புதிய சிக்கலில் ஜனநாயகன்.! தேர்தல் ஆணையத்தை களமிறக்கிய சென்சார் போர்டு.!

Jananayagan Censor issue
Jananayagan Censor issue
Published on

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி 9-ம் தேதியன்று வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக, படம் தற்போது வரை வெளியாகவில்லை.

கடந்த சில நாட்களாக ஜனநாயகன் சென்சார் தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், படத்தை மறுதணிக்கை செய்வதற்கு படக்குழு ஒப்புக்கொண்டது. இதன்படி கடந்த வாரம் மறுதணிக்கை செய்யப்பட இருந்தது. ஆனால், தணிக்கை அதிகாரி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்தப் பணி தள்ளி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று மும்பையில் ஜனநாயகன் திரைப்படத்தின் மறுதணிக்கை நிறைவு பெற்றது. இந்நிலையில் அரசியல் காட்சிகள் இப்படத்தில் இருப்பதால், தேர்தல் அதிகாரிகள் ஜனநாயகன் படத்தை பார்க்க வேண்டும் என தணிக்கைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி திரைப்படத்தின் மறு ஆக்கமாக ஜனநாயகன் படம் உருவாக்கப்பட்டிருந்தாலும், இதில் விஜய்க்காக சில அரசியல் தொடர்பான காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இப்படத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்க்க வேண்டும் என மறுதணிக்கை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறார் விஜய். இந்நிலையில் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன், அரசியல் பேசும் படமாக இருப்பதால் தணிக்கைக் குழு அதிகாரிகள் இப்படத்தை தேர்தல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஏற்கனவே படம் கடந்த இரண்டு மாதங்களாக வெளியிடப்படாமல் இருக்கும் சூழலில், தற்போது தேர்தல் அதிகாரிகளின் கவனத்திற்கு செல்வதால் படம் வெளியாவதில் மேலும் காலதாமதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிகளில் அதிகாரிகள் முழு மூச்சுடன் செயல்பட்டு வரும் சூழலில், ஜனநாயகன் திரைப்படத்தை எப்போது பார்ப்பார்கள் என்பது இனி தான் தெரிய வரும்.

ஏற்கனவே ஜனநாயகன் திரைப்படத்தில் சில இடங்களை கட் செய்யுமாறு தணிக்கைக் குழு தெரிவித்திருந்தது. இதன்படி மறுதணிக்கை முடிந்திருக்கும் நிலையில், தேர்தல் அதிகாரிகள் இப்படத்தை பார்த்த பிறகு மீண்டும் கட் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் சென்சார் சான்றிதழ் வழங்குவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
இனி தபால்கள் மின்னல் வேகத்தில்! அஞ்சல் துறையின் புதிய சேவை அறிமுகம்..!!
Jananayagan Censor issue

இதன் காரணமாக ஜனநாயகன் திரைப்படம் தேர்தலுக்கு முன்பாக வெளிவருமா அல்லது தேர்தலுக்குப் பிறகு வெளிவருமா என்பது தேர்தல் ஆணைய அதிகாரிகளின் முடிவில் தான் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஜனநாயகன் திரைப்படம் தேர்தலுக்கு முன்பு வெளியாவது சந்தேகம் தான் எனக் கூறப்படுகிறது. ஒருவேளை வெளியானாலும், படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டுமா என்பதும் சந்தேகம் தான். ஏனெனில் தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் சூழலில், ஜனநாயகன் வசூல் குறைய வாய்ப்புள்ளது

இதையும் படியுங்கள்:
பொன்வண்டு - கொடுக்காப்புளி மரம்; என்ன கனெக்ட்?
Jananayagan Censor issue

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com