வாழ்க்கையை மாற்றும் 7 ரகசியங்கள்! உங்கள் உடலில் ஒளிந்துள்ள அதிசயம் தெரியுமா?

7 Chakras Meaning
7 Chakras Meaning
Updated on

நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளன‌ அவை சரியாக இயங்கும் போது வாழ்க்கை சரியாக ஓடும்‌ இவை தடைபடும் போது எல்லாம் தலைகீழாகும். அவை என்னென்ன சக்கரங்கள் என்பதைப் பற்றி பார்ப்போம் அவற்றை எப்படி சரியாக இயக்கலாம் என்பதையும் காண்போம்.

மூலாதாரம்

இது முதுகெலும்பின் அடிப்பகுதி. இது உங்கள் அடித்தளம்‌. வேர் இல்லாத மரம் எப்படி நிற்கும்? மூலாதாரம் பாதிக்கப்படும் போது எப்போதும் பயம் இருக்கும். உடலில் சோர்வு வரும்‌. முதுகு வலி வரும். மூலாதாரம் சரியாக இயங்கும் போது நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்ற உணர்வு வரும். மூலாதாரத்தை சரிசெய்ய தினமும் வெறும் காலில் நடக்க வேண்டும்.

ஸ்வாதிஷ்டானம்

இது தொப்புளுக்கு கீழே உள்ளது. இது உங்கள் உணர்வுகளின் மையம். படைப்பாற்றல், இன்பம், உறவுகள் எல்லாம் இங்கிருந்து வருகின்றன.  ஸ்வாதிஷ்டானம் பாதிக்கப்படும் போது உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் போகும்‌. படைப்பாற்றல் வற்றிவிடும் உறவுகளில் தொடர்ந்து பிரச்னை வரும். வாழ்க்கையில் எதிலும் மகிழ்ச்சி இல்லாமல் போகும்‌ ஸ்வாதிஷ்டானம் நன்றாக இயங்கும் போது உணர்வுகளை சரியாக வெளிப்படுத்த முடியும்‌ படைப்பாற்றல் பொங்கும்‌. உறவுகள் ஆழமாகும்‌ இதை சரிசெய்ய நீரோட்டம் நிறைந்த இடத்தில் நேரம் செலவிடுங்கள். கலை, இசை, நடனம் ஏதோ ஒன்றில் ஈடுபடுங்கள்‌.

மணிப்பூரகம்

இது தொப்புளுக்கு மேல் உள்ளது‌. இது உங்கள் சக்தியின் மையம். தன்னம்பிக்கை, உறுதி, செயல்திறன் இவை எல்லாம் இங்கிருந்து வருகின்றன. இது பாதிக்கப்படும்போது தன்னம்பிக்கை குறையும். எடுத்த காரியம் முடிக்க முடியாமல் போகும். வயிற்றுப் பிரச்சனை வரும். மணிப்பூரகம் நன்றாக இயங்கும்போது என்னால் முடியும் என்ற உணர்வு வரும். உங்கள் சக்தியை உணரமுடியும்  இதை சரிசெய்ய காலை சூரிய வெளிச்சத்தில் நிற்கவும்.  தினமும் ஒரு இலக்கை முடியுங்கள்‌ நான் சக்தி வாய்ந்தவன் என்று சொல்லுங்கள்.

அனாகதம்

இது மார்பின் மைய இடமாகும்‌. இது அன்பின் மையம். இங்கிருந்துதான் அன்பு பாய்கிறது. அன்பு பெறுகிறது. இது பாதிக்கப்படும்போது அன்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் போகும்‌ தனிமை அதிகமாக உணரும். உறவுகளில் வலி இருக்கும். மார்பு அழுத்தம், சுவாசப் பிரச்சனை வரும். அனாகதம் சரியாக இயங்கும் போது தன்னையும் மற்றவரையும் நேசிக்க முடியும்‌ மன்னிக்கும் சக்தி வரும்‌ இரக்கம் பெருகும். உறவுகள் வலுப்படும். இதை சரிசெய்ய நான் அன்புக்கும் தகுதியானவன்‌ என தினமும் சொல்லுங்கள். இயற்கையில் நேரத்தை செலவிடுங்கள். யாருக்காவது நன்மை செய்யுங்கள்.

