சிறுகதை: என் அண்ணன்...?

20 ஆண்டுகளுக்கு பின் அண்ணனைக் கண்டுபிடித்த தங்கையின் நெகிழ்ச்சியான சிறுகதை!
சிறுகதை | Family
சிறுகதை | FamilyImage credit: Gemini AI

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

காலம் போய்க்கொண்டு இருக்கிறது. எத்தனை எத்தனை கஷ்டங்கள்? எத்தனை எத்தனை வேதனைகள்? வாழ்வில் பிரச்னை என்பது வாடிக்கை. ஆனால், பிரச்னையே வாழ்வாகி போய்விட்டால் அதை மறக்கமுடியாது. அந்தக் கவலைகள் நம்மை உருக்கிவிடும்.

தங்கம் ராமசாமி இளம் தம்பதிகள். அவர்களுக்கு ஒரே மகன் கண்ணன். வயது 3 தான். ராமசாமி வங்கி அதிகாரி. அவர் சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்தார். அவருக்கு கண்ணன் என்றால் உயிர். தங்கத்திற்கும் கண்ணன் மீது அளவுகடந்த பாசம். அவனை இருவரும் எப்போதும் கொஞ்சிக்கொண்டு இருப்பார்கள். சம்மர் வந்தால் எல்லோரும் ஊட்டி போவது வாடிக்கை. ஊட்டியில் மே மாதம் 3 வது வாரம் நடைபெறும் மலர்க் கண்காட்சியைக் காணப் போவார்கள். இந்த வருடமும் அப்படித்தான் சென்றார்கள். கண்ணனுக்கு ஒரே குஷி. அவனுக்கு ஊட்டி ரொம்பவே பிடித்து இருந்தது. எப்போதும் விளையாட்டு மற்றும் குறும்பு செய்பவன் குட்டி கண்ணன்.

மலர் கண்காட்சியின் 2 வது நாள். ஞாயிற்றுக்கிழமை நல்லகூட்டம். லட்சக்கணக்கில் மக்கள். மூவரும் மேல் கார்டன் சென்றார்கள். அங்குதான் பழங்குடி மக்கள் இருப்பிடம் இருந்தது. அங்கு அவர்களுக்கு கோயிலும் இருந்தது. 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்துத்தான் தனது மகனைக் கண்ணன் காணவில்லை என்று தெரிந்ததும் துடித்துப்போனார்கள். தங்கம் பதறிப்போனார். இருவரும் கண்ணனை மேல் கார்டனில் மட்டுமே தேடிக்கொண்டு இருந்தார்கள்.

சிறுகதை | A boy is crying
சிறுகதை | A boy is cryingImage credit: Gemini AI

ஆனால், கீழ்கார்டனில் மைக்கில் ‘ஒரு சிறுவன் காணமல் போய்விட்டான். அவன் பெயர் கண்ணன். பெற்றோர்கள் வந்து குழந்தையை அழைத்துச் செல்லுங்கள்’ என திரும்பத் திரும்பச் சொன்னார்கள். அது அவர்கள் காதில் விழவில்லை. அதற்குள் கீழ்கார்டனில் உள்ள உஷா மற்றும் சதீஷ் தம்பதிகளுக்குக் குழந்தை இல்லை. ஏக்கம்தான் மிஞ்சியது. அவர்களுக்கு குழந்தை இல்லாதது பெரும் குறை. உஷாவினால் தாங்க முடியவில்லை. குழந்தைக்காக ஏங்கினார். அப்போதுதான் மைக்கில் அறிவிப்பு வந்தது. உஷா நன்கு யோசித்து ஒரு தவறு செய்ய துணிந்தார்.

இருவரும் துணிந்து ஒரு பெரிய தவறைச் செய்ய முடிவெடுத்தார்கள்.

