சாதா பெட்ரோல் vs பிரீமியம் பெட்ரோல்: உங்க வண்டிக்கு எது செட் ஆகும்?

உங்க பைக்குக்கு பிரீமியம் பெட்ரோல் தேவையா? உண்மையை உடைக்கும் அறிவியல் காரணங்கள்!
பிரீமியம் பெட்ரோல் - normal petrol mileage
பிரீமியம் பெட்ரோல் - normal petrol mileage
A.N.ராகுல்

அனைவருக்கும் வணக்கம் என் பெயர் ராகுல் நான் ஒரு பொறியியல் பட்டதாரி, தமிழின் மீது உள்ள ஆர்வத்தால் எழுத்து துறையில் என்னை இணைத்துள்ளேன். என்னுடைய பொதுவான குறிக்கோள் நான் செய்யும் விஷயங்களால் மற்றவர்கள் பலனடைய வேண்டும் என்பதே, அதை என் தாய்மொழி மூலம் இந்த எழுத்து துறையின் வாயிலாக பங்காற்ற விரும்புகிறேன். ஆக வாசகர்களே நீங்கள் என் சேகரிப்புகளை பொழுதுபோக்கு, பொது அறிவு என்று எந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இறுதியில் நீங்கள் பெரும் அந்த திருப்திகரமான உணர்வே, நான் எழுதுவதற்கு கிடைத்த பலன்.

Updated on: 

சமீபத்துல என் பைக்ல பெட்ரோல் போட பங்க் போனப்போ, அங்க இருந்தவர் சாதா பெட்ரோலா இல்ல பிரீமியம் பெட்ரோலான்னு கேட்டார்.

அப்போதான் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. நம்ம ஊர்ல ஓடுற ஸ்பிளெண்டர், பல்சர், ஆக்டிவா பைக்ல இருந்து, சாதாரண சின்ன பேமிலி கார் வரைக்கும் எல்லாமே 91 ஆக்டேன்(91 RON) அளவு இருக்குற சாதா பெட்ரோலில் சூப்பரா ஓடுற மாதிரிதான் கம்பெனி டிசைன் பண்ணியிருக்காங்க. ஆனா ஒரு நாள் ஆசைப்பட்டோ இல்ல தெரியாமலோ; ஸ்பீடு (Speed), பவர் (Power), XP95 போன்ற ‘காஸ்ட்லியான’ பிரீமியம் பெட்ரோலை யூஸ் பண்ண, வண்டிக்கு ஏதாச்சும் ஆபத்து வருமானு சந்தேகம் வந்துருச்சு!

நா அதைப் பத்தி கொஞ்சம் ஆழமா தேடிப் பார்த்தப்போ எனக்கு பல ஆச்சரியமான விஷயங்கள் கிடைச்சது!. நிஜத்துல, கம்மி சிசி வண்டிகளுக்கு இதனால ஒரு கெடுதலும் வராதுங்க. இன்ஜின் எப்பவும் போல நார்மலா ஓடும். ஏன்னா சாதா பெட்ரோல் என்ஜினுக்கும், பிரீமியம் பெட்ரோலுக்கும் எந்த மிக்ஸிங் பிரச்னையும் வராது.

இதையும் படியுங்கள்:
பெட்ரோல் விலை மீண்டும் உயர காரணம் இதுதான்.! இது நடந்தால் தான் விலை குறையுமா.?
பிரீமியம் பெட்ரோல் - normal petrol mileage

அமெரிக்க எரிசக்தித் துறையோட ஒரிஜினல் (fueleconomy.gov) வெப்சைட் படி பார்த்தா, சாதா வண்டிகளுக்கு எக்ஸ்ட்ராவா காசு குடுத்து பிரீமியம் பெட்ரோல் போடுறதுனால சாதாரணமா ஓட்டும்போது எந்த பயனும் கிடைக்காதாம்.

இதுக்கு பின்னாடி இருக்குற இன்ஜின் ரகசியம் என்ன தெரியுமா? பிரீமியம் பெட்ரோலில் அதிக பவர் இருக்குன்னு நிறைய பேர் தப்பா நினைக்கிறாங்க. ஆனா சயின்ஸ்படி ஆக்டேன் (Octane) அப்படிங்குறது பெட்ரோலோட பவர் கிடையாது.

