

டெஸ்ட் கிரிக்கெட் (Test Cricket) வரலாற்றில் இரண்டு டெஸ்டுக்கள் சமமான ஸ்கோர்களினால் டை (Tie) ஆனதுண்டு. மூன்று இன்னிங்ஸ்கள் முடிவில் ஸ்கோர் சமமான நிலையில் வெற்றி பெற தேவையான அந்த 1 ரன்னுக்காக மட்டும் பீல்டிங் அணியின் 11 வீரர்களும், பேட்டிங் அணியின் இரண்டு துவக்க வீரர்களும் மைதானத்தில் களம் இறங்கி டெஸ்ட் மேட்சை சுமுகமாக முடித்து வைத்த நிகழ்வுகளும் உண்டு!
அப்படிப்பட்ட அரிய டெஸ்டுக்களிலும், நான்காவது இன்னிங்சில் வீசப்பட்ட முதல் ஒரு பந்தில் வெற்றிக்கு தேவையான அந்த 1 ரன் எடுக்கப்பட்டது 4 டெஸ்டுக்களில் மட்டும்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்ற மூன்று டெஸ்டுக்களில் முதல் ஓவரில் எடுக்கப்பட்டது. அவற்றின் விவரங்கள் குறித்து இங்கு காண்போம்.
01. 1921 ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகள் (26 - 29 நவம்பர், 1921) கேப் டவுன்:
முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி ஆல் அவுட் 180 ரன்கள். பில்லி ஸுிச் என்ற துவக்க வீரர் 50 ரன்கள்.
ஆஸ்திரேலிய பவுலர்கள் ஆர்த்தூர் மைய்லே 4, டெட் மக்டொனால்ட் 3 விக்கெட்டுக்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணி ஸ்கோர் 396 ரன்கள். ஜாக் ரைடர் சதம் 142 ரன்கள் (பவுண்டரிகள் 12), கேப்டன் காலின்ஸ் 54 ரன்கள், தென் ஆப்பிரிக்க பவுலர்கள் ஜிம்மி ப்ளான்கன்பர்க் 4, கிளவுடி கார்ட்டர் 3 விக்கெட்டுக்கள் எடுத்தனர்.
இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் பரவலாக ஆடி சேர்த்த ரன்கள் 216. ஆஸ்திரேலிய வீரர் சார்லஸ் மேகார்ட்னி 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
ஆஸ்திரேலியாவின் ஆர்த்தூர் மைய்லே துவக்க வீரராக களம் இறங்கி வெற்றி இலக்கான 1 ரன்னை எடுத்தார்.
02.1932 இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் (02 - 07, டிசம்பர், 1932) சிட்னி:
புகழ்பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனி இடம் பிடித்துள்ள 'பாடிலைன்' (Body line) தொடரின் முதல் டெஸ்ட் இது.
இங்கிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளர் ஹரோல்டு லார்வுட் அவரது மிரட்டலான பவுலிங்கால் இரண்டு இன்னிங்ஸ்களிலும் தலா 5 விக்கெடுக்கள் வீதம் இந்த டெஸ்டில் மொத்தம் 10 விக்கெடுக்கள் வீழ்த்தி அசத்தினார்.
இவரது ஜோடியான பில் வோஸ் மொத்தம் 6 விக்கெட்டுக்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டான் மக்கபே 187 ரன்கள் நாட் அவுட் (எதிர் கொண்ட பந்துக்கள் 233, பவுண்டரிகள் 25).
இங்கிலாந்து அணியில் மூன்று சதங்கள். துவக்க வீரர் ஹர்ரபர்ட் சுட்ச்லிஃப் 194 ரன்கள் (எதிர் கொண்ட பந்துக்கள் 496, பவுண்டரிகள் 13).
வால்லி ஹம்மோண்ட் 112 ரன்கள் (எதிர் கொண்ட பந்துக்கள் 242, பவுண்டரிகள் 16), இப்திகார் அலி கான் பட்டோடி 102 ரன்கள் (எதிர் கொண்ட பந்துக்கள் 380, பவுண்டரிகள் 06)
இந்த அறிமுக டெஸ்டிலேயே சதம் எடுத்து அசத்தினார் இந்த பட்டோடி.
இவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆக திகழ்ந்த நவாப் ஆப் பட்டோடியின் தந்தை ஆவார். ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்சில் ஜாக் பிங்கில்டன் 40 ரன்கள் எடுத்தார்.
ஸ்கோர்:
ஆஸ்திரேலியா 360 மற்றும் 164 ரன்கள்,
இங்கிலாந்து 524 மற்றும் 1 ரன்கள்.
