சிறுகதை: பள்ளிநாள் ஞானோதயம்!

ஒருவர் கூறும் 'இல்லை' என்ற வார்த்தையின் பின்னால் இருக்கும் உண்மையான காரணத்தைப் புரிந்துகொள்ள உதவும் சுவாரஸ்யமான சிறுகதை
சிறுகதை |  Exam hall
சிறுகதை | Exam hallImage credit: Gemini AI
மும்பை மீனலதா

வணக்கம். ஆர். மீனலதாவாகிய அடியேன், என்னைப் பற்றிய சில வரிகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். **சிறு வயது முதலேயே, என்னுடன் ஐக்கியமான எழுத்து, நடிப்பு, பேச்சு, பாட்டு, விளையாட்டு, பிறர்க்கு உதவுவது, புது மாதிரியாக யோசித்து ஆர்வத்துடன் செயல்படுவது போன்ற பல செயல்கள், சீனியர் சிட்டிசன் ஆன பிறகும் தொடர்கிறது. (சகலகலாவல்லி என்று அநேகர் என்னைக் குறித்து கூறுவதுண்டு😊) **கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன். **தமிழார்வம் கொண்டவள். **அனைத்தும் டிஜிட்டல் மயமாக ஆனபோதிலும், எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, எழுதுவதை அதிகம் விரும்புபவள். **கட்டுரை, நேர்காணல், சிறுகதை, சமையல், மோட்டிவேஷன், நகைச்சுவைக்கதை போன்ற பல்வேறு விஷயங்களைக் குறித்து எழுதி வருகிறேன். **பத்திரிகைகள் அளிக்கும் ஆதரவு, புது விஷயம் எழுத அளிக்கும் தூண்டுதல், அவ்வப்போது அவர்கள் கொடுக்கும் அருமையான டிப்ஸ் ஆகியவைகள் எனது எழுத்தினை மேன்மேலும் மெருகூட்ட மிகவும் உதவியாக உள்ளன.

Updated on: 
MM strip
MM strip

ஒருவர் கூறும் 'இல்லை'க்குப் பின் இருக்கும் உண்மை தெரியாமல், நாம் அதை, அவர்களின் ஆணவமாகக் கருதக்கூடாது.

நமது பிரச்னைகளின் காரணம், மற்றவரின் கண்ணோட்டத்தைக் கவனிக்கத் தவறி விடுவதால், இல்லைக்குப் பின்னால் மறைந்திருக்கும் நன்மை சில நேரங்களில் தெரிய வருவதில்லை.

'இல்லை' எனும் வார்த்தையை பிறரிடமிருந்து கேட்க நேர்கையில், மதிக்கத் தெரிய வேண்டும். மனதில் அதைப்பற்றி தப்பாக நினைப்பதற்கு முன், சற்று நிறுத்தி, ஆழமாகச் சிந்திப்பது மிகவும் அவசியம்.

இதற்கு உதாரணமாக, எனது பள்ளியில் நடைபெற்ற ஒரு நிகழ்வினை இங்கே நினைவு கூர்கிறேன்.

எட்டாம் வகுப்பு இறுதிப் பரீட்சை சமயம், நாங்கள் எல்லோரும் மும்முரமாக ஆங்கிலப் பரீட்சையை எழுதிக்கொண்டிருந்தோம். வேறு வகுப்பு ஆசிரியர் ஒருவர் மேற்பார்வை பார்த்துக்கொண்டு ஹாலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார். கடைசி பதினைந்து நிமிடங்கள் இருக்கையில்,

எனது தோழி லோகாவும், நானும் கடமையே கண்ணாக எழுதிக்கொண்டிருந்தோம்.

லோகாவின் பின்புறம் அமர்ந்திருந்த உலகம்மாள், "என் பேனாவுல இங்க் காலியாப் போச்சு. இன்னொன்று கொண்டு வர மறந்து போச்சு. நீ வெச்சிருக்கிற ரெண்டு பேனாவில இருந்து ஒரு பேனா கொடேன். எழுதிட்டு தரேன்!" என்று லோகாவிடம் மெதுவாக கேட்கையில்,

"இல்லை. தரமுடியாது. எனக்கு வேணும். நீ ஆசிரியரிடம் கேளு! என்று முகத்தில் அடித்தாற்போல் பதிலளித்தாள் லோகா.

