38 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் பங்க் மூடும் நாளில் குவிந்த மக்கள்; கிலோமீட்டர் நீள வரிசை!

2.20 யூரோ விலையுள்ள பெட்ரோல் வெறும் 1 யூரோவுக்கு..! வாகன ஓட்டிகளுக்குக் கிடைத்த ஜாக்பாட் சலுகை!
petrol bunk
petrol bunk source:https://www.mobilityenergy.com/
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on: 

38 ஆண்டுகாலப்  பெட்ரோல் பங்க்கின் வித்தியாசமான பிரியாவிடை – நீண்ட வரிசைகள், போக்குவரத்து நெரிசல், மக்களின் உற்சாகம்!

நெதர்லாந்தின் கெல்டர்லாந்து மாகாணத்தில் உள்ள வூர்ஸ்ட் என்ற சிறிய கிராமத்தில், ஒரு பெட்ரோல் நிலையம் 38 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. அது நிரந்தரமாக மூடப்படும் சூழ்நிலையில் தனது கடைசி நாளில் நடத்திய அதிரடி விலைச் சலுகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அங்கே அக்டோபர் 24, 2026 அன்று, மாலை 4 மணி முதல் 5 மணி வரை பெட்ரோலும் டீசலும் லிட்டருக்கு வெறும் ஒரு யூரோவுக்கு விற்பனை செய்யப்பட்டன.

வூர்ஸ்ட் கிராமத்தில் அமைந்திருந்த இந்த நிலையத்தை டி க்ரூன் குடும்பம் நடத்தி வந்தது. பல ஆண்டுகளாக உள்ளூர் மக்களுக்குச் சேவை செய்த இந்தத் தொழிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.

காரணம், இப்போது அந்த பெட்ரோல் பங்க் செயல்பட்டு வரும் இடத்தை ஒரு பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் வாங்கி, அங்கே வீடுகள் உள்ளிட்ட புதிய வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடைசி நாளில் காலை 8 மணி முதலே வாடிக்கையாளர்களுக்குச் சலுகைகள் வழங்கப்பட்டன. ஆனால் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பு மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலான ஒரு மணி நேரச் சலுகைதான்.

அந்த நேரத்தில் பெட்ரோலும் டீசலும் லிட்டருக்கு €1 என்ற விலையில் விற்கப்பட்டன. அதற்கு முன்பு பெட்ரோல் லிட்டருக்கு சுமார் €2.139, டீசல் €2.269 என்ற விலையில் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சில கட்டுப்பாடுகளும் இருந்தன. ஒரு வாகனத்துக்கு அதிகபட்சம் 100 லிட்டர் மட்டுமே விற்பனை செய்யப்படும். தனியாகக் கொண்டுவரப்படும் எரிபொருள் கேன்களில் பெட்ரோல் அல்லது டீசல் நிரப்ப அனுமதி இல்லை. மாலை 5 மணிக்கு நிலையம் மூடப்படும்; அதற்குப் பிறகு சலுகை கிடையாது.

சலுகை மாலை 4 மணிக்குத் தொடங்கினாலும், சில வாகன ஓட்டிகள் பிற்பகல் 1.30 மணிக்கே வரிசையில் காத்திருக்கத் தொடங்கிவிட்டனர். நேரம் நெருங்க நெருங்க, வாகனங்கள் கிராமத்தின் நீளத்துக்கு வரிசையாக நின்றன. எதிர்ப்புறத்தில் இருந்த மற்றொரு தானியங்கி பெட்ரோல் நிலையத்தின் வளாகத்திலும் கார்கள் நிரம்பின. வெகு தொலைவில் இருந்தும் இந்தச் சலுகை மூலம் பயன் பெற பலர் வந்திருந்தார்கள்.

நிலையத்தின் கடைசி நாள் எரிபொருள் விற்பனையுடன் மட்டும் முடிவடையவில்லை. குறைந்தது 20 லிட்டர் எரிபொருள் வாங்கியவர்களுக்கு இலவசக் கார் வாஷ் வழங்கப்பட்டது. மேலும், அதிர்ஷ்டச் சக்கரத்தைச் சுழற்றி இலவசமாக எரிபொருள் நிரப்பும் வாய்ப்பையும் வாடிக்கையாளர்கள் பெற்றனர். குழந்தைகளுக்காக ஐஸ்கிரீம் மற்றும் விளையாடுவதற்கான பந்து நிரம்பிய சிறிய விளையாட்டுப் பகுதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆக மொத்த்ம் ஒரு கோலாகலமான மூடுவிழா!

டி க்ரூன் குடும்பத்தினர் வேறு ஒரு இடத்தில் பெட்ரோல் பங்க்க் திறப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
கார்கள் நிறுத்துவதற்கு ஒரு ஊரு தேவையா? நகர்ப்புறங்களின் புதிய தலைவலி!
petrol bunk
logo
Kalki Online
kalkionline.com