

யுவல் நோவா ஹாராரியின் புகழ்பெற்ற 'சேப்பியன்ஸ்' நூலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தக் கட்டுரை, மனிதனின் பரிணாம வளர்ச்சி எந்திரமயமாதலை நோக்கி எவ்வாறு நகர்ந்துள்ளது என்பதைப் புட்டுப் புட்டு வைக்கிறது. தொழில்நுட்பத்தின் உச்சத்தில் நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம்? மனிதனே கடவுளாக மாறுமா அல்லது ஒரு நாள் ரோபோக்களின் பிடியில் முற்றிலும் சிக்குமா? நம் எதிர்காலத்தின் மிரள வைக்கும் திடுக்கிடும் உண்மைகளை அறிய இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்!
இந்த உலகப் பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கு மட்டும் வளர்வதற்குப் பெருந்துணையாக இருப்பது 'தொழில் நுட்பம்' தான்.
தொழில்நுட்பக் கருவிகள் இல்லாமல் அவனால் இன்று செயல்படுவது என்பது முற்றிலும் இயலாத காரியம்.
இதைத்தான் Yuval Nova Harari இவ்வாறு கூறுகிறார்...
நம்மையெல்லாம் ஒரே இனமாக பிரித்து அவற்றிற்கு Cyborg என்று பெயரிடுகிறார்.
உதாரணத்திற்கு நம்முடைய பார்வை மங்கலாகும்போது நாம் கண்ணாடியைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டோம்.
அலைபேசி இல்லாமல் நம்மால் நடமாட முடியவில்லை.
இந்தப் போக்கு ஒரு Bionic (total dependence on technology) வாழ்க்கையை நமக்குக் கொடுத்திருக்கிறது.
இப்படியாகப் படிப்படியாக நம்முடைய செயல்பாடுகள் குறைய குறைய நம்முடைய சிந்தனைகளை inorganic materials ஆக மாற்றி, அதன் பயனை அனுபவிக்க கற்றுக்கொண்டிருக்கிறோம்.
இதன் மூலம் நம்மால் ஒரு காரைச் சுதந்திரமாக எந்திரத்தின் உதவியுடன் இயக்க முடிகிறது.
அறிவு சார்ந்த 'சதுரங்கம்' விளையாட்டு இப்போது 'online' மூலம் நமக்குப் பாடம் கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கிறது.
ஏன் நம்முடைய 'பணத்தை' எங்கு சேமிப்பது? எதில் சேமிப்பது? போன்ற அறிவு சார்ந்த விஷயங்களையும் கற்றுக் கொடுத்து நம்மைத் திகைக்க வைக்கிறது.
இதன் மூலம் நாம் உருவாக்கக்கூடிய ஒரு மனித இனம் என்பது plurality இதிலிருந்து ஒரு singularity மாறிவிட்டது என்கிறார் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் Yuval Nova Harari. அவர் எழுதிய புத்தகம் Sapiens- A Brief History of Humankind.
அவர் மேலும் கூறும்போது, 'கடந்த 500 வருடங்களில் விஞ்ஞான வளர்ச்சி ஒரு பிரளயமாக உருவெடுத்து நம்மை ஆட்கொண்டிருக்கிறது' என்கிறார்.
அவர் 500 வருட மனித இனத்தின் வளர்ச்சியை இவ்வாறு விளக்குகிறார்...
Fire gave us power,
Money gave us the purpose,
Science made us deadly....
இது காலப்போக்கில் உண்மையாக நிகழக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
நாம் எப்போதாவது நினைத்திருக்கிறோமா?
நம்முடைய சிந்தனையையும், உணர்வுகளையும் ஒரு ரோபோட் (Robot ) இடம் கொடுத்துவிட்டு அதன் விளையாட்டில் மயங்கி போய்க்கொண்டிருக்கிறோம்.
இனி வரும் காலங்களில்,
DNA மூலம் நம்முடைய Genetic Code ஆதார் அட்டைபோல கொடுக்கப்படும்.
அதுதான் நம்முடைய CV.
நமக்கு வேலை கொடுக்கும் பெரிய நிறுவனங்கள் நம்முடைய ஆற்றலைப் புரிந்துகொள்ள நம்முடைய (Genetic Code) GC யை கேட்கும். CVயை நிராகரிக்கும்.