மேடை அருகே இருந்த குழந்தைக்கு ஐஸ் கிரீம் வாங்கிவந்து கொடுத்து, ‘அவன் கண்ணன் தங்கள் மகன்தான்’ என்று சொல்லி அவனை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள். சென்னைக்கு பஸ் இல்லாததால் உடனே கோவை செல்லே திட்டம் போட்டனர்.

அவர்கள் ஊட்டியைவிட்டு வெகு தொலைவு சென்றுவிட்டார்கள். இப்போதுதான் தங்கம் மற்றும் ராமசாமி மேடைக்கு வந்து புகார் கொடுக்க வந்தனர். அப்போதுதான் அவரது மகனை ஒரு தம்பதிகள் அரைமணி நேரம் முன்புதான் தங்களது குழந்தையை எடுத்துச் சென்றுவிட்டார்கள் என தெரிய வந்தது. தங்கம் புல்தரையில் புரண்டு புரண்டு அழுதார். ராமசாமி நெஞ்சு தாங்காமல் அழுதார். இருவரும் போலீசில் புகார் அளித்துவிட்டு சென்னைக்குப் புறப்பட்டர்கள். அதற்கு பிறகு ஊட்டிக்கு வரவே இல்லை.

கண்ணன் உஷா, சதீஷ் தம்பதியுடன் சென்னைக்குப் போய்விட்டான். கண்ணனுக்கு சந்தேகம் வந்தது. ஆனால், இந்த புது பெற்றோர்கள் தன்னை அன்பு செலுத்தி நன்கு பார்த்துக்கொள்வதாக உணர்ந்தான். உஷாவின் பாசத்தில் உருகிப் போனார்.

அதற்குள் தங்கம் மயக்கம் அடைந்தார். ராமசாமி அவர் மீது நீரைத் தெளித்தார். தங்கம் சுய உணர்வு பெற்றார். கண்ணா...! கண்ணா...!! என்று மட்டுமே திரும்பத் திரும்பச் சொன்னார்.

கண்ணனைக் கண்டுப்பிடிக்க முடியாமல் வெறும் கையுடன் சென்னை வந்தார்கள். நாட்கள் ஓடின. வருடங்கள் நகர்ந்தன. மூன்று வருஷம் கழித்து அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. வித்யா என்று பெயர் வைத்தனர். வித்யாவை பொக்கிஷமாகக் கருதினார்கள். இப்போது சம்மர் வந்தால் ஊட்டிக்குச் செல்வது இல்லை. அவர்கள் கண்ணனை மறக்காமல் இருந்தார்கள்.

ஆனால், வித்யாவிடம் அவளுக்கு ஒரு அண்ணன் கண்ணன் என்று ஒருவன் இருந்தான் என்பதே தெரியாது. அவர்கள் வித்யாவிடம் சொல்லவில்லை. தங்கம் மற்றும் ராமசாமி தங்கள் துன்பத்தை மறைத்து வித்யாவிடம் அன்பும், பாசமும் வைத்து கண்போல் பார்த்துக்கொண்டார்கள். வித்யா தன் படிப்பை முடித்துவிட்டு... அதாவது அவர் படித்தது செயற்கை நுண்ணறிவு.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: வளர்ப்பு!
சிறுகதை | Family

அவர் படித்து முடித்ததுமே அவருக்கு வேலை கிடைத்தது. அப்போதுதான் வித்யா அம்மாவிடம் கேட்டார். ஏன் அம்மா எப்போதும் எதையோ நினைத்துக்கொண்டே இருக்கிறேர்கள்?

“சமயம் வரும்போது சொல்கிறேன்... நீ எப்போது வேலையில் சேர போய்கிறாய்?”

“அடுத்த திங்கள் கிழமை...”

வேலை கிடைத்த இடம் தூரமாக இருந்ததால் ஆபீசுக்கு பக்கத்திலே ஒரு வீடு வாடகைக்கு எடுத்தார்.

