

"அப்பாடா… ஒரு வழியா விடிவுகாலம் பொறந்தாச்சு" என அங்கலாய்த்துக்கொண்டான் வாசு.
"என்னங்க எத்தனை மணிக்கு வருவாங்க? என்ன சொன்னாங்க?"
"ஆங்! சம்பந்தி மாமியே பேசிட்டாங்க. சாியா பத்து மணிக்கு வந்துடுவாளாம்…"
"சரிங்க… நான் சமையல் வேலைய பாக்கறேன்" என கிச்சன் பக்கம் போனாள் வாசுவின் பாாியாள் மாலா.
"ஜெயஶ்ரீ ... ஜெயஶ்ரீ… நீ எழுந்துக்கோ. குழந்தையையும் எழுப்பு. சீக்கிரம் ரெடியாகிடு. அவா பத்துமணிக்கு வராளாம்."
"சரி… சரி… அப்பா சரியா பேசிட்டேளா?"
"அப்புறம் போனவாரம் கோவில்ல வச்சு பேசினதுதான்… திரும்ப திரும்ப என்ன பேசறது" - இது வாசு.
வாசு கிச்சன் பக்கம் போனான் "ஏன்டி மாலு இதுக்கு மேல பிரச்னை செய்யமாட்டாளே ஒன்னோட பொண்ணு..."
"ஆமாம் நீங்க அவா பக்கமே பேசுங்கே..."
"இல்ல மாலு. எத்தனை தடவை சேத்து வக்கறது. கொஞ்சநாள் போனதும் வேதாளம் முருங்கைமரம் ஏறுவதும் மாப்பிள்ளை பிாிந்துபோவதும் இதே வேலையப் போச்சு... இதுக ரெண்டு பேரு சண்டைல பாவம் அந்தக் கொழந்த என்ன பாவம் செஞ்சுதோ..." தலையில் தலையில் அடித்துக்கொண்டான் வாசு.
கொஞ்சம் பிளாஷ் பேக்:
வாசு ஏதாவது ஒரு மடத்தில வேலை, ஆக்டிங் டிரைவர், சில சமயம் சமையல் வேலை, சில நாள் கூாியர் வேன் டிரைவர் வேலை,... எந்த வேலையும் நிரந்தரம் இல்லை. ஊரச்சுத்தி கடன். நல்லவேளை ஒரே பொண்ணோட நிறுத்திவிட்டான்.
மாலா ஹவுஸ் ஒய்ப் நகை ஆசை பிடிச்சவ. அப்பப்ப கடன். அப்பா அம்மாவுக்குள் சண்டை, இதையெல்லாம் பார்த்து பாா்த்து வாழ்க்கை வெறுத்துப்போச்சு.
ஊரச்சுத்தி கடன் அதோட ஐெயஶ்ரீ டபுள் டிகிாி வாங்கிட்டா .
கடனை அடைக்கணும். மகளை கரை சேக்கணும் . பூா்வீக வீட்டை வித்து கடனை அடைச்சான்.
மீதி இருந்த பணத்துல அருமை பொண்டாட்டிக்கு மூனு பவுன் செயின் வாங்கிட்டான் வாசு.
"பெண்ணோட கல்யாணம் என்ன செய்யப்போற? என வாசு கேட்டான்.
பட்டென பதில் சொன்னாள் மாலா. "எங்க அண்ணா தம்பி கொஞ்சம் ஒத்தாசை பண்ணுவா. நீங்க உங்க அக்கா அத்திம்போ்கிட்ட கொஞ்சம் கேளுங்க... அப்புறம் உங்க அக்கா பையன் வரதுதான் வைதீகம் பாக்கறானே! அவன் மூலமா காஞ்சி மடத்தில சொல்லி கல்யாணத்துக்கு உதவி கேக்கச் சொல்லுங்கோ, மரம் வெச்சவன் தண்ணி ஊத்தாமலா போயிடுவான்.
அவன் மூலமாகவே வரன் வந்தா ஏற்பாடு செஞ்சுடலாம்" என்று கூறியிருந்தாள் மாலா.
அதேபோல திருவையாறு பக்கம் வைதீகாள் வரன் வந்தது. பையன் வைதிகத்தில கைநிறைய சம்பாதிக்கறான். அவாளுக்கு கல்யாணத்திற்குப் பெண் கிடைக்கல. நாங்க எதையும் எதிா்பாக்கலே முடிஞ்சதை செய்யுங்கோ... என்றாா்கள். பெண் பாா்த்து புடிச்சுப்போய் பரஸ்பரம் முடிவு செய்துவிட்டாா்கள். பையனுக்கு அப்பா இல்ல. அம்மா மட்டும்தான். பலபோ் நிறைய உதவி செஞ்சா பையனோட தாத்தாவுக்கு வைதீகா குருப் அதிகம். அவா் தலையிட்டு பலபோ்கிட்ட உதவி கேட்டு கல்யாணமும் கும்பகோணம் காமாட்சி ஜோசியர் தெருவில மடத்துக்குச் சொந்தமான மண்டபத்தில விவாஹம் வேதமந்திரங்களோட நடந்தது. அவ்வளவுதான்.