மருத்துவர்களும் இனி நோயாளிகளினுடைய நோய்களைத் துள்ளிதமாகக் கண்டறிய robotic surgery நம்பித்தான் இருக்க வேண்டும்.
போகிறபோக்கில் இனி காலம் மற்றும் வெளி மறைந்து போய்விடும்.
ஏன்... மக்களே தங்களை ஆண்களாகவும், பெண்களாகவும் பிரித்துப் பார்க்கமாட்டார்கள்.
இப்போது நம்முடைய விஞ்ஞானம் நம்முடைய consciousness மற்றும் feelings ஆகியவற்றை ஒன்றாக கூட்டி, ஒரு பேராற்றல் மிக்க பெருந் தலைவனை உருவாக்க முயற்சி செய்து வருகிறது.
அந்த முயற்சியில் மனிதன் வெற்றி பெற்றுவிட்டால் அதுதான் அவனுக்கு பெரும் சவாலாகவும் இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை...
இனி மதங்கள் இருக்காது! மாறாக மனிதனே கடவுளாக மாறி விடுவான்.
கடவுளுடைய வேலையை மனிதன் எடுத்துக்கொண்டு விட்டான்.
அவனே தன்னுடைய பிறப்பையும் இறப்பையும் தீர்மானிக்க கற்றுக்கொண்டு விட்டான்.
இதைத்தான் வரலாற்று ஆசிரியர் Yuval Nova Harari -cyborgs என்கிறார்.
இதை இன்னும் புரிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.
அவருடைய நாவலை வாழ்நாளில் ஒரு முறையாவது நாம் படித்துவிட்டால், அது நமக்கு பல புரிதல்களையும், வழிகளையும் உண்டு பண்ணி கொடுக்கும் என்பதில் எந்தவித ஐயமும் கிடையாது.
இந்த நாவல் இவ்வாறு தொடங்குகிறது...
14 லட்சம் கோடி வருடங்களுக்கு முன்னால் பொருள், சக்தி, நேரம், வெளி எல்லாம் ஒன்று சேர்ந்து பிரபஞ்சமாக மாறியது-Big Bang.
சுமார் மூன்று லட்சம் கோடி வருடங்களுக்கு முன் பொருளும், சக்தியும் ஒன்றிணைந்து atoms, molecules உருவாகின.
சுமார் நான்கு லட்சம் வருடங்களுக்கு முன் பூமி உருவானது. அது (molecules) நுண் உயிர்களுடன் ஒன்று சேர்ந்து பல உயிர்களை உண்டு பண்ணின.
சுமார் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் தோன்றிய இனம்தான் Homo Neanderthelensis.
அது சற்று விரிந்து கால்களையும் கைகளையும் பிரித்து உருவாகி Homo Erectilus ஆக மாறியது.
மனித இனம் தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப ஐரோப்பாவில், ஆசியாவில், ஆப்பிரிக்காவில் உருவாகி அதுவே பிறகு பல அடையாளங்களுடன் மதங்களாக மொழிகளாக உருவெடுத்து வந்திருக்கிறது.
எப்போது மனிதன் கையை உபயோகப்படுத்தக் கற்றுக்கொண்டானோ அப்போதே விஞ்ஞானம் ஆனது வளர்ச்சி அடையத் தொடங்கிவிட்டது.
அவனுடைய 'அறிவு' அவனை ஆக்கப்பூர்வத்தில் அதிக ஈடுபாடு செய்யவிடாமல், அழிவை நோக்கி பயணப்படுவதால் நம் எதிர்காலத்தினுடைய வாழ்க்கை என்பது பெரும் கேள்விக்குறியாக ஆக்கியிருக்கிறது. இதுதான் வரலாற்று ஆசிரியர்களுடைய கவலையாகவும் இருக்கிறது.
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், மனிதகுலத்தின் எதிர்காலம் மற்றும் தொழில்நுட்பத்தின் உச்சம் குறித்த தெளிவான புரிதலைப் பெற்று, டிஜிட்டல் யுகத்தில் நம் சிந்தனைகளை ஆழமாக நெறிப்படுத்திக் கொள்ளும் ஆற்றலைப் பெறுவீர்கள்.