நான்காவது இன்னிங்சில் இங்கிலாந்து துவக்க வீரர் ஹர்ரபர்ட் சுட்ச்லிஃப், ஸ்டான் மக்கபே வீசிய முதல் பந்தில். 1 ரன் எடுத்து அவரது அணி வெல்ல உதவினார்.
இந்த டெஸ்டில் டான் ப்ராட்மன் பங்கு பெறவில்லை என்பது. குறிப்பிடத்தக்கது.
03. 1958 ஆஸ்திரேலிய, தென் ஆப்பிரிக்க அணிகள் (07 - 12, பிப்ரவரி, 1958) ஜோஹன்னஸ்பர்க்:
முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 401 ரன்கள் எடுத்தனர். ரிச்சி பேனாட் 100, கென் மக்கேய் 83, அலன் டேவிட்சன் 62 ரன்கள்.
தென் ஆப்பிரிக பவுலர் பீட்டர் ஹெயின் எடுத்தது 6 விக்கெட்டுக்கள்.
தென் ஆப்பிரிக அணி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 203 ரன்கள்.
கென் பியூன்ஸ்டன் 70 ரன்கள்.
பாலோவ் ஆன் பெற்ற தென் ஆப்பிரிக அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர் 198 ரன்கள்.
ஜாக்கி மக்குளைவ் 70, கென் பியூன்ஸ்டன் 64 நாட் அவுட் ரன்கள்.
இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய பவுலர்கள் மொத்தம் எடுத்த விக்கெடுக்கள் ரிச்சி பேனாட் 9, லிண்ட்செ க்ளைன் 5. நான்காவது இன்னிங்சில் காலின் மக்டொனால்ட் முதல் ஓவரின் 4 வது பந்தில் வெற்றிக்கு தேவையான 1 ரன் எடுத்தார். பவுலர் ராய் மக்லீன்.
04. 1963 மேற்கு இந்திய தீவுக்கள், இங்கிலாந்து அணிகள் (06 - 10, ஜூன் 1963) மன்செஸ்டர்:
முதலில் பேட்டிங் ஆடிய மேற்கு இந்திய தீவுக்கள் அணி ஸ்கோர் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 501 ரன்கள் டிக்ளர்.
துவக்க வீரர் கன்ராட் ஹண்ட் 182 ரன்கள் (எதிர் கொண்ட பந்துக்கள் 485, பவுண்டரிகள் 27)
ரோஹன் கன்ஹாய் 90, கேரி சோபர்ஸ் 64, கேப்டன் பிரேங்க் ஒர்ரெல் 74 நாட் அவுட் ரன்கள்.
205 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி பாலோவ் ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்சில் 296 ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து அணி கேப்டன் டெட் டெக்ஸ்ட்டர் 73 (முதல் இன்னிங்ஸ்) மிக்கி ஸ்டெவார்ட் 87 ரன்கள் (இரண்டாவது இன்னிங்ஸ்) எடுத்தனர்.
பவுலிங்கில் இங்கிலாந்து வீரர்கள் பிரெட் ட்ருமன், டேவிட் ஆலன் தலா 2 விக்கெட்டுக்கள் எடுத்தனர்.
மேற்கு இந்திய தீவுக்கள் அணி வீரர்கள் வெஸ் ஹால் 3, லான்ஸ் கிப்ஸ் 11, கேரி சோபர்ஸ் 4 விக்கெட்டுக்கள்.
நான்காவது இன்னிங்சில் இங்கிலாந்து பவுலர் டேவிட் ஆலன் வீசிய முதல் பந்தில் 1 ரன் எடுத்து மேற்கு இந்திய தீவுக்கள் அணி வெற்றி பெற வைத்தவர் துவக்க வீரர் கன்ராட் ஹண்ட்.
05. 1976 நியூஸியலாந்து, பாகிஸ்தான் அணிகள் (23 - 27 , அக்டோபர், 1976) ஹைதராபாத்:
முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி குவித்த ரன்கள் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 473 டிக்ளர். சகோதரர்கள் சதம் கண்டனர். சாதிக் முஹம்மது 103 நாட் அவுட், முஷ்டாக் முஹம்மது (கேப்டன்) 101 ரன்கள்.
மஜித் கான் 98, ஆசிப் இக்பால் 73 ரன்கள்.
முதல் இன்னிங்சில் 219 ரன்கள் எடுத்த நியூஸியலாந்து அணி பலோவ் ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்சில் எடுத்த ரன்கள் 254.