ஒரு மாதம் ஆகிவிட்டது. இப்போதுதான் தங்கம் ஒரு பெரிய கடிதத்தை எழுதினார். அதில் அவர் அழாத குறையாகத் தன் கஷ்டத்தை விரிவாக எழுதினார். தன் வருத்தத்திற்கு காரணம் கண்ணன் என்று உண்மையை இப்போது எழுதிவிட்டார். வித்யாவிற்கு ஒரு அண்ணன் கண்ணன் என்று இருந்ததையும் அவன் ஊட்டி மலர் கண்காட்சியில் தொலைந்து விட்டதையும் மனம் உருக எழுதினார். தான் செய்தது தவறு என்று உணர்ந்துவிட்டார். கண்ணன் பெற்றோர்கள் எப்படி கஷ்டப்பட்டு இருப்பார்கள் என யோசித்து என இருவரும் உணர்ந்தார்கள்.

வித்யாவுக்கு அதிர்ச்சி.. பேரதிர்ச்சி... அவளால் நம்பவே முடியவில்லை. அவளுக்கு தனக்கு ஒரு அண்ணன் இருப்பது கண்டு மகிழ்ந்தார். ஆனால், 20 வருடங்கள் ஓடிவிட்டது. அண்ணனை எப்படி கண்டுபிடிப்பது என்றே யோசித்தார். வித்யாவின் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்தது. வீட்டிற்கு வந்ததும் வித்யா தன் கோபத்தை வெளிபடுத்தினார். ஏன் இதுவரை அதை சொல்லவில்லை எனக் கேட்டார். “ஏன் அம்மா, அப்பாவும் இதை என்னிடம் சொல்லவில்லை. மனசு ரொம்ப பாதிக்கிறது. இது தப்பு இல்லையா?”

“மன்னித்து விடும்மா!” பிறகு ஊட்டியில் நடந்த சம்பவம் குறித்து அனைத்து விஷயங்களயும் கேட்டார். போலீசும் கண்டுபிடிக்க முடியவில்லை. அம்மா நான் இன்றே திரும்புகிறேன். எனக்கு வேலையே அண்ணன் கண்ணனை கண்டுபிடிப்பதுதான்.

வித்யா கண்ணனின் 3 வயது போட்டோவை வாங்கிக்கொண்டார். அவருக்கு... அதாவது அண்ணனுக்கு வேறு எதாவது அடையாளம் இருக்கா? என விசாரித்தார். அதற்கு அம்மா அவன் இடது காது கீழ் இடது கழுத்தில் ஒரு பெரிய கருப்பு மச்சம் இருக்கும் என்று சொன்னார். வித்யா 3 வயது போட்டாவைப் பார்த்து... ஆமாம், போட்டோவில் அடையாளம் தெரிகிறது. இது போதும் என்றார். அம்மாவிடம்தான் நிச்சயம் கண்ணனைக் கண்டுபிடித்து விடுவேன் என்று உறுதிமொழி அளித்தார்.

“எப்படி அம்மா?”

சென்னை ஆபிசு. வித்யாவிற்கு கண்ணனைப் பற்றி 2 தடையங்கள்தான் உள்ளது.

3 வயது போட்டோ.

இடது கழுத்தில் கருப்பு மச்சம்.

அவளுக்கு அம்மா அப்பா எப்படி இவ்வளவு பெரிய கஷ்டத்தில் வாழ்கிறார்கள்? என்று வியந்தார். ஆபிசில் வேலை செய்ய முடியவில்லை. எப்படி கண்ணனை கண்டுபிடிப்பது என்று மட்டுமே யோசித்தார்.

