சிறுகதை: நல்ல மனம் வாழ்க!

கல்யாண வரன் தேடிய மாமாவிற்கு ஆட்டோ கரெக்ட்டால் வந்த சோதனை - சுவாரஸ்யமான மற்றும் நகைச்சுவையான சிறுகதை
சிறுகதை | Bride's uncle search Groom
சிறுகதை | Bride's uncle search GroomImage credit: Chatgpt
வளர்கவி

இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர: வளர்கவி கோவை கவிஞர் இதுவரை 6 நூல்கள் பதிப்பித்தவர். சிறுவர்க்கான படைப்பிலக்கியத்தில் குழந்தைகளுக்கான கதைப்பாடல்கள் எழுதிவருபவர். பட்டி மன்றப் பேச்சாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், அகில இந்தியவானொலி கோவையில் 18 ஆண்டுகள் பகுதிநேர அறிவிப்பாளராகப் பணியாற்றியவர். சமூக அறிவியல் பட்டதாரி ஆசியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தினமலர் கவிதைச்சோலைப்பகுதியில் அதிக படைப்புகள் வெளியிட்டவர். சிறுவர் மணி நெய்வேலி, மாலை முரசு கோவை, பாரதி இலக்கிய அமைப்பு சென்னை, நடத்திய கவிதைப் போட்டிகளில் முதற்பரிசு வென்றவர்.

Updated on: 
MM strip
MM strip

வாழ்வில் அறிவியல் வளர்ச்சி எத்தனையோ முன்னேற்றங்களைத் தந்துதான் இருக்கிறது. என்றாலும், அறிவியலால் ஆபத்துக்களும் அபத்தங்களும் இல்லாமல் இல்லை!.

காவல் துறைக்கு ‘டிமிக்கி’ கொடுத்துவிட்டுத் தப்பியோடும் குற்றவாளிகளை அடுத்த சில நொடிகளில் பிடிக்க அறிவியல் அதென்ன, ‘ட்ரோனா??!” ஆங்க்! ஆமாம் அதுதான்.!. அது ஒரு குட்டி எரோ பிளேன் மாதிரி காடு மேடெல்லாம் துரத்தி, தோண்டித் துருவிக் கண்டுபிடித்து விடுவதைப் பாராட்டாமல் இருக்க முடியாது!

எதுக்கு வளவளன்னு பேசீட்டு??

முருகானந்தன் தன் சகோதரி மகளுக்குக் கல்யாண வரன் பார்த்துச் சொல்வதில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டான். எடுத்துக் கொள்ளாமல் நமக்கென்ன என்று இருந்திருக்கலாம் தான். ஆனால், அப்படி இருக்க  அவனால் முடியவில்லை!. அத்தனை நல்ல மனசு அவனுக்கு!.

அவன் நல்ல மனசு, அவனுக்குத் தெரிந்து என்ன?! எல்லாருக்கும் தெரிய வேண்டுமே…???!!!

இப்படி,  நினைத்ததுதான் பெரிய இக்கட்டில் கொண்டு விட்டது அவனை.

‘நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்!’ என்று நம்ம முன்னோர்கள் சும்மாவா சொல்லி இருக்கிறார்கள்??.

என்ன அறிவுறுத்தி என்ன பயன்?! அது, அந்தக் காலம்! இன்றைக்குத் தான் அறிவியல் வளர்ந்துவிட்டதே?!! அதன் துணையோடு நல்லது செய்யலாங்கற நப்பாசையில் செய்தது தலையில் இடியை இறக்கி அவர்கள் குடும்பத்தில் நிரந்தர பிளவுக்கு வழி வகுத்துவிட்டதுதான் சோகம்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ஜனநாயகி!
சிறுகதை | Bride's uncle search Groom

அவன் சகோதரி மகள் நல்லா படிச்சு ஒரு ஐடி கம்ன்பெனியில் நல்ல வேலையில் இருந்தாள். எங்கெங்கோ மாப்பிள்ளை தேடி… அலைந்து எங்கும் எதிலும் அமையாததால், இவன் ‘நான் பார்க்கிறேன்’ என்று வாக்குத்தந்து, அன்று தொடங்கி, ஒவ்வொரு நாளும் ஒரு தினசரி என விளம்பரம் பார்க்க ஆரம்பித்தான். நீங்கள் கேட்கலாம்.. எதாவது மேட்ரிமோனியலில் பதிந்து தேட வேண்டியதுதானே என்று??!! ஆனால், அதிலொரு சிக்கல் இருக்கிறது.

அதிலும் அவர்கள் பதிந்து பார்த்துவிட்டார்கள். நாம் பதிய பதிவுக் கட்டணம் என்று ஒரு பெருந்தொகையை சுருட்டிவிட்டு, கொடுத்திருக்கும் நட்சத்திரத்திற்குப் பொருந்தாதவற்றை ஐந்து, பத்து என அனுப்பி அதற்கும் காசு வசூலிப்பதைத் தொழிலாய் சில நிறுவனங்கள் செய்வதால், அந்த பிரச்சனையிலிருந்து விடுபட விரும்பித்தான் செய்தித்தாளில் பார்த்துத் தேட முடிவு செய்தான்.

