

மகள் என்ன அப்பாவின் அடிமையா...?
“என்ன பொண்ணுனா அடிமையா...?”
“ஏய்.. அப்பன் சொல்ற பேச்சைக் கேட்டுதான் நீ நடக்கணும்...!”
“அப்பா நான் மேல படிக்கணும். எக்காரணம் கொண்டும் என் முடிவை மாற்றிக்கொள்ள மாட்டேன்...!”
“ஏய் ... என்னையே எதிர்த்துப் பேசறியா...!”
பளார்... பளார் என 2 அடிகள்.
“அப்பா நீ வைச்சு இருப்பது சின்ன பெட்டிக்கடை. அதை வைத்து நாம் முன்னேற முடியாது. நான் படிச்சு, நல்ல வேலைக்குப் போனால்தான் குடும்பம் உருப்படும்...!”
“வேலைக்கு வேறு போகணுமா கழுதை...!”
பளார்..! பளார்...!! இரண்டு பலத்த அடிகள்.
“மீறி படிச்ச, உன்னைக் கொன்னுடுவேன்...? அடிக் கழுதை...! பொண்ணு நீ... நான் சொல்வதைத்தான் கேட்கனும்...”
“இல்லை அப்பா எனக்கு18 வயது ஆகிவிட்டது. நீங்க இப்படி அடிச்சா நான் போலீசில் புகார் அளித்துவிடுவேன்...!”
பட்... பட்... பட்.... மகளைக் கீழே தள்ளி உதை உதை என உதைத்தார். அப்பவா...? இல்லை மூடன். ஆண் ஆதிக்கம் உள்ளவன். காட்டுமிராண்டி போலவே நடந்துகொண்டான்.
“அப்பா என்னை அடிக்காதிங்க ... இல்லை என்றால் போலீஸ் போய்விடுவேன்...!” எனத் தைரியமாகச் சொன்னார் ரேவதி.
கண்மூடித்தனமாக அடித்தார். ரேவதி அம்மா அழுதார். ரேவதியும் வலி பொறுக்கமுடியாமல் அழுதார்.
மேற்படி உரையாடல் மகள் ரேவதிக்கும் அவர் அப்பா நரசிம்மனுக்கும் நடந்தது. தன் குழந்தைதான் தன் அம்மாவின் சாவிற்குக் காரணம் என மூடநம்பிகையில் இருந்தார். இதற்கு நேர்எதிர் ரேவதி...
ரேவதின் +2 ரிசல்ட் நேற்றுதான் வந்தது. அவர் 96 சதவீதம் வாங்கி மாவட்டத்தில் முதல் மாணவியாக வந்தார். அவருக்குத் தொடர்ந்து தொழில் கல்வி பொறியியல் படிக்க ஆசை. அவர் JEE அகில இந்தியா. நுழைவுத் தேர்வில் 18வது ரேங்க் பெற்றார். இது ஒரு சாதனை. தமிழ்நாட்டில் முதல் மாணவியாக வந்தார். அவர் அரசு பள்ளியில் படித்ததால் அவருடைய பணச் செலவு முழுவதும் அரசே ஏற்றுக்கொள்ளும் நிலை இருந்தது. இப்போது அவர் தொழில் கல்வி படிக்க ஒரு தடையும் இல்லை..!.
ரமா டீச்சர் மீது அதிக பற்று வைத்து இருந்தார். ரமா டீச்சர் ரேவதியை தன் மகள்போல் நடத்தினார்.
ரேவதி வீட்டில் நடந்த எல்லா விஷயங்களயும் சொன்னார். தனது அப்பாவின் சித்ரவதையும் சொன்னார். ராமா மிகவும் கவலைப்பட்டார்.
“ரேவதி JEE நுழைவு தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவியாக வந்து இருக்கிறாய். மேலும் அகில இந்திய ரேங்க் 18 வது ரேங்க் வாங்கி இருக்கிறாய். உனக்கு எந்த கோர்ஸ் பிடிக்குமோ நீ விரும்பும் கல்லூரியில் நிச்சயம் கிடைக்கும். கவலைப்படாதே. நீ படித்து வேலைக்குப் போனால் உங்க அப்பாவின் ஆட்டம் முடியும். ஆமாம் எந்த கோர்ஸ் எடுக்கப் போறே...? “
“டீச்சர் தகவல் தொழில் நுட்பம்... விசேஷ பாடம் செயற்கை நுண்ணறிவு....”
“ரேவதி நீ எடுத்த முடிவு சூப்பர். கோர்ஸ்... அட்டகாசம்...! எல்லா விஷயங்களயும் அம்மாவிடம் பகிர்ந்துகொள்ளு... ஜாக்கிரதை... உன் அப்பாவின் அராஜகத்திலிருந்து தப்பிக்க கடவுளாகக் கொடுத்த வழி... பயப்படாதே...!"
டீச்சர் 5 நிமிஷங்களில் டீயுடன் வந்தார். டீ குடிக்கும்போதே ரேவதி சொன்னார்: “அப்பாவை நினைத்தால் பயமாக உள்ளது. அடிக்கிறார். உதைக்கிறார்... அம்மா என்ன செய்வார்...?“
“நீ மேஜர். நீ உன் அப்பா பிடியில் சிக்கிக்கொள்ளாதே. உன் வாழ்வே பறி போய்விடும்...! இதுவரை சாதித்தது கொஞ்சம்தான். மேலும் மேலும் சாதிக்க வேண்டும். அது ஒன்றுதான் உன் வேலை..!”
டீச்சர் ரேவதிக்கு உற்சாகம் ஊட்டினார்.
”நேரம் வரும் போது உன் அம்மாவை போய் பார். அப்பாவைக் கண்டுகொள்ளாதே.! “
“சரிங்க டீச்சர்...!”
அம்மா கேட்டார்:
“லீவு கிடைத்தால் இங்கு வருவியா...?”
“நிச்சயமாக அம்மா...! “
விடுதியில் சேர்ந்தார். ஒரு டேபிள் ஒரு நாற்காலி இருந்தது. மெஸ் சாப்பாடும் மதியம் உணவும் அருமையாக இருந்தது. ரேவதி தன் முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தினார். தனது படிப்பில் முதல் மாணவியாக வந்து அசத்தினார். உடனே அவருக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது. மாதச் சம்பளம் 1,25,000 ரூபாய். அவர் செல்லவில்லை தேச பற்றுதான்...
தான் படித்த ஐ.ஐ.டியிலே ரிசர்ச் உதவியாளர் வேலை கிடைத்தது. மாதம் உதவி தொகை ரூபாய் 25,000. ரேவதிக்கு குஷி. முதல் மாதம் உதவி தொகை வாங்கியதும் அம்மா, அப்பாவிற்கு புதுத் துணி எடுத்துக்கொண்டு போய் பார்த்தார். அம்மாவிடம் துணியைக் கொடுத்தார்.
அப்பாவிற்குத் துணியை அம்மாவிடமே கொடுத்தார். பிறகு அம்மாவிற்கு கை செலவிற்கு 5,000 ரூபாய் கொடுத்தார். அப்பாவிடம் கொடுக்க சொல்லி ரூபாய் 10,000 கொடுத்தார்.. ராமா டீச்சரைப் பார்க்கவேண்டும். அவருக்கு ஒரு சிவப்பு கலரில் பட்டு புடவை வாங்கிச் சென்றார். டீச்சர் எதற்கு இது எல்லாம் என கேட்க.... ரேவதி அது தன் கடமை என்றார்.
5 நிமிடங்களில் டீச்சர் டீ உடன் வந்தார். “இந்த ப்ரோஜக்ட் முடிந்தால் ஒரு பரீட்சை இருக்கிறது. அதில் தேர்ச்சி அடைந்தால் நீ இங்கேயே பேராசிரியர் ஆகலாம். முதலில் பேராசிரியர் ஆக வேண்டும்...”
ரேவதி பேராசரியர் ஆனார். சம்பளம் மாதம் ரூபாய் 50,000 க்கு மேல். இப்போது ரேவதி ஐ.ஐ.டி யில் ஒரு சிறந்த பேராசிரியர். பிறகு அம்மா அப்பாவை ஒரு பெரிய வீட்டிற்கு மாற்றினார். ரேவதி அப்பாவை ‘மன்னிப்போம்... மறப்போம்...! ‘ என்று அணுகினார்..
அப்பாவிற்கு வரும்போது எல்லாம் குறைந்தது ரூபாய் 10,000 அம்மாவிடம் கொடுத்து அப்பாவிடம் கொடுக்கச் சொல்வார்.. அப்பா தன் தவறை மனமார உணர்ந்தார். தான் செய்தது மிகப் பெரிய கொடுமை என்றும் உணர்ந்தார். அவருக்கும் பாடம் புகட்டினாள் ஐ.ஐ.டி. பேராசிரியர் ரேவதி...!