இதையும் படியுங்கள்:
வெயிலுக்கு உடல் சூட்டை தணிக்கணுமா? காலையில் இந்த 5 வெந்தய ஸ்மூத்தியை ட்ரை பண்ணுங்க!
7 Chakras Meaning

விசுத்தி

இது தொண்டை பகுதியில் உள்ளது. இது உங்கள் வெளிப்பாட்டின் மையம்‌ உண்மையைச் சொல்லும் திறன் இங்கிருந்து வருகிறது. விருத்தி பாதிக்கப்படும்போது  உண்மையைச் சொல்ல முடியாமல் போகும். தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டது போல் உணர்வு வரும். வார்த்தைகள் வராது. குரல் பிரச்சனை ஏற்படும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணி வாயை மூடிக் கொள்வீர்கள். இதைச் சரிசெய்ய தினமும் சத்தமாக பாடுங்கள். உங்கள் கருத்தை தைரியமாகப் சொல்லுங்கள்‌. நீலநிற உணவை சாப்பிடுங்கள். அவகேடோ அத்திப்பழம் உண்ணுங்கள்.

ஆக்ஞா சக்கரம் 

புருவ மத்திய பகுதியில் உள்ளது. இது உங்கள் உள்ளுணர்வின் மையம். ஞானம், தெளிவு எல்லாம் இங்கிருந்து வருகின்றன. ஆக்ஞா பாதிக்கப்படும் போது  முடிவெடுக்க கஷ்டமாக இருக்கும் உள்ளுணர்வை நம்பமுடியாமல் போகும்‌. எதுவும் தெளிவாக தெரியாது. தலைவலி கண் பிரச்னை வரும். கனவுகள் குழப்பமாக இருக்கும்‌ ஆக்ஞா சரியாக இயங்கும் போது உள்ளுணர்வு வலுவாக இருக்கும்‌ ஞானம் பெருகும் இதைச் சரிசெய்ய தினமும் தியானம் செய்யுங்கள். பத்து நிமிடம் போதும். உங்கள் கனவுகளை எழுதுங்கள்‌ உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள்.

இதையும் படியுங்கள்:
சக்கரம் அமையப்பெற்ற கால்களை உடையவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா?
7 Chakras Meaning

சஹஸ்ராரம்

தலையின் உச்சிப் பகுதியில் உள்ளது‌. இது அனைத்து சக்திகளின் மேலான மையம். இறைவனோடு, பிரபஞ்சத்தோடு இணைப்பு இங்கிருந்து வருகிறது. சகஸ்ராரம் பாதிக்கப்படும் போது வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் போகும்‌ நான் ஏன் பிறந்தேன் என்ற கேள்வி வரும். ஆன்மிக தனிமை உணர்வு வரும்.

இது சரியாக இயங்கும் போது வாழ்க்கையின் அர்த்தம் புரியும்‌ எல்லாவற்றோடும் இணைக்கப்பட்ட உணர்வு ஏற்படும்‌ இறைவனோடு இணை உணர்வு கிடைக்கும்‌ இதை சரிசெய்ய மௌன தியானம் செய்யுங்கள். யாருக்காவது உதவுங்கள்‌ நான் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி என்று உணருங்கள்.

இந்த ஏழு சக்கரங்களில் எது தடைப்பட்டு இருக்கிறது என்று உங்கள் வாழ்க்கையை வைத்துக் கொண்டு பிடியுங்கள். அவற்றை சரி செய்தால் நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெறுவீர்கள்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com