ஜாதகம் தேவையா? நவீன கால திருமணங்களில் நாம் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன?

ஜாதகப் பொருத்தம் மற்றும் இன்றைய கால திருமண முறைகள் குறித்த ஒரு தெளிவான பார்வை. மகிழ்ச்சியான இல்லறத்திற்குத் தேவையான விஷயங்கள்..
திருமண வாழ்க்கை| Marriage life and Horoscope
திருமண வாழ்க்கை | Marriage life and HoroscopeImage credit: AI Image
Updated on
MM strip
MM strip

மாற்றங்கள் அவசியமா? கண்டிப்பாக அவசியம். இன்னுமும் நம் நாட்டில் ஜாதகம் பார்ப்பது, பொருத்தம் பார்பது பழக்கத்தில் இருக்கு. ஏன் நான் கூட அப்படி தான். ஆனால், எங்கள் வீட்டில் நடந்ததுதையெல்லாம் பார்த்து, ஜாதகம் பார்ப்பது தேவையா..? இல்லையா..? என்கிற நிலைமைக்கு வந்துள்ளேன்.

திருமண வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாற ஜாதகம் மட்டும் போதுமா?

சில குடும்பங்களில் காதல் கல்யாணம் நடக்கிறது. அவர்கள் ஜாதகம் பார்க்க வில்லை. ஜோசியர்களும், "அது வசீய பொருத்தத்தில் நடந்த திருமணம். அவர் இருவரின் ஜாதகத்தில் பொருத்தம் அறவே இருக்காது" என்று கூறுகிறார்கள். பாக்க போனா அதுவும் சரி என்று தோன்றும். ஜாதகம் பார்த்து பொருத்தமில்லை என்று நிறைய நல்ல வரன்கள் தட்டி போகின்றன.

கடைசியில் ஏதோ ஏழு பொருத்தம் பார்த்தா போதும் கல்யாணம்ன்னு ஒண்ணு நடக்கிறதே என்று எண்ணி விடுவோம். இதனால் அந்த கல்யாணம் நடக்க போற பொண்ணும் பையனும் ஏதோ கடமை மாதிரி ஒண்ணு சேருகிறார்கள். இதனால் இருவருக்கும் மன உளைச்சல், அண்டர்ஸ்டான்டிங் பிரச்சனைகள் வருகின்றன. முடிவில் விவாகரத்து என்று முடிவெடுக்கிறார்கள்.

இல்லை ஒருத்தருகொத்தர் ஈடுபாடே இல்லாமல் ஏதோ கல்யாணம் ஆயாச்சு இனி நாம பிரிந்தால் உலகம் என்ன சொல்லும்? பெற்றோருக்கு அவமானம் என்றெல்லாம் கருதி வாழ்கிறார்கள். இதனால் குழந்தையின்மை, சின்ன வயதிலேயே பிபி, சுகர், சைக்காலஜிகல் பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது.

அப்புறம் என்ன தான் இதுக்கு மாற்றம்?

திருமண வாழ்க்கை மற்றும் மரபணு அறிவியல்; கோத்திரத்தின் முக்கியத்துவம்:

ஆன்மீகத்திலும் புராணத்திலும் திருமணம் என்பது ஆத்மாக்களின் சங்கமம். ஆத்மாக்களின் உலகத்தில் யார் அடுத்த ஜென்மத்தில் நம் அப்பா, அம்மா, சகோதர சகோதரிகள், யார் கணவன் - மனைவி, யார் நம் சந்ததியினர் என்று முடிவெடுக்கப்படுகிறது என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

திருமண வாழ்க்கை | Mental compatibility vs Horoscope
திருமண வாழ்க்கை | Mental compatibility vs HoroscopeImage credit: AI Image

அப்ப திருமணத்தினால் வரும் பின் விளைவுகளுக்கு அதுதான் காரணம் என்று இருந்து விட முடியுமா? ஒரே கோத்திரத்தில் திருமணம் கண்டிப்பா செய்ய கூடாது. இது விஞ்ஞான பூர்வமாகவும் நிரூபணம் ஆகிருக்கு. ஒரே கோத்திரத்தில் வந்த சந்ததிகளின் டிஎன்ஏ (DNA) லீனியேஜ் ஒரே மாதிரி இருக்கும். அதனால் பாரம்பரிய வியாதிகள், தோஷங்கள் மறுபடியும் மறுபடியும் திரும்பி வர வாய்ப்பு உள்ளது. அதுவும் இல்லாமல் அவர்கள் சகோதர சகோதரிகள் ஆவார்கள்.

இதையும் படியுங்கள்:
மாம்பழத் தோலை குப்பையில் வீசுவீர்களா? இனி வேண்டாம்! இதோ 5 அற்புத பயன்கள்!
திருமண வாழ்க்கை| Marriage life and Horoscope

வட இந்திய மாநிலங்களில் மாமா பையன்/பெண், அத்தை பையன்/பெண்ணை கூட அவர்கள் சொந்த சகோதர்களாக பாவிப்பார்கள். நம் தென்னிந்திய கலாசாரத்தில் இது நடப்பது வழக்கம். அது எதற்காக என்றால் சொத்து பிரச்சனை வராது; ஏதாவது கணவன் மனைவிக்கிடயே மனஸ்தாபம் வராது என்பது தான்.

இதற்கு நடுவில் எங்கிருந்தோ லிவிங் பழக்கம் ஏற்பட்டது. பையனும் பொண்ணும் மனபொருத்தத்தில் ஒண்ணாக சேர்ந்து இருக்க ஆரம்பிக்கிறார்கள். இது சரியா? இதில் காண்ட்ராக்ட் வேற சைன் பண்ணுகிறார்கள். எப்ப ஒத்து வரலையோ விட்டு விட்டு போய்டலாம் என்று. இதற்கு நடுவில் குழந்தை உண்டானால் அல்லது பிறந்தால் அதை என்ன செய்ய? ஒழுங்கா கல்யாணம் நடந்தே ஆயிரம் சந்தேகம் வரும் போது இந்த மாதிரி லிவிங் இன் ரிலேஷனிலிருந்து விட்டு போனால் யார் மதிப்பார்கள்? அவர்களின் மன நிலை எப்படி இருக்கும்?

இதையும் படியுங்கள்:
உலகை அதிரவைக்கும் கேரளாவின் இரட்டையர்கள் கிராமம் - பின்னணி என்ன?
திருமண வாழ்க்கை| Marriage life and Horoscope

திருமண வாழ்க்கை சிறக்க புரிந்துணர்வும், விட்டுக்கொடுத்தலும் ஏன் அவசியம்?

செவ்வாய் தோஷம் சனி தோஷம் என்பது பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது.

முடிவாக என்னவென்றால் லவ் மேரேஜாக இருந்தாலும் சரி; அரேன்ஜ் மேரேஜாக இருந்தாலும் சரி; கணவனும் மனைவியும் ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா சுக துக்கங்களையும் ஏத்துக்க மனம் பக்குவபடனும். முக்கியமாக இருவரும் விட்டு குடுத்து வாழனும். பொறக்கபோகிற குழந்தைகளுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.

இதுவும் கடந்து போகும்.

logo
Kalki Online
kalkionline.com