சிறுகதை: மருத்துவருக்கு இலவசம்!

“மருத்துவருக்கு இலவசம்” என்ற ஆட்டோ வாசகம்… பின்னணியில் இருக்கும் அழகான ம் நிறைந்த நெகிழ்ச்சியான சிறுகதை!
சிறுகதை | Auto driver and woman doctor
சிறுகதை | Auto driver and woman doctorImage credit: Chatgpt
முனைவர் என். பத்ரி

சுமார் நாற்பது எட்டு ஆண்டுகள் கல்விப் பணியாற்றியுள்ள டாக்டர்.என்.பத்ரி (1956) தனது பி.எச்.டி. படிப்பை கல்வியியல் மற்றும் ஆங்கிலத்தில் முடித்தவர். NCERT விருதையும் பெற்றவர்.அகில இந்திய வானொலியின் கல்வி ஒலிபரப்புக்கான ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார். பல்வேறு பல்கலைக்கழகங்களின் தொலைதூரக்கல்வியின் படிப்புகளுக்கு கருத்தாளாராக பணியாற்றியுள்ளார். பல முன்னோடி தமிழ் இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் சிறுகதைகளும் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டு தற்கால இளஞர்களுக்கு வழிகாட்டி வருகிறார்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

அது சென்னை நகரின் ஒரு புகழ்பெற்ற மருத்துவமனை. அதில் பிரசவ வார்டில் தன்னுடைய ஒரே மகளை சேர்த்து விட்டு வெளியே காத்துக் கொண்டிருந்தான் சரவணன்.

மிகவும் பரபரப்பாக காணப்பட்ட அவன், ’பேரனோ, பேத்தியோ சுகப்பிரசவமாக இருந்தால் நல்லது’ என்று யோசித்துக் கொண்டே இருந்தான்.

அவனுடைய மனைவி லதாவும் மிகுந்தக் கவலையுடன் காணப்பட்டாள். ”ஏங்க, குழந்தைப் பிறப்பு ஒரு மறுபிறப்பு’ என்று சொல்லுவாங்களே. எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க. நேற்று இராத்திரியே குழந்தை பிறந்துடும்னு சொன்னாங்கா. மணி இப்ப காலை 10 மணி ஆகப் போவதுங்க" என்று வெள்ளந்தியா கணவனைக் கேட்டாள்.

“இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்த்த நீ இப்படிக் கேட்கலாமா?" என்று கேட்டக் கணவனை வெட்கத்துடன் பார்த்தாள் லதா.

அதற்கு, "பேரன் பிறக்கட்டும். ஏண்டா லேட்டா பிறந்த?ன்னு அவனைக் கேட்டுச் சொல்லுகிறேன்" என்றான் சரவணன்.

அதைக் கேட்ட லதா, "பிறந்த உடனே உங்கப் பேரன் பேசப் போறான். நீங்க அதைக் கேட்டு எனக்கு நீங்க எனக்குச் சொல்லப் போறீங்க. அதை நானே கேட்டுக்கறேன். எனக்கும் அவன் பேரன்தானே?" என்று ஒரு போடு போட்டாளே பார்க்கலாம்.

இந்த சூழ்நிலையில் அவர்களின் மனத்தின் இறுக்கம் சற்றே குறைந்தது.

சிறிது நேரத்தில், ’குவா’, 'குவா’ என்ற சத்தம் பிரசவ அறையிலிருந்து வெளியேக் கேட்டது.

’இது நம்ம பேரனா? வேறு குழந்தையா?’ மனதின் தவிப்பை சரவணனால் அடக்க முடியவில்லை. தன் இஷ்ட தெய்வம் முருகனை அன்பு மகளின் சுகப் பிரசவத்துக்காக வேண்டிக் மனமாறவேண்டிக் கொண்டான்.

அந்தக் ’குவா', 'குவா’ சத்தம் அவனின் பேரனின் குரல்தான் என்பதை வெளியே வந்த தாதி ஒருவர் உறுதி செய்தார்.