"என்ன இப்படி லோகா பேசுகிறாள்? உதவி பண்ண மாட்டேன்னு சட்டுனு எடுத்தெறிஞ்சு சொல்லிவிட்டாளே..."

இதையும் படியுங்கள்:
சிறுகதை: வலை!
சிறுகதை |  Exam hall

ஒரு வினாடி யோசித்த உலகம்மாள், ஆசிரியரிடம் பணிவாக பேனா கேட்கையில், அவர் "பரீட்சைக்கு ரெண்டு பேனாவாவது கொண்டுவர வேண்டாமா?" சத்தம் போட்டவாறே தன்னுடைய பேனாவைக் கொடுத்தார். பரீட்சை முடிகையில், நான் லோகாவின் பேப்பரை எதேச்சையாகப் பார்க்கையில், எழுத்துக்கள் தெளிவாக இல்லை.

வெளியே வந்தபிறகு, "உலகம்மாளுக்கு பேனா தர மறுத்ததால், உன் பேனா சரியாக எழுதவில்லை. கடவுள் உனக்கு தண்டனை கொடுத்துவிட்டார்" என நான் லோகாவிடம் கூறியதும்,

"என்னுடைய பேனா சரியில்லை. அதைச் சொன்னால், சும்மா சொல்வதாக. அவள் நினைப்பாள். அவளுக்குச் சரியில்லாத பேனாவைத்தர மனமில்லை. அதனால்தான் 'இல்லை', தரமாட்டேன் என்று ஒரேடியாகக் கூறினேன்" என்றாள் லோகா. மேலும், தன்னுடைய பாட்டி கூறிய ஒரு சிறு கதையைச் சொன்னாள்.

சிறுகதை | Flood
சிறுகதை | FloodImage credit: Gemini AI

ஒரு பறவை மழைக்காலத்தில் முட்டையிடவும் தங்குவதற்கும் வீடு ஒன்றைத் தேடியது. தன் தேடலில், அது இரண்டு மரங்களைக் கண்டது; பாதுகாப்பு கேட்டு மரங்களிடம் சென்றது. முதல் மரத்திடம் கேட்டபோது, அடைக்கலம் கொடுக்க மறுத்துவிட்டது.

ஏமாற்றத்துடன், பறவை இரண்டாவது மரத்திடம் சென்று கேட்க, இரண்டாவது மரம் சம்மதித்தது. பறவை, தன் வீட்டை அமைத்து, முட்டையிட்டது. மழைக்காலம் வந்தது. மழை மிகவும் கனமாகப் பெய்ததால், முதல் மரம் விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இதைக் கண்ட பறவை, "நீ எனக்கு அடைக்கலம் தரவில்லை. இப்போது கடவுள் உனக்குத் தண்டனை கொடுத்துள்ளார்" என்று முதல் மரத்திடம் கேலியாகச் சொன்னது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: சுய கெளரவம்!
சிறுகதை |  Exam hall

வெள்ளத்தில் சென்ற முதல் மரம், பறவையைப் பார்த்து புன்னகைத்து, "இந்த மழைக்காலத்தில் நான் பிழைக்கப் போவதில்லை என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் உனக்கு அடைக்கலம் தர மறுத்தேன். உன்னை ஆபத்தில் மாட்டிவிட விரும்பவில்லை" என்றது.

தானும் தன் பிள்ளைகளும் உயிருடன் இருக்கும் காரணத்தை பறவை இப்போது உணர்ந்ததால், அதன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

எனக் கதையை லோகா முடிக்கையில், எனது கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.

ஒருவர் கூறும் 'இல்லை' யை கோபப்படாமல் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். எதற்கும் காரண காரியம் உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com