

“இது சரியில்லை. நல்லதல்ல” பொங்கினார் விஞ்ஞானி ரகு.
“ஏன் சார்? நானெல்லாம் கல்யாணம் செய்யக்கூடாதா? ஹனிமூன் போகக்கூடாதா?” ஜூனியர் ரவி அப்பாவியாய் கேட்டான்.
201C யார் சொன்னா? நல்லா போகலாம். ஆனால், கல்யாணத்தை ரெண்டு வருஷம் கழிச்சு வைச்சிருந்தால் நானே டிக்கெட் போட்டு அனுப்பி வைப்பேன். இப்ப அனுமதி தர இயலாது”
“யோவ் நீ யாருய்யா அனுமதி தரது? இப்பவே 30 வயதாகிறது. 32 வயசில் கல்யாணம் செய்யறது கஷ்டம். பொண்ணு கிடைக்கறது கஷ்டம். ஆன்ட்டியோ ஆயாவோதான் கிடைப்பாள் நான் கல்யாணம்கற பஸ்ஸில் கடைசி ஃபுட்போர்டில் ஒரு காலில் நிக்கறேனய்யா.
“அப்போ நீ ரெண்டு வருடம் முன்னாடி மேரேஜ் பண்ணியிருக்கனும்...” அமைதியாய் அழுத்தமாய் சொன்னார் ரகு.
“என் மேரேஜை டிசைட் பண்ண நீ யாருய்யா? என் இஷ்டம் எப்ப வேணா மேரேஜ் செய்வேன். உன்னாலே என்ன பண்ண முடியும்?" ஆத்திரம் பொங்க கேட்டான்.
“உன் ஹனிமூனை ஜெயிலில்தான் வைச்சுக்கனும். ஞாபகமிருக்கா? நீ கையெழுத்து போட்டுக்கொடுத்திருக்கே நாலு வருடத்துக்கு லீவே எடுக்கமாட்டேன்.
ஆராய்ச்சி முடிந்தாலோ இல்லை தண்டமாய் போனாலோ நாலு வருடம் லாங் லீவ் எடுக்கமாட்டேன்னு மல்ட்டி நேஷனல் கம்பெனிக்கு உத்ரவாதம் தந்திருக்கே.”
“என்ன உத்ரவாதம் உடம்புவாதம்னு உளறிக்கிட்டு? கொத்தடிமையா நான்?” சீறினான் ரவி.
“ஏறக்குறைய அதேதான், கொஞ்சம் மரியாதையோடு”
“நான் இப்ப என்ன செய்யணும்?” சரணடைந்தான்.
“ஹனிமூனை கேன்சல் செய். லேபுக்கு வா” ஆர்டரிட்டார்.
“வந்து தொலையறேன்...” ஆத்திரத்தில் ஃபோனை தூக்கி மெத்தையில் எறிந்தான்.
ரகுவின் லேப் ஊரின் ஓரத்தில் தனிமையிலிருந்தது. ரவி உள்ளே நுழைய எலெக்ட்ரானிக் கதவு அனுமதி தரவில்லை.
“ஸார் லேபுக்குள் கதவு உள்ளேவிட மறுக்கிறது”
“பாவி சொல்ல மறந்துட்டேன். உன் டோக்கன் மாற்றப்பட்டு விட்டது. இப்ப லோயர் கிரேட் எம்ப்ளாயி ஆயிட்டே...” கூலாய் சொன்னார் ரகு.
“ஐயோ இது அநியாயம்?”
“இதென்ன அநியாயம்? உன் சம்பளம் பாதியாய் குறைக்கப்பட்டது”
“ஸார் இதென்ன சர்வாதிகாரமாயிருக்கு. நான் ஒத்துக்கமாட்டேன்”
“அட உனக்கு புரியலை. நாமெல்லாம் அங்கீகரிக்கப்பட்ட கொத்தடிமைகள். வாயைத்தவிர வேறு எல்லாத்தையும் திறக்கலாம். உனக்கு கெஸ்ட் பாஸ்வேட் தரப்பட்டுள்ளது வி2வி”
உள்ளே நுழைந்ததும் ஒரு குரங்கு போன்ற பொம்மை முதுகை காட்டிபடி நிற்க,
“பாஸ் என்னதிது புதுசா குரங்கு பொம்மை...”
“லேபில் உள்ளே இருட்டாக இருக்கனும்னு விதி. தேவைப்பட்டால் ஒளி தரும் பொம்மை குரங்கு. அல்மோஸ்ட் மன வளப்பயிற்சிக்கு சிம் கண்டு பிடிச்சாச்சு. இதை டெஸ்ட் பண்ண வேண்டியதுதான் பாக்கி. வெற்றிகரமா ஆராய்ச்சி முடியற நேரத்தில் நீயும் -இருக்க வேண்டாமா? அதற்காத்தான் உன் லீவை கேன்சல் செய்தேன் டெஸ்ட் பண்ண மூன்று மணி நேரம்தான் ஆகும். நேரமாச்சு. லேபிலேயே சாப்பிடலாம் வா” என்றார் ரகு.
வயிராற சாப்பிட்டு முதல் முறையாக சிரித்தார் ரகு.
“ஏன் சிரிக்கறீங்க?" கலவரப்பட்டு ரவி கேட்க,
“இதோ இருக்கே குரங்கு பொம்மை. இதுதான் முதல் சாய்ஸ். தினமும் டீ கொடுக்கிற பையன்.. அவனிடம் 10 லட்ச ரூபாய் தரேன்.
டெஸ்ட் பீஸா இருக்க வரீயானு கேட்டேன். ஒரு கோடி ரூபாய் கேட்டான். கொடுக்க சம்மதித்தேன். சிம்மை அவன் இடது காதில் உள்ளே வைத்து தைத்தேன். பத்தே நிமிடத்தில் குரங்குபோல ஆயி்ட்டான். அவனை மாற்று மருந்து கண்டுபிடிச்சு திரும்பவும் மனிதனாக மாற்ற ஒரு வருடமோ ரெண்டு வருடமோ ஆகலாம்.”
“ஸார் மனித சேம்பிளாக ஆக்க தடை உள்ளது. சட்டபடி குற்றம்.”
“யாருக்குத் தெரியும்?”
“எனக்கு தெரியுமே... நான் வெளியே சொல்லமாட்டேனா? அமைதி காக்க 6 கோடி தரனும்” பேசிக்கொண்டிருக்கும்போதே குரல் மங்கி உருவம் மாற ஆரம்பித்தது.
“ஹாஹ் ஆ” என்று ரகு சிரிக்கும்போதே குரலும், உருவம் மாறத்துவங்க, "துரோகி எனக்குள் எப்படி அந்தச் சிப்பை வைத்தாய்?” என்று சிரமப்பட்டு திட்டினார்.