குழந்தைகள் அடிக்கடி பொய் சொல்கிறார்களா? பெற்றோர் செய்யக்கூடாத 5 தவறுகள்!

உங்கள் குழந்தை பொய் சொல்கிறதா?... அதைத் தவிர்க்க பெற்றோர் செய்யக்கூடாத 5 முக்கிய தவறுகள் இதோ.
பொய்  | Parent with their child
பொய் | Parent with their childImage credit: Gemini AI
அகிலா சிவராமன்

வணக்கம், நான் சென்னையில் பிறந்து வளரந்தேன். 1995 ஆம் ஆண்டு திருமணத்திறகுப் பிறகு நான் ஜம்ஷேட்பூரில் settle ஆகி விட்டேன். நான் கடவுள்களின் பெயரில் நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறேன். நான்கைந்து வருடங்களுக்கு முன்னால் தான் எனக்கு எழுதும் ஆர்வம் வந்தது. நான் முதன் முதலாக எழுதிய கதை, புயலின் மறுபக்கம் கல்கியின் மங்கையர் மலரில் 04.01.2025 அன்று வெளி வந்தது. கல்கி குழுமத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முதன்முதலாக எழுத சந்தர்ப்பம் கொடுத்த கல்கி குழுவினருக்கும், எனக்கு ஆதரவு தரும் வாசகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும உங்களின் மனதை கவரும் வகையில் எழுத முயற்சி செய்வேன்.

Updated on: 
MM strip
MM strip

உங்கள் செல்லக் குழந்தைகள் எதிர்காலத்தில் தவறான பாதையில் செல்லாமல் இருக்க, பெற்றோர் தவிர்க்க வேண்டிய அந்த 5 முக்கியமான தவறுகள் என்னென்ன? முழுமையாகத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

இந்த காலகட்டத்தில் தாய் தந்தை என இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. மேலும், தாத்தா, பாட்டி சித்தப்பா, பெரியபபா என கூட்டு குடும்பத்தோடு சேர்ந்து இருப்பதற்கான வாய்ப்பும் இருப்பதில்லை. முக்கால் வாசி பெற்றோர் வீட்டில் பணி புரிபவரிடம் தான் குழந்தைகளை விட்டு செல்கிறார்கள். இது ஒரு பக்கமிருக்க இன்றைய கல்வி முறை பற்றி சொல்லவே வேண்டாம். சுமை தாங்கும் முதுகாக மாறி விட்டது குழந்தைகளின் தோள்கள் முற்றும் மூளை.. இப்படியிருக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கும் சரி பெற்றோர்களுக்கும் சரி மன உளைச்சல் அதிகமாக ஏற்படுகிறது.

ஏற்கனவே. டென்ஷனில் இருக்கும் பெற்றோர்கள் செய்யும் சில தவறுகளால் டென்ஷனை எதிர்த்து போராட முடியாமலும் ஏற்றுக் கொள்ள‌முடியாமலும் இரண்டிற்கு இடையில் மாட்டிக் கொண்டிருக்கும் குழந்தைகள் பொய் சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள்.

அதை பெற்றோர்கள் தவிர்க்காவிட்டால் பொய்யானது நாளுக்கு நாள் வளர்ந்து குழந்தைகளின் ஏதிர்காலமே வீணாகி விடும். இதை தவிர்க்க வேண்டுமானால் பெற்றோர்கள் செய்யக் கூடாத ஐந்து தவறுகளை பற்றி இப்பதிவில பார்க்கலாம்.

