம்பக்கத்து வீடுகள், பூங்கா என்று அவன் அரிதாகப் போகிற இடங்களில் எல்லாம் தேடியாகிவிட்டது.
ஏதோ குறுகுறுப்போடு மாடிக்குத் தானே ஓடினாள் லலிதா... சுமந்திரன் வழக்கமாகப் போய் அமர்ந்து வானம் பார்க்கிற இடத்தில் அவனுடைய பிரம்பு நாற்காலி வெறிச்சென்று கிடந்தது. முதுகுக்கு இதமாக அவன் விரித்துக்கொண்டு அமர்ந்திருக்கும் பூந்துவாலைத் துண்டும் அப்படியே கசங்காமல் இருந்தது.
இன்று அவன் அதில் அமர்ந்திருப்பானா என்பதே சந்தேகமாக இருந்தது. பிரம்பு நாற்காலியின் அருகே அவன் எப்போதாவது குறிப்பெழுதுகிற பழைய நாள் குறிப்பேடு ஒன்று பிரித்த நிலையில் கவிழ்ந்துக்கிடந்தது. மூடியைச் செருகாமல் பேனாவும்...