முதல் இன்னிங்சில் கேப்டன் க்ளேன் டர்ன்ர் 49, இரண்டாவது இன்னிங்சில் ஜான் பார்க்கர் 82 ரன்கள். பவுலிங் நியூஸியலாந்து வீரர்கள் பதெரிய்க், டேவிட் ஓ சுல்லிவான் தலா 2 விக்கெட்டுக்கள்.
பாகிஸ்தான் பவுலிங் சர்ப்ராஸ் நவாஸ் 5, இம்ரான் கான் 3, இன்டிகாப் அலம் 6, மியாண்தாத் 5.
நான்காவது இன்னிங்சை பாகிஸ்தான் அணி சார்பாக துவக்கியவர்கள் வேக பந்து வீசும் சர்ப்ராஸ் நவாஸ் மற்றும் விக்கெட் கீப்பர் வாசிம் பாரி.
வர்றேன் லீஸ் வீசிய முதல் ஓவரில் 5 வது பந்தில் பவுண்டரி அடித்தார். சர்ப்ராஸ் நவாஸ் வெற்றி பெற தேவையாக இருந்த 1 ரன்னுக்கு பதிலாக பெற்றது 4 ரன்கள்.
06. 1983 இந்திய, மேற்கு இந்திய தீவுக்கள் அணிகள் (15 - 20, ஏப்ரல், 1983) ப்ரிட்ஜ் டவுன்:
இந்திய அணி வீரர் மொஹிந்தர் அமர்நாத் 91 ரன்கள். இந்திய அணியின் ஸ்கோர் 209 ரன்கள்.
மேற்கு இந்திய தீவுக்கள் அணி 486 ரன்கள் குவித்தனர்.கஸ் லோகி சதம் 130, கார்டான் கிரீனிட்ஜ் 57, டேஸ் மோன்ட் ஹய்ன்ஸ் 92, விவ் ரிச்சர்ட்ஸ் 80. இரண்டாவது இன்னிங்சிலும் மொஹிந்தர் அமர்நாத் சிறப்பாக ஆடினார். 80 ரன்கள், அன்ஷுமான் கெய்க்வாட் 55 ரன்கள்.
இந்திய அணி ஸ்கோர் 277 ரன்கள், பவுலிங்கபில் தேவ், வெங்கட்ராகவன் தலா 3 விக்கெட்டுக்கள்.
மேற்கு இந்திய தீவுக்கள் அணி ஹோல்டிங் 4, ஆண்டி ராபர்ட்ஸ் 8, மார்ஷல் 4, கார்னர் 3. நான்காவது இன்னிங்சில் இந்திய அணியின் பவுலிங்கை துவக்கியவர் விக்கெட் கீப்பர் சயீத் கிர்மானி. இவர் வீசிய முதல் பந்து நோ பாலில் முடிய மேற்கு இந்திய தீவுக்கள் அணி வெற்றி பெற்றது.
07. 2004 மேற்கு இந்திய தீவுக்கள், இங்கிலாந்து அணிகள் (19 - 21, ஆகஸ்ட், 2004 ) ஓவல்:
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி ஸ்கோர் 470 ரன்கள். மேற்கு இந்திய தீவுக்கள் அணியின் ஸ்கோர் 152 மற்றும் 318 (பாலோவ் ஆன் பெற்று விளையாடிய பிறகு)
இங்கிலாந்து பேட்டிங் அன்றெவ் பிளின்ட்அப் 72, இயன் பெல் 70, கேப்டன் மைக்கேல் வாஹான் 66 ரன்கள்.
மேற்கு இந்திய தீவுக்கள் அணி கேப்டன் பிரைன் லாரா 79, கிறிஸ் கேல் 105, (எதிர் கொண்ட பந்துக்கள் 87, பவுண்டரிகள் 18, சிக்ஸர் 1) பிராவோ 54.
பவுலிங் இங்கிலாந்து அணி ஸ்டீவ் ஹார்மிசின் 9, ஜேம்ஸ் ஆண்டெர்சன் 4.
விக்கெட்டுக்கள் மேற்கு இந்திய தீவுக்கள் அணி ஜே லாவ்சன், பிராவோ தலா 3 விக்கெட்டுக்கள்.
நான்காவது இன்னிங்ஸ் முதல் ஓவர் மேற்கு இந்திய தீவுக்கள் அணிக்காக வீசியவர் எட்வர்ட்ஸ்.
மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்த இங்கிலாந்து வீரர் மார்க்கஸ் ட்ரெஸ்கோத்திக்.