சிறுகதை | old age couple and nurse
சிறுகதை | old age couple and nurseImage credit: Chatgpt

மகிழ்ச்சியில் சரவணன் மனம் மூழ்கியது.

பிறந்தது ஆண் குழந்தை என்றதுமே முகம் கொஞ்சம் வாட்டமானது.

அவனுடைய 35 வயது மகனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. அதுதான் அவன் கவலைக்குக் காரணம்.

சிறிது நேரம் பொறுத்து வெளியே வந்த மருத்துவர் கமலா சரவணனைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள்.

போன வாரம் நடந்தது இது.

மருத்துவமனைக்கு வரும் வழியில் மருத்துவர் கமலாவின் கார் பழுதடைந்து விட்டது. அவள் செய்ய வேண்டிய அவசர சிகிச்சை ஒன்று அன்று இருந்தது.

அவளை ஏற்றிக் கொண்ட ஆட்டோ சரவணன் அவளை இதே மருத்துவமனையில்தான் இறக்கிவிட்டான்.

கமலா ஆட்டோவுக்கு காசு கொடுக்காமல் மருத்துவமனைக்குள் சென்று விட்டாள். அன்று இருந்த அவசர அறுவை சிகிச்சை ஒன்று அவளை பரபரப்புக்கு உள்ளாக்கியது. அறுவை சிகிச்சை முடிந்து வெளியே வந்துப் பார்த்தாள்.

ஆட்டோ புறப்பட்டுப் போய் விட்டிருந்தது. காத்திருந்து காத்திருந்து பார்த்து சரவணன் புறப்பட்டு போய் விட்டான். பிறகு பயணித்த பயணியின் விவரம் தெரியாததால் சரவணன் அதை அப்படியே மறந்தும் விட்டான்.

ஆனால் கமலாவின் மனதில் அவசரத்தில் உதவிய ஆட்டோக்காரனுக்கு பணம் கொடுக்காதது பற்றி மனதில் ஒரு குற்ற உணர்ச்சி மட்டும் இருந்து வந்தது. ஆனால், அவனின் பட்டைப் பூசிய முகம் மட்டும் நினைவில் நின்றது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: மனதின் தாகம்!
சிறுகதை | Auto driver and woman doctor

இன்று மீண்டும் அந்த பட்டைப் பூசிய முகத்தைப் பார்த்ததில் அவளுக்கு மிக்க மகிழ்ச்சி.

மூன்று நாட்களாகின.

"நோயாளியை டிஸ்சார்ஜ் செய்துவிடலாம்" என்று டாக்டர் சொல்லிவிட்டார்.

மருத்துவ பில்லைக்கட்டப் போன சரவணனிடம், ”டாக்டர் உங்களிடம் கட்டணம் வாங்க வேண்டாம்” என்று சொல்லிவிட்டார் என்று கேட்ட அவனுக்கு அதிர்ச்சி.

டாக்டர் கமலாவின் அறைக்குள் அனுமதிக் கேட்டு மெல்லப் புகுந்தான்.

டாக்டரிடம், ”மருத்துவ பில்லை நீங்க கட்ட வேண்டாம்”னு சொல்லிட்டீங்களாமே? ஏங்க" என்று கேட்டான்.

"நான் போன வாரம் உன்னுடைய ஆட்டோவுக்கு காசு கொடுக்காமல் வந்துவிட்டேனே. அதை நீ ஏன் கேட்கவில்லை?" என்று கேட்டாலே பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: சொச்சம்..!
சிறுகதை | Auto driver and woman doctor

'இந்த அருமையான மருத்துவரையை நாம் தப்பாக நினைத்துக் கொண்டோமே?’ என்று கரங்களை கூப்பி, ’’அம்மா நீங்க டாக்டர் இல்லை. நடமாடும் தெய்வம். நீங்கள் இன்னும் நல்லா இருப்பீங்க என்று சொல்லிக் கொண்டே வந்த கணவனை அதிசயமாகப் பார்த்தாள் லதா.

அன்று மாலை அவனுடைய ஆட்டோவின் முன்னும், பின்னும் இந்த வாசகம் இருந்தது, 'மருத்துவருக்கு இலவசம்'