பரபரக்கும் அரசியல் களம் : துணை முதல்வர் சீமான்.. ஆதவ் அர்ஜுனா பேசிய டீல்..!

எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்தால் துணை முதல்வர் ஆக்குவதாகக் கூறியதாகக் சீமான் பரப்பரப்பு குற்றச்சாட்டு.
Seeman
Seemanimage credit-@ABP Nadu
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்தால் என்னை துணை முதலமைச்சர் ஆக்குவதாகச் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பது அரசியல் வட்டாராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களத்தில் உள்ள கார்த்திகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

தொண்டர்கள் மத்தியில் பேசிய சீமான், நீண்ட காலமாக இந்த மண்ணில் நிலவும் தீய அரசியல், ஆட்சி முறையை மாற்றி தூய அரசியலை கொண்டுவர போராடுகிறோம். ஒரு இடம் கூட வெல்ல முடியாவிட்டாலும், கொள்ளை கோட்பாட்டில் சமரசமின்றி பயணித்து வருகிறோம் என்றார்.

எந்த கட்சியோடும் கூட்டணி அமைத்து இடம் வாங்கி, பணம் பெற்று இருக்கலாம். ஆனால் எங்கள் தலைவர் சரணடைவதை விட, சண்டை செய்ய கற்று தந்துள்ளனர். இன்று திமுக கூட்டணி கட்சிகள் எங்கே உள்ளது? இது தன்மானம் மிக்கவர்களுக்கு ஏற்புடையது அல்ல. சீமான் ஏன் தனித்து நிற்கிறார் என்றால் என் மக்கள் கைவிட மாட்டார்கள் என்ற எண்ணத்தால் தான்.

இந்த தேர்தலில் ஏன் எம்எல்ஏ பதவி விலகினார்? என யாரும் கேட்கவில்லை? மாற்றுக்கட்சிக்கு செல்லவேண்டிய அவசியம் என்ன? எப்படி பார்த்தாலும் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்கள் என்பதால் நிற்கிறார்கள். ஊழல் சக்தி என்றார். அங்கு வெற்றி பெற்றவர்களைத்தான் கூட வைத்துள்ளார். துவைத்து சுத்தம் செய்ய அவர் என்ன வாஷிங்மெஷின் வைத்துள்ளாரா? என்று கூறினார்.

நாங்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி திராவிட கட்சிகளுக்கு எதிராக அரசியலை கட்டமைத்து வைத்தோம். ஆனால் தம்பி விஜய் அதை அறுவடை செய்துவிட்டார். தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை என்று எந்தப் போராட்டமும் அவர்கள் நடத்தியதில்லை.

aadhav arjuna |சீமான் ஆஃபர்
aadhav arjuna |சீமான் ஆஃபர்image source:thehindu

850 மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு மீனவன் வீட்டிற்கு போய் ஆறுதலாக, பரிவை, பாசத்தை காட்டினீர்களா இல்லை, லட்சக்கணக்கான மக்கள் ஈழத்தாயகத்தில் கொள்ளப்பட்டனர். அவர்களுக்காக நின்று களத்திலே போராடி இன உணர்வை, மான உணர்வை காட்டினீர்களா?, ஆனால் ஒன்றரை ஆண்டுகளாக இதற்காகவே போராடி ஜெயிலுக்கு போனவன் நான். ஆனால் நீங்க ஜோசியர் சொன்னாருன்னு சும்மா ஜெயிலை பார்க்க போனீங்க.

இதையும் படியுங்கள்:
நாதக வேட்பாளர்கள் எப்போது அறிவிப்பு? சீமான் வெளியிட்ட மாஸ் அப்டேட்!
Seeman

சினிமாவில் பஞ்ச் டயலாக் பேசியதை, சட்டசபையில் காட்டிக்கொண்டிருக்கிறார். மக்களின் பிரச்னைகளை மனதில் இருந்து பேச தெரியாதவர்கள் அவர்கள். குறிப்புகளை வைத்துக் கொண்டு பேசுபவர்கள் தலைவர்கள் கிடையாது. குறிக்கோளுடன் பேசுபவர்கள்தான் தலைவர்கள். ஆட்டுக்கு இருக்கும் மூளை கூட தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இருப்பவர்களுக்கு கிடையாது என்றார்.

மேலும், எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்தால் என்னை துணை முதலமைச்சர் ஆக்குவதாகச் (சீமான் ஆஃபர்) சொன்னார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்பதால் வேளாண்துறை அமைச்சர் ஆக்குகிறோம் என்றார். எங்களுக்கு உடன்பாடு இல்லை என வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டோம்.

நானும், விஜய்யும் வாகனத்தில் போனபோது எப்படி ஊழலை ஒழிப்பது பற்றி என்னிடம் கேட்டார். ஆனால் அவருக்கே 100 கோடி வரி தொடர்பான வழக்கு உள்ளது. பிறகு எப்படி ஊழலை ஒழிப்பார். கோவில் கும்பாபிஷேகத்தில் டிக்கெட் விற்றவர்கள், என்னை திரள்நிதி என பேசுகிறார்கள். சினிமாவில் நடித்த போது பிளாக்கில் டிக்கெட் விற்றார்கள்.

இதையும் படியுங்கள்:
கைது செய்யும் அளவிற்கு உதயநிதி பெரிய ஆள் இல்லை - ஆதவ் அர்ஜுனா அட்டாக்..!!
Seeman

இப்போது கோவிலில் டிக்கெட் விற்கிறார்கள். நான் திரையில் இருந்து வரவில்லை சிறையில் இருந்து வந்துள்ளேன். ரசிகர் மன்றம் வைத்து வரவில்லை. கருத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் தான் என்னோடு உள்ளனர். எனது ஆட்சியில் எல்லாம் தரமாக இருக்கும் என்று பேசினார்.

logo
Kalki Online
kalkionline.com