

குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே ஏற்படும் சில குழப்பமான அறிகுறிகள் ஏற்படும். வகுப்பறையில் இருக்கும்போதோ, விளையாடிக் கொண்டிருக்கும்போதோ, அல்லது வீட்டுப் பாடம் எழுதும்போதோ சில வினோதமான விஷயங்கள் நடக்கலாம். இதைத்தான் ஆப்சன்ஸ் சீசர் (Absence Seizure) அல்லது குறுவலிப்பு என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள்.
இது பெரும்பாலும் மன ரீதியான பிரச்சனைகள் மற்றும் நரம்பியல் பிரச்சனைகள் என இரண்டின் கீழும் வரலாம். இது மூளையில் உள்ள நரம்பு செல்கள் சில வினாடிகளுக்குச் சற்றே குழப்பமடையும் ஒரு நிலை.
இதன் அறிகுறிகள்:
பொதுவாக வலிப்பு நோய் வந்தால் கை, கால்கள் தொடர்ச்சியாக இழுக்கும். வாயில் நுரை தள்ளும். இது போன்ற எந்த அறிகுறியும் இல்லாமல் வலிப்பு நோய் வரலாம். அதனால் தான் இதை 'சைலண்ட் சீசர்' (அமைதியான வலிப்பு) என்றும் சிலர் சொல்வார்கள்.
மரபியல் கோளாறுகள், விபத்தினால் மூளையில் அடிபடுவது, மூளையில் உள்ள நரம்பு செல்கள் சிதைவது, நரம்பியல் கோளாறுகள், மூளையில் தொற்று ஏற்படுதல், பின் அதன் தொடர்ச்சியாகவும் ஆப்சன்ஸ் சீசர் (Absence Seizure) வருகிறது.
வகுப்பறையில் பாடம் நடத்தும் போது திடீரென்று பேசாமல், சத்தம் கேட்காமல், அசைவில்லாமல் பகல் கனவு காண்பது போல ஒரே இடத்தில் இருந்து கொண்டு பாடத்தை கவனிக்காமல் இருப்பது. அவர்கள் வேறு உலகத்தில் இருப்பார்கள். சில வினாடிகள் எங்கே இருக்கிறோம் என்று தெரியாமலே இருப்பார்கள். யாராவது பெயரை அழைத்தாலோ, கேள்விகள் கேட்டாலோ, சில வினாடிகளுக்கு பதில் சொல்ல முடியாது. கவனம் வேறு எங்கோ இருக்கும். எழுதிக் கொண்டிருந்தால் பேனா அப்படியே நிற்கும். விளையாடிக் கொண்டிருந்தால் திடீரென ஒரு பொம்மையை வைத்தபடியே அசைவில்லாமல் இருப்பார்கள்.
சில சமயங்களில் சில குழந்தைகளுக்கு இந்த நேரங்களில் மிகச் சிறிய அசைவுகள் ஏற்படலாம். கண்களை வேகமாகக் சிமிட்டுவது, உதடுகளை கடிப்பது, