

சுமுகமாக இயங்கிக்கொண்டிருந்த தமிழ்நாட்டின் 'ஃப்ரீடம் ஃபில்லிங் ஸ்டேஷன்' பெட்ரோல் பங்க்குகளில், நவம்பர் 2026-ல் திடீரென என்ன நடந்தது? கைதிகள் மீண்டும் சிறைக்குள் அடைக்கப்பட்டதன் அதிர்ச்சியூட்டும் பின்னணியை அறிய தொடர்ந்து படியுங்கள்!
பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையின் முன்புறம் செல்லும் திருவனந்தபுரம் சாலையில் நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இதில் ஒவ்வொரு filling drum மிலும் மத்திய சிறைச்சாலை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.
என்னடா இது நெல்லைக்கு வந்த சோதனை பெட்ரோல் போட வந்தால் சிறைச்சாலை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்று அபசகுனமாக பெட்ரோல் பங்க்கில் எழுதி வைத்திருக்கிறார்களே.. ஏன் இப்படி என்று அங்கு பணியிலிருந்த ஊழியரை விசாரித்ததில் கிடைத்த முதல் தகவல் –
அது முழுக்க முழுக்க சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் நல்வாழ்வுக்காக கைதிகளைக் கொண்டே நடத்தப்படும் ஒரு பெட்ரோல் நிலையம்.
அவரே ஒரு கொலை செய்து விட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஒரு கைதியாம். இதை அவரே சொன்னதும், 'கெதக்' என்றது மனசு.
இரண்டாவது தகவல் இது போல 24 ஆயுள் கைதிகள் அந்த பங்க்கில் இப்போது பணியில் இருக்கிறார்கள். அவர் காட்டிய கைதிகளின் பெயர்களும் கொலைக் கேஸ் விவரங்களும் ஆஃப் தி ரிக்கார்ட். சொல்வதற்கில்லை.
'சரி டூட்டி முடிந்ததும் பொழுது போக்கிறக்காக வேறெங்கும் போவீர்களா..?'
'போகக்கூடாது'
'மனைவி மக்களை பார்க்கப்போவதுண்டா?'
'அதுவும் கூடாது. தெரிந்தும் தெரியாமலும் குடும்பத்தார் பெட்ரோல் பங்க்கிலேயே வந்து பார்த்து செல்லுவார்கள். வேலை முடிந்ததும் சிறைச்சாலைக்கு சென்று அட்டண்டென்ஸில் கைரேகை பயோமெட்ரிக் வைத்துவிட்டு செல்லுக்குப் போய் தூங்கி விடுவோம் மற்றபடி டீ, காபி, வடை எல்லாம் பெட்ரோல் நிலையத்துக்கே வந்து விடும். ஜெயில் கைதி என்ற உணர்வே இல்லாததால் சிறைத்துறை எங்களுக்குக் கொடுத்திருக்கும் சுதந்திரத்தை மதித்து நாங்களும் விசுவாசமாக இருக்கிறோம். கேட்பதற்கே நன்றாகத்தான் இருந்தது.
மற்ற விவரங்கள் - ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சிறைக் கைதிகளின் நலனுக்காக முழுக்க முழுக்க சிறைக்கைதிகளே பணிபுரியும் இந்தியன் ஆயில் கார்பரேஷன் பெட்ரோல் பங்க்குகளை சிறைத்துறையுடன் இணைந்து துவக்கியது IOC நிறுவனம்.
சிறைவாசிகளின் மறுவாழ்வு மற்றும் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் நன்னடத்தை கைதிகள் மூலம் இத்தகைய ஃப்ரீடம் ஃபில்லிங்ஸ்டேஷன் (Freedom Filling Station) பெட்ரோல் பங்க்குகள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.
இது புழல், திருச்சி, கோவை, மதுரை, சேலம், வேலூர், புதுக்கோட்டை, பாளையம்கோட்டை உள்ளிட்ட 9 இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. திட்டம் துவங்குமுன்பே அப்போதைய முதல்வர் ஜெயலலிதா காலமானதால் அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
இங்கே ஊழியம் செய்யும் கைதிகளுக்கு தினசரி 160 ரூபாய் சம்பளம் வழங்கப் படுகிறது. மாத முடிவில் கணக்கிடப்பட்டு அவர்கள் கணக்கிலோ அல்லது அவர்களின் மனைவி மக்களுக்கோ மணியார்டர் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது பாளை மத்திய சிறைசசாலைக்கு எதிரில் இருக்கும் இந்த IOC பெட்ரோல் பங்க்கில் 24 கைதிகள் பணிபுரிகிறார்கள். புழல் சிறையில் முழுக்க முழுக்க பெண் கைதிகளே பணிபுரியும் பெட்ரோல் பங்க் ஒன்றும் இயங்குகிறதாம்.
அந்த ஆயுள் தண்டனை கைதி சொன்ன இன்னொரு செய்தி சம்பளம்தான் பத்தவில்லை. தினமும் ஒரு 200 ரூபாயாகவாவது உயர்த்தித்தரலாம் என்று பரிதாபமாக அவர் சொல்லும்போது பார்க்க பாவமாகவும் இருந்தது.
