தொடர்கதை: உறவெனும் சோலையிலே - அத்தியாயம் 3

தலைமுறை இடைவெளியில் உழலும் குடும்ப உறவுகளையும் முதியோரின் மனநிலையையும் உணர்த்தும் ஒரு எதார்த்தமான கதை.
Tamil Serial story - Uravenum Solaiyile
Tamil Serial story - Uravenum SolaiyileImage Credit: ChatGPT

நான் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. கடந்த ஒரு வருடமாக சிறுகதைகள் எழுதி வருகிறேன். நடவு காலங்களின் நிதர்சனங்களும், இன்பம் துன்பம் என்று கலந்த வாழ்க்கையில், துன்பம் என்றுமே நிரந்தரமல்ல அதை மீண்டு வெற்றி கொள்ள முடியும் என்ற கருத்துகளும் இருக்குமாறு கதைக்களத்தை அமைக்க முயல்கிறேன்.

Updated on: 
MM strip
MM strip

உறவெனும் சோலையிலே - அத்தியாயம் 3

தியாகு கிளம்பிச் சென்ற இரண்டு நாட்கள் கழித்து, விசாலம் தன்னுடைய மாமியார் அருகினில் வந்தமர்ந்தாள். "இப்பல்லாம் நல்ல வசதியான முறையில் வயசானவங்கள கவனிச்சுக்க முதியோர் இல்லம் வந்துவிட்டது. நல்ல வசதிகள் நிறைந்த அறை, ஏஸி, டிவி வசதிகளுடன் உள்ளேயே லைப்ரரி, கிச்சன், சிறிய கோவில் பஜனை ஹால் நல்ல பெரிய கட்டிடங்களோடு. கூடவே உங்களுக்குப் பிடிச்ச கார்டன் இருக்கிறது. அங்கு இருப்பவர்களே தன் இஷ்டப்படி தோட்டம் அமைக்கலாம். ஒரு 6 மாதத்திற்கு 'புக்' பண்ணட்டுமா அத்தை" கேட்கும்போதே இடத்தை தீர்மானித்துவிட்டு வந்திருப்பதாக தோன்றியது

'கட்டிடம், மண், செடி, கொடி இவைகளை ரசிப்பதற்கும் நம் வீட்டாரோடு இருந்தால்தானே மகிழ்ச்சி…. நினைத்து மனதுக்குள் நகைத்தார். வேறு வழியில்லை. எதிர்ப்பதில் பயனில்லை. தனக்கும் உற்றார் வீட்டில் இருப்பதில் விருப்பமில்லை. தனியாக இருந்தால் யாருக்கும் தொல்லையில்லை. பரந்தாமனும் மனது கேட்காமல் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். '’நாமதான் அப்பப்ப கூப்பிட்டுக்க போறோமே? நாம இங்க வரும்போது நம்மளோட தானே இருக்க போறாங்க? அங்கேயே விட்டுடப் போறோமா என்ன?”

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com