அன்று வந்த விளம்பரத்தைப் படித்தால், படிப்பு, வயது, நட்சத்திரம் எல்லாம் பொருத்தமாக இருந்தது., 'சரி, இதையாவது முயற்சிப்போம்!' என்று கொடுத்த எண்ணிற்குப் போன் செய்தால், யாருமே எடுக்கவில்லை. சுவிட்சுடு ஆப் என்று வந்தது.

ஒருசமயம் என்னாச்சுன்னா??? இப்படி ஒரு நம்பரைத் தொடர்பு கொண்டபோது, மறுமுனையில் ஒரு பெண்தான் பேசினாள் நேரில் வரச்சொன்னாள்.. போய்ப்பார்த்தால்.. ‘ மாப்பிள்ளை விவரம் சொல்லனும்னா, மொதல்ல நாங்க வந்து, உங்க வீட்டை, உங்க வசதியை நிலவரத்தைப் பார்த்துதுவிட்டுத்த்தான் பையனைப் பற்றிய விவரம் தருவோம்.’ என்றாள். என்னடா வம்பாப்போச்சு?ன்னு பதறி புரோக்கருக்கே இவ்வளவுன்ன இவ காட்டப்போற பையன் எப்படி இருப்பானோன்னு பயந்து ஒதுங்கினதுதான் மிச்சம். அப்போது மணியடித்தது...!

இதையும் படியுங்கள்:
சிறுகதை: நாத்தனார் முடிச்சு!
சிறுகதை | Bride's uncle search Groom

ஒருவழியா அந்த செய்தித்தாள்  நம்பரிலிருந்து கால் வர, தொடர்பு கொண்டால், ஒருத்தர் வாட்ஸாப்பில் 'புரொபைல்' அனுப்பினார்.

அதற்குப் பணிந்து, அறிவியல் அறிவுக்கு மரியாதை தந்து சிறப்பிக்க, இவன் பெண்னைப் பற்றிய விவரங்களை டைப்பண்ணினால்… இவர்கள் இனத்தை, சொந்த ஊரை ஆங்கிலத்தில் டைப் பண்ண, அது, இவர் டைப்பண்ணினதை விட்டுவிட்டு, தன்னிஷ்டத்துக்கு எதியோ டைப்பண்ணி மாற்றி அனுப்பியது.

அன்று தொடங்கிய குழப்பம்.. குடும்பத்தைக் கூறு போட்டதுதான் மிச்சம்!. இவர், ஊர் எதோ காரைக் குடினோ என்னவோ சொந்த ஊரை டைப் செய்ய, அது செட்டிங்க்ஸில் எதோ மாற்றம் ஏற்பட்டிருக்க, ‘கரகாட்டக் காரி’ன்னு என்று டைப் செய்து அனுப்பி வைக்க., அதை சரி பார்க்காமல் விட்டது இவர் தப்பாவே இருக்கட்டும்., காரைக் குடிக்கும் கரகாட்டக் காரிக்கும் என்னய்ய்யா சம்பந்தம்??!!!.

சிறுகதை | matrimonial mishap
சிறுகதை | matrimonial mishapImage credit: Chatgpt

மாப்பிள்ளை வீட்டுக்காரன் சண்டைக்கு வந்துவிட்டார்!, நாங்க, எவ்வளவு நல்ல பெரிய ஆச்சாரமான குடும்பம் தெரியுமா?!! எங்க பையனுக்கு. என்ன தைரியம் இருந்தா கரகாட்டக் காரிப் பெண்ணை பரிந்துரைப்பேன்னு? வாய்க்கு வந்தபடி திட்ட, என்னடா அறிவியல்.. பேசாம அந்தக் கால ‘டி ஓ டி’ போன்லயே வரன், பேசியிருந்தாக் கூட, நல்லபடியா இப்பக் கல்யாணம் நடந்து முடிந்து, குழந்தை குட்டி பொறந்திருக்குமே??!! இப்போ…??

நல்ல மனம் வாழ்க! ன்னு முருகானந்தனை வாழ்த்தி  ஒருத்தர் வாழ்த்துச் சொல்லலையே???!!!

தங்கை தகராறு பண்ணி, அவள் பங்க்குக்குத் திட்டிவிட்டு ஒதுங்கிப் போய்விட, மாப்பிள்ளை வீட்டுக்காரன் மண்ணை வாரித் தூத்தாத குறையா பேசி உறவை முறிக்க, இப்ப, வாழ்க்கை வெறுத்து ஓடிப்போன முருகானந்தனை டிரோனில் தேடுகிறதாம் போலீஸ்!!!