கடற்கரை மணலில் ஊசியை தேடுவதுபோல் இது கஷ்டம் ஆனது. ஆனால், அவருக்கு ‘செயற்கை நுண்ணறிவு’ தெரியும். அவருக்கு மெட்டா AI செயற்கை நுண்ணறிவு பிரிவு மேனேஜர் நன்று தெரியும்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: காணாமல் போன சங்கிலி...!
சிறுகதை | Family

அவரிடம் அந்த 3 வயது போட்டோவை அனுப்பிவைத்து அந்தப் படத்தில் உள்ளவன் 25 ஆண்டுகளில் எப்படி இருப்பான் என போட்டோவை அனுப்பி வைக்க வேண்டினார். தயவுசெய்து தனக்கு உதவ வேண்டும். மிக முக்கிய பிரச்னை என்று இமெயிலில் எழுதினார். பின் மொபைலில் பேசினார். அவர் ஒரு நாள் அவகாசம் கேட்டார். வித்யா பதட்டத்தில் இருந்தாலும் கண்ணனைக் கண்டுபிடிக்கும் முயற்சி வெல்லும் என நம்பினார்.

மறுநாள் வித்யாவிற்கு ஈமெயில் வந்தது. அத்துடன் கண்ணன் 25 வயதில் எப்படி இருப்பார் என்ற போட்டோ வந்தது. அந்தப் படத்தில் இடது கழுத்து மச்சம் சரியாக தெரிந்தது. வித்யா மகிழ்ந்து அவருக்கு நன்றி தெரிவித்தார்.

வித்யா காரியத்தில் இறங்கினார். தினத்தந்தி, தினமணி, தி ஹிந்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற 4 பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார்.

விளம்பரத்தில் அவரது 3 வயது படம் மற்றும் தற்போதிய கற்பனை படமும் கொடுத்தார். மேலும் அடையாளமாக அவரது இடது கழுத்தில் ஒரு பெரிய கருப்பு மச்சம் இருக்கும் என்று சொல்லி இருந்தார். தகவல் தருபவர்களுக்கு ரூபாய் 50,000 சன்மானம் கொடுக்கப்படும் என்றும் சொல்லி இருந்தார். தொடர்புக்கு மெயில் முகவரியும் மற்றும் மொபைல் நம்பரையும் கொடுத்து இருந்தார். எப்படியும் தனக்கு நல்ல செய்தி வரும் என்று நம்பினார். ஒரு வாரம் ஓடியது. எந்தத் தகவலும் வரவில்லை. எட்டாவது நாள் ஒரு கால் வந்தது.

“ஹலோ... வித்யா மேடம்தானே? என்று ஒருவர் பேச்சைத் துவக்கினார்.

“ஆம். சொல்லுங்க...” என்றார்.

“நீங்கள் தேடும் கண்ணன் என் வீட்டு பக்கத்தில்தான் இருக்கிறார்...”

“கண்ணனை பல வருடங்களுக்கு முன் ஊட்டியில் இருந்து மலர் கண்காட்சியில் இருந்து அழைத்து வந்தார்கள். அவனை நன்றாகவே வளர்த்தார்கள். அவனுக்கு நல்ல காலேஜ் படிப்பும் கொடுத்தார்கள். கண்ணன் இப்போது நன்றாகவே இருக்கிறான் மேடம்... நீங்கள் அவர்களிடம் நான்தான் சொன்னதாக தெரியவேண்டாம்... நான் அவர்களது முகவரியை மட்டும் அனுப்புகிறேன்...”

“சரி சார்... முகவரியைச் சொல்லுங்கள்....”

“சதீஷ் 105, குறுக்கு தெரு, அரும்பாக்கம், சென்னை – 600 106.”

“சார் ரொம்ப தேங்க்ஸ். உங்களுக்குப் பணம் எப்படி...?”

“மேடம் அது எல்லாம் வேண்டாம்... ப்ளீஸ்...!”

வித்யா உடனே அம்மாவிடம் பேசினார். அம்மா, அப்பா இருவரையும் புறப்படத் தயராக இருக்கச் சொன்னார். நல்ல செய்திதான். மற்றவை நேரில் சொல்கிறேன்... புறப்படத் தயராக இருங்கள். அரும்பாக்கம் போக வேண்டும்...”