‘பெட்ரோல் ரொம்ப சீக்கிரமா (முன் கூட்டியே) எரிஞ்சு இன்ஜினில் இருந்து 'கட கட'னு ஒரு நாக் (Knocking) சத்தம் வரும்ல, அந்த சத்தத்தையும், வண்டி அதிர்வையும் தடுக்கிறதுதான் இந்த ‘ஆக்டேனோட’ வேலையே. அதிக கம்ப்ரஷன் ரேஷியோ(Compression Ratio) இருக்குற டாப் லெவல் ரேசிங் வண்டிகளுக்கும், டர்போ சார்ஜ்ர் உள்ள கார் என்ஜின்களுக்கும்தான் இந்த ‘நாக்’ வராம இருக்க பிரீமியம் பெட்ரோல் தேவைப்படும்.

நம்ம ஊர்ல ஓடுற சாதாரண சின்ன வண்டிகளுக்கு இந்த எக்ஸ்ட்ரா பாதுகாப்போ, இல்ல அந்த 'கட கட' சத்தத்தைக் கம்மி பண்ற வசதியோ தேவையே கிடையாது. ஏன்னா இன்ஜின் அந்தளவுக்கு ‘ட்யூன் (Tuning) பண்ணியிருக்க மாட்டாங்க’. அமெரிக்காவோட AAA (gas prices.aaa.com) எரிபொருள் ஆராய்ச்சி கம்பெனி தெளிவா செக் பண்ணி என்ன சொல்லியிருக்காங்கன்னா, சாதா வண்டிகளில் பிரீமியம் பெட்ரோல் போடுறதுனால மைலேஜோ, பவர், இல்ல புகை வெளியாவறதோ எந்த ஒரு மாற்றமும் தராதுனு சொல்றாங்க.

பிரீமியம் பெட்ரோல் - normal petrol mileage
பிரீமியம் பெட்ரோல் - normal petrol mileage

இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னன்னா, பிரீமியம் பெட்ரோல் வண்டிக்கு தர பில்டப்ப விட, நம்ம மைண்டுக்குத்தான் அதிக பில்டப் தருது. பங்க்ல அதிக காசு குடுத்து பெட்ரோல் போட்டதும்; ‘நாம என்னமோ பெருசா பண்ணின மாதிரி தோணும்’. அதனால வண்டி செம ஸ்மூத்தா போற மாதிரி ஒரு நெனப்பு வரும்.

ஆனா, நிஜத்துல நம்ம ஓட்டுற ஸ்டைல்தான் காரணம்; பெட்ரோல் இல்ல. உங்க வண்டிக்கு எந்த பெட்ரோல் பெஸ்ட்னு தெரிஞ்சுக்க உங்க வண்டியோட ஒரிஜினல் ‘ஓனர் (Owner’s) மேனுவல்’ புக்கைப் படிக்கிறதுதான் இதுக்கு ஒரு நல்ல சாய்ஸ்.

பல பேருக்கு ஆச்சரியம் தர ஒரு உண்மை என்னன்னா, பிரீமியம் பெட்ரோல் ஒன்னும் ‘சீக்கிரம் பத்திக்கிற பேப்பர் கிடையாது’. அது சாதா பெட்ரோலை விட லேட்டாதான் எரியும்.

நம்ம இந்தியன் ஆயில் கம்பெனியோட (iocl.com) XP95 பெட்ரோல் 95 ஆக்டேன்(octane) கொண்டது. இது என்ஜின் அதிர்வை கம்மி பண்ணி இன்ஜினை கிளீனா வச்சுக்கும். சோ, இதோட முழு பலனும் பெரிய CC, ரேஸ் பைக், டர்போ சார்ஜர் இருக்குற காருக்குத்தான் கிடைக்கும்.

அப்புறம் இதெல்லாம் சும்மா வதந்தி கிடையாதுங்க; அமெரிக்க எனர்ஜி டிபார்ட்மெண்ட், AAA ரிசர்ச், நம்ம இந்தியன் ஆயில் ரூல்ஸ்னு எல்லா ஒரிஜினல் தகவலையும் செக் பண்ணிட்டுதான் சொல்றேன். அதனால 100% தைரியமா நம்பலாம். காசை வீணா வேஸ்ட் பண்ணாம ஸ்மார்ட்டா யோசிங்க. உங்க நண்பர்களுக்கும் இதை டக்குனு ஷேர் பண்ணிடுங்க.

இதையும் படியுங்கள்:
பெட்ரோல் vs எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: எதை வாங்குனா நிஜமா லாபம்? முழு அலசல்..
பிரீமியம் பெட்ரோல் - normal petrol mileage
logo
Kalki Online
kalkionline.com