இவரா கொலை செய்திருப்பார்?
'என்ன காரணத்திற்காக கொலை செய்தார்?'
'திட்டம் போட்டு செய்யல சார். அது என்னமோ புத்தி மழுங்கி அப்பிடி செஞ்சுடடேன் கொல்லணும்னு செய்யலை பயமுறுத்தணும்னு செஞ்சதுதான்.
அது நோக்கமுமில்லை.
சுமுகமாக போய்க்கொண்டிருந்த இந்த ஜெயில் பறவைகளின் வாழ்வில் ஒரு திடீர் திருப்பம். சமீப காலங்களில் குறிப்பாக அக்டோபர்–நவம்பர் 2026 மற்றும் 2026-ஆம் ஆண்டின் வெளியான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டு சிறைகளிலிருந்து கைதிகள் ஜெயிலரையும் காவலர்களையும் தாக்கி விட்டு தப்பி ஓடும் முக்கிய சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன.
சமீபத்திய முக்கிய சிறைத் தப்பியோடல் சம்பவங்கள் அக்டோபர் 26 அன்று இரவு தேனி மாவட்டம் தேக்கம்பட்டி கிளைச் சிறையிலிருந்து, 17 விசாரணைக் கைதிகள் ஒரே நேரத்தில் சிறையிலிருந்து தப்பிச் சென்றனர். கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டது போல நாடகமாடி, உதவிக்கு வந்த சிறைக் காவலர்களைத் தாக்கி, சாவிகளைப் பறித்துக்கொண்டு இவர்கள் தப்பியோடினர். 200 பேர் கொள்ளளவு கொண்ட தேனி சிறையில் 334 கைதிகள் அடைக்கப்பட்டிருந்ததும், 34 காவலர்களுக்குப் பதிலாக 4 காவலர்கள் மட்டுமே பணியில் இருந்ததும் சமீபத்திய தப்பியோடலுக்கு முக்கியக் காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது.
தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு 36 முதல் 43 மணி நேரத்திற்குள் தப்பிய 17 கைதிகளும் மீண்டும் கைது செய்யப்பட்டனர். நவம்பர் 2026 லும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அன்னூர் காவல் நிலையச்சிறையிலிருந்து அக்டோபர் இறுதியில் ஏற்கெனவே தப்பியோடிய வழக்கில் கைது செய்யப்பட்டு அன்னூர் காவல் சிறையில் அடைக்க அழைத்து வரப்பட்ட 1 கைதி காவலர்களின் பிடியிலிருந்து தப்பியோடினார். தேனி சிறைச் சம்பவத்திற்குச் சற்று முன்பாகப் புழல் சிறையிலிருந்தும் கைதி தப்பியோடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வடிவேலு காமெடி போல நல்லாத்தானே போய்க் கிட்டிருக்கு என்றபடிக்கு நன்றாகப்போய்க்கொண்டிருந்த சிறைக்காவலர்களின் பிழைப்பு திடீரென்று மாறிப்போச்சு. 'நூத்தக்கெடுக்குமாம் குருணி' எனும் சொலவடைக்கு ஏற்ப இப்படி கைதிகள் சிறையை உடைத்துக்கொண்டே தப்பும் நிலையில் திறந்த வெளியில் பணி புரிய அனுப்பப்படும் கைதிகளும் தப்பி ஓடிவிட்டால் என்ன செய்ய கள்ளன் பெரிசா காப்பான் பெரிசா? அதிலென்ன சந்தேகம் கள்ளன்தான்.
இருக்கிற தலைவலிகள் போதாதென்று அரசுக்கு இன்னும் கூடுதல் திருகுவலியா என்று அனைவரையும் திரும்ப ஜெயிலுக்கே கொண்டு வந்து விட்டது சிறைத்துறை.
இப்போது தமிழ்நாடு சிறைத்துறையின் கீழ் புழல்,கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், பாளையங்கோட்டை மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் நன்னடத்தை கைதிகள் மூலம் 11 'ஃப்ரீடம் ஃபில்லிங் ஸ்டேஷன்' (Freedom Filling Station) பெட்ரோல் பங்க்குகள் வெற்றிகரமாக இயங்கி பெட்ரோல் நிரப்பும் வேலையை செய்து வந்த நிலையங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக நவம்பர் 2026 முதல் கைதிகள் வெளிப்புறப் பணிகளில் ஈடுபடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டன. இந்த பங்க்குகள் தனியார் ஊழியர்களைக் கொண்டு இயக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டின் சிறை மறுவாழ்வுத் திட்டங்கள், சமீபத்திய சிறைப் பாதுகாப்புச் சூழல்கள் மற்றும் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சேவைகளில் ஏற்பட்ட மாற்றங்களைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, நடப்பு நிகழ்வுகள் குறித்த முழுமையான பார்வையைப் பெறுவீர்கள்.