1. குழந்தைகளோடு நேரத்தை செலவிடாமல் இருத்தல்:

இன்றைக்கு நிறைய பெற்றோர்கள் செய்கின்ற முதல் தவறே இது தான். ஆபீஸ் வேலை வீட்டு வேலை என பிசியாக இருக்கும் இவர்கள் குழந்தைகளிடம் சிறிது நேரமாவது உட்கார்ந்து பேசும் வழக்கத்தை வைத்து கொள்வதில்லை. பெற்றோர்கள் சிறிது நேரமாவது பேசி குழந்தைகளின் மனதிலிருப்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
குறைவான செலவில் வீட்டை அழகாக்கும் சுடுமண் சிற்பங்கள்!
பொய்  | Parent with their child

2. குழந்தைகளுக்கு பிடிக்காததை திணிப்பது:

இது ரொம்ப முக்கியமான விஷயமாகும். உணவு பழக்கத்தில் ஒரு சில காய்கறிகளோ பழங்களோ அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை பக்குவமாக எடுத்து சொல்லலாம். ஓரிரு முறை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தால் பிறகு தானாகவே அவர்கள் அதை உண்பார்கள். இரண்டாவதாக அவர்களிடம் உங்களுக்கு பிடித்த செயல்களை மட்டுமே செய்ய சொல்லாதீர்கள். அவர்களுக்கும் சிறிது வாய்ப்பை அளியுங்கள்.

அதற்கு பிறகு இன்னொரு முக்கியமான விஷயம் உடை விஷயத்தில் கூட அவர்களுக்கு பிடிக்காத நிறத்தை சில பெற்றோர்கள் வற்புறுத்துவார்கள். உங்களுக்கு பச்சை நிறம் பிடித்து இருக்கலாம்..

ஆனால் அவர்களுக்கு நீல நிறம் பிடித்திருக்கும். நீங்கள் அவர்களுக்கு வற்புறுத்தி உங்களுக்கு பிடித்ததை அணிவிப்பீர்கள்.. ஏன்?? ஆடை விஷயத்தில் கூட திணிக்க வேண்டும். அவர்களுக்கு பிடித்ததை அவர்கள் அணியலாமே.. நீங்கள் கேட்கலாம்.. இதனால் என்ன ஆகும் என்று?? இந்த சின்ன சின்ன விஷயங்கள் கூட அவர்களின் மனதில் ஆழமாகப் படிந்து நாள் பட நாள் பட ஆத்திரமும் விரோதமும் அதிகமாகும் அதன் காரணத்தினால் நிச்சயமாக பொய் கூற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுவார்கள்.

3. செய்யாத தவறை செய்ததாக அடிக்கடி சொல்வது:

இப்போ உதாரணத்திற்கு ஒரு பொருள் உடைந்து இருக்கிறது..

நீங்கள் வீட்டிலேயே இருக்காமல் ஆபீஸில் அதிக நேரத்தை கழித்து விட்டு நடந்தது எதுவும் தெரியாமல் வீட்டிற்கு வந்தவுடனேயே, நீங்கள் உங்கள் குழந்தைகளை நீ உடைத்தாயா என்று கேட்கும் போது குழந்தைகள் நான் எடுக்கவில்லை என்று பலமுறை கூறியும் நீங்கள் நம்பாமல் மேலுக்கு மேல் திட்டி கொண்டே இருந்தால் அவர்கள் நான் செய்யாத தவறை செய்தேன்.. செய்தேன் என்று கூறுகிறார்களே. நாம் ஏன் நிஜமாகவே செய்யக்கூடாது?? ஏன் திருடக்கூடாது?? ஏன் பொய் சொல்லக் கூடாது என்று நினைத்து செய்யாத தவறை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

பொய்  | A boy watch laptop
பொய் | A boy watch laptopImage credit: Gemini AI

4. நம்பாமல் இருத்தல்:

இப்ப உங்க குழந்தை ஒரு விஷயத்தை உங்களிடம் கூறினால், முதலில் அதை காது கொடுத்து நன்றாக கேளுங்கள்.. பிறகு நீ கூறினால் சரியாகத்தான் இருக்கும் என்று ஒரு நம்பிக்கையை அவர்களுக்கு கொடுங்கள்..

ஒருவேளை அந்த குழந்தை கூறுவது பொய்யாகவே இருந்தாலும் நீங்கள் விட்டுக் கொடுக்காமல் நீ சொன்னால் உண்மையாகத்தான் இருக்கும் என்று கூறுங்கள்.. அப்படி அவர்களின் பேச்சை நம்பி ஊக்குவிக்கும் பட்சத்தில் அந்த குழந்தைகளை அடுத்த முறை தானாகவே பொய் கூறுவதை நிறுத்தி விடுவார்கள்.