வித்யா வீடு வந்ததும் அம்மாவைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அழ ஆரம்பித்தார். அப்பாவிற்கு ஒன்றும் புரியவில்லை. வித்யாவே தனக்கு வந்த தகவலைச் சொன்னார்.

“அம்மா... அப்பா... நான் கண்ணனைக் கண்டுபிடித்துவிட்டேன். நாம் இப்போதே போய் அவர்களைச் சந்திக்கப்போகிறோம். அம்மா, அப்பாவிற்கு நம்ப முடியவில்லை. ஆனால், வித்யா 100 சதவீதம் உறுதி அளித்தார். எல்லோரும் கிளம்பினார்கள்.

“ம்மா... அது எப்படி?”

“முதலில் போய் பார்ப்போம்... பிறகு மற்ற விஷயங்கள்...”

அரும்பாக்கம்.

சதீஷ் உஷா வீட்டிற்கு வந்தனர். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை . வித்யாவே விஷயத்தைத் துவங்கினார். மிகவும் பணிவுடன் பேசினார். தாங்கள் வந்த காரியம் குறித்து பேசினார். கண்ணன் தன் அண்ணன் என்றும் சொன்னார்.

நீங்கள் செய்தது சட்டப்படி குற்றம். பெரிய குற்றம். நாங்கள் கோர்ட்டுக்கு சென்று கண்ணன் தன் அண்ணன் என்று நிரூபிக்க முடியும். ஒரு மரபணு (DNA) பரிசோதனை போதும். ஆனால், நாங்கள் அந்த எண்ணத்தில் இங்கு வரவில்லை. நடந்தது நடந்து போய்விட்டது. நீங்களும் அக்கறை காட்டிதான் கண்ணனை வளர்த்து இருக்கிறீர்கள். அதுவரை எனக்கு சந்தோசமே... ஆனால் என் அம்மா, அப்பா, அண்ணன் உடன் வாழவே விரும்புகிறேன்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: சாணை பிடிக்கலையோ சாணை...!
சிறுகதை | Family

உஷா, சதீஷ் தம்பதிக்கு ஷாக். அதிர்ச்சி. இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு கண்ணனைத் தேடி வந்து இருப்பது அதிர்ச்சியாக இருந்தது.

வித்யா மேலும் பேசினார். நீங்கள் கண்ணனை நன்றாகவே வளர்த்து இருக்கிறீர்கள். நல்ல காலேஜ்தான் சேர்த்து இருக்கிறீர்கள். சந்தோசம். நான் வெளிபடையாகப் பேச விரும்புகிறேன். உஷா சதீஷ் தம்பதி வாய் அடைத்து போனார்கள். பேசிக்கொண்டு இருக்கும்போது கண்ணன் வந்தான். அவனுக்கு அம்மா அப்பாவை அடையாளம் கண்டுகொண்டார். வித்யா கண்ணனை “அண்ணா” என்று கூப்பிட்டார். கண்ணனுக்குத் தெளிவு இல்லை. வித்யா மன்னிப்போம்... மறப்போம் என்று பேசினார்.

வித்யா நடைமுறை பிரச்னயைதான் முன் வைத்தார். பிறகு தனது முடிவைச் சொன்னார். அவரது பேச்சில் உறுதி மற்றும் உண்மை இருந்தது.