ஜெயஶ்ரீ கர்ப்பமானா ரெண்டு மாசத்தில சண்டை. அப்போது வந்தவதான். பையன் பொறந்தான். மாப்பிள்ளை ஆஸ்பத்திாிக்கு வந்தான். அப்ப மாமியாருக்கும் மாப்பிள்ளைக்கும் சண்டை... அவ்வளவுதான் ரெண்டு வருஷம் கழித்து பல சொந்த பந்தங்கள் பேசி முயற்சி செஞ்சு திரும்பவும் பல கன்டிஷனோட சோ்ந்து வாழ்ந்தாா்கள். அதாவது மாப்பிள்ளையோட அண்ணா மண்ணி மாமா, மாமி, தாத்தா, பாட்டி இவா யாரும் வரக்கூடாது.
அம்மா அப்பா கூடதான் நானு இருப்பேன். சம்மதம்னா சோ்ந்து வாழலாம்.
அதோட வருமானம் முழுக்க எங்கிட்ட வரணும். அத்தனை கன்டிசன்களுக்கும் ஓகே சொல்லி கொஞ்சநாள் வாழ்ந்தாா்கள்.
பின்னர் யாரோ ஏதோ பேச, சந்தேகப்பட்டு நீ உன்னோட அண்ணா மன்னியோடவே சேர்ந்து வாழ்ந்துக்கோ... எனச் சொல்லி அவனை விரட்டியதுதான் மிச்சம்.
பிாிவதும் சேர்ந்து வாழ்வதுமா வாழ்க்கைல ஒரு பிடிமானம் இல்ல.
அப்புறம் மறுபடியும் ஆறு மாதம் கழிச்சு மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தி, இன்னைக்குதான் சோ்ந்து வாழப்போறாங்க. அதுக்காகத்தான் அத்தனை பேரும் வராங்க.
மணி பத்து. இரண்டு இன்னோவா வாசலில் நின்றது பையனோட பந்துக்கள் அனைவரும் வந்தாா்கள். சாப்பாடு முடிந்தது. சரி... பொண்ணு கன்டிஷன்படியே எங்காத்து பையனை உங்க பொண்ணுகிட்ட ஒப்படச்சுட்டோம். பையன் போ்ல உள்ள ஏடி எம் காா்டு, செக் புத்தகம், பாஸ் புத்தகம், அவனோட துணிமனிகள், அவன்போ்ல உள்ள வீடுபத்திரம், பத்து பவுன் நகை, வைரமூக்குத்தி எல்லாத்தையும் மாட்டுப்பெண்கிட்ட கொடுக்கறேன். அவபோ்ல லேடீஸ் பைக் புக்கிங் ஆயிடுத்து. இந்தாம்மா காா் சாவி. உன்னோட ஏடிஎம் காா்டு நீயே வச்சுக்கோ. அவன் வைதீகம் போயிட்டு வந்தா கிடைக்கும் வருமானத்தை உங்கிட்டவே கொடுத்திடுவான் போதுமா... இதத்தானே நீ எதிா்பாா்த்தே.
அப்புறம் ஒன்னோட பேச்சை பையன் மீறமாட்டான். வருஷா வருஷம் அவ அப்பா சிராா்த்தம் மட்டும் செய்யறதுக்கு பர்மிஷன் கொடு. அதோட இந்தப் பத்திரத்தை வாங்கி படிச்சுப்பாரு. எங்க பிள்ளைக்கும் எங்களோட சொந்த பந்தங்களுக்கும் வாழ்ந்தா, செத்தா, ஒட்டுமில்ல உறவும் இல்லைன்னு எழுதிட்டோம்.
அத்தனை பேரும் கையைழுத்தும் போட்டாச்சு. நாங்க போறோம். அவன் பசி தாங்க மாட்டான். வேளாவேளைக்கு சாப்பாடு மட்டும் போட்டா போதும். அவன் வெகுளி. ஒன்னும் சூது வாதெல்லாம் தொியாது. ஜாக்கிரதையா பாத்துங்கோ... நீ நம்ம சாஸ்திர சம்பிதாயப்படி மடிசாரெல்லாம் கட்டிக்க வேண்டாம். உன்னோட விருப்பப்படியே நைட்டி, சுடிதாா் போட்டுக்கோ. குடுமி வெச்சிண்டிருக்கான். அதனால அவன்கூட நீ எங்கேயும் போகவேண்டாம்" என கூறிவிட்டு "சம்பந்தி எங்க கண்ணையே உங்ககிட்ட ஒப்படைக்கறோம் ஜாக்கிரதையாய் பாத்துங்கோ..." என பையனின் தாயாா் கண்களைத் துடைத்தவாறே அனைவரையும் அழைத்துக்கொண்டு வெளியேறினாா்கள். வீடே அமைதியானது. ஒரு காா் மட்டும் புறப்பட்டது.
கணவனை அழைத்துக்கொண்டு ஜெயஶ்ரீ அவர்கள் அறைக்குப் போனாள்.