அதை விட்டு விட்டு, 'நீ சொன்னால் நான் நம்ப மாட்டேன்; நான் பக்கத்து வீட்டு பையனை கேட்கிறேன்; உனக்கு வாயைத் திறந்தால் பொய்தான் வரும். உன்னை யார் நம்புவார்கள்' என்றெல்லாம் சொல்லும் போது விரோதமும் கோபமும் அதிகமாகி பொய் கூறும் பழக்கமும் அதிகமாகி கொண்டே போகும். எதற்கெடுத்தாலும் பொய்யை அள்ளி வீசுய் நிலையும் ஏற்படலாம்.

5. தனித்தனி அறைகளில் வசித்தல்:

இன்றைக்கு, அம்மாக்கு ஒரு ரூம் அப்பாக்கு ஒரு ரூம் தம்பிக்கு ஒரு ரூம் தங்கச்சிக்கு ஒரு ரூம் என எல்லோருக்கும் தனித்தனியாக ஒரு ரூம் இருக்கிறது. இரவு சாப்பிட்டவுடன் எல்லோரும் தனித்தனியாக அவருடைய அறைக்குள் சென்று விடுகிறார்கள். அந்த குழந்தைகள் அந்த ரூமுக்குள் என்ன செய்கிறதென்றே தெரியாது.. கேட்டால் படித்தேன் என்று கூறுவார்கள்... பொய் சொல்வதற்கான ஆரம்பமே இந்த தனித்தனி அறைகளில் தான் இருக்கிறது. அந்த காலத்திலே கூட்டுக் குடும்பமாக ஒரு அறையிலேயே எல்லோரும் தங்கி இருந்தார்கள்.

குழந்தைகள் பொய் சொல்வதற்கும் வாய்ப்பே இல்லாமல் இருந்தது. இப்போதைய மார்டன் டெக்னாலஜியில் தனித்தனி அறையை செய்து கொள்கிறீர்கள்.. பரவாயில்லை.. ஆனால் குறைந்த பட்சம் குழந்தைகளோடு தாயோ அல்லது தந்தையோ இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த குழந்தைகளுக்கு பொய் சொல்லும் தைரியம் வராது.

இதையும் படியுங்கள்:
குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் எளிய முறையில் கண்டறிய சில வழிகள்!
பொய்  | Parent with their child

நீங்கள் பாட்டுக்கு உங்கள் ரூமில் கைப்பேசியோடு சாட் செய்து கொண்டிருந்தீர்களே.. ஆனால் அந்த குழந்தையும் அதையே செய்யும்.. கேட்டால் நன்றாக வாய்க்கூசாமல் பொய் பேசும்.. நான் ரூமுக்குள் தனியாகத்தான் இருக்கிறேன். நான் என்ன செய்கிறேன் என்று என் அம்மா அப்பாக்கு எப்படி தெரியும் என்ற தைரியம் தானாகவே வந்துவிடும்.. ஆகவே குழந்தைகளை ரூமில் தனியாக இருப்பதை தவிர்க்கவும்.

மேற்கூறிய இந்த ஐந்து தவறுகளை பெற்றோர்கள் செய்யாமல் இருந்தால் நிச்சயமாக குழந்தைகளை பொய் கூறுவதிலிருந்து காப்பாற்ற முடியும்..

உங்கள் குழந்தைகளின் மனதை ஆழமாகப் புரிந்து கொண்டு, அவர்கள் உங்களிடம் உண்மையை மட்டுமே பேசும் ஒரு ஆரோக்கியமான நம்பிக்கையான சூழலை உங்களால் உருவாக்க முடியும். இதனால் அவர்களின் எதிர்காலம் எந்தவித அச்சமும் இன்றி ஒளிமயமாய் மாறும்.

logo
Kalki Online
kalkionline.com