அம்மா அப்பாவிற்கு தன் குழந்தை என்றால் பாசம் எப்படி இருக்கும்? அதேபோல் எவ்வளவு பிரியத்துடன் நீங்கள் கண்ணனை வளர்த்து இருக்கிறீர்கள். கண்ணன் இரண்டு குடும்பத்திற்கும் தேவை. இதில் மாற்று கருத்து இல்லை. எனவே நாம் எல்லோரும் ஒரே வீட்டில் வாழ்வோம்” என்றார். வித்யா தெளிவாக பேசினார். அவர் கோபம் காட்டவில்லை. அண்ணன் கிடைத்த சந்தோசத்தில் அவர் ஒரு யோசனையை முன் வைத்தார். வித்யாவின் முடிவு எல்லோருக்கும் பிடித்து இருந்தது. அதாவது இரண்டு குடும்பங்களும் சேர்ந்து வாழ்வது என்று முடிவு எடுத்தார். அவர் இந்த முடிவுக்கு வருவார் என்று யாருமே யோசிக்கவில்லை. ஆனால் வித்யா ஒன்றை சொன்னார். இந்த முடிவுக்கு நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் நான் நிச்சயம் கோர்ட்டுக்கு செல்லத் தயங்க மாட்டேன். இது உறுதி.

சிறுகதை | Family
சிறுகதை | FamilyImage credit: Gemini AI

வளர்ப்பு தாய் அழுதார். அவர் கண்ணனின் அப்பா மட்டும் அம்மாவின் கால்களில் விழுந்து மன்னித்து விடுங்கள் என்று கதறினார்கள். வித்யா அவர்களை எழச் சொல்லி சொன்னார். இருவரும் அழுதார்கள்.

கண்ணனுக்கு அதிர்ச்சி ஒரு பக்கம். சந்தோசம் ஒரு பக்கம். கண்ணனுக்கு தன் தங்கை வித்யா மீது அனுதாபம் தோன்றியது. புதிதாக உறவுகள். எல்லோரும் சந்தோசம் அடைந்தனர்.

வடபழனி.

ஒரு நாலு பெட் ரூம் இருக்கும் ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு வித்யா எடுத்தார். எல்லோரும் அவரவர் வீட்டைக் காலிசெய்துவிட்டு புது மனை புகுந்தார்கள். எல்லோருக்கும் மனதில் சந்தோசம். எல்லோருக்கும் கண்ணன் தேவை என்பதை இரு குடும்பத்தாரும் உணர்ந்தார்கள். வித்யாவின் புது வீடு எல்லோருக்கும் பிடித்து இருந்தது. எல்லோருக்கும் கண்ணன் சொந்தம்.

வித்யாவிற்குதான் ரொம்ப சந்தோசம். அவருக்குப் பரிசாக அண்ணன் கண்ணன் கிடைத்தார். அவர் கண்ணனை ‘அண்ணா’ என்றே அழைத்தார். வித்யாவால் தனக்கு ஒரு அண்ணன் கிடைத்தது மிக மிக சந்தோசம். கண்ணன் மற்றும் வித்யா கை குலுக்கிக்கொண்டார்கள். கண்ணனுக்கு தன் உண்மையான அம்மா அப்பாவிடம் பரிவு வந்தது. ஆசையாக முதலில் “அம்மா!” என்றார். இருவரும் கட்டிப் பிடித்துக்கொண்டார்கள். பின் “அப்பா...!” என்று சொல்லி கட்டிப்பிடித்தார். அப்பா! எத்தனை வருடங்கள் ஓடிவிட்டது. கண்ணனின் அம்மா சந்தோசத்தில் கதறி கதறி அழுதார்.

வித்யா மற்றும் கண்ணன் அவரை சமதானம் செய்தார்கள். வளர்ப்பு தாய் இன்னும் அழுதுகொண்டே இருந்தார். வளர்ப்பு தந்தை கண்ணீர் விட்டார். சில மணி நேரம் யாரும் எதுவும் பேசவில்லை. வளர்ப்பு தாய் எல்லோரையும் சாப்பிடக் கூப்பிட்டார். நடந்து முடிந்தவை நன்றாகவே முடிந்தது. வித்யாவிற்கு மிக்க சந்தோசம்.

தன் அண்ணன் கிடைத்துவிட்டார்.

கண்ணா...! கண்ணா...!

logo
Kalki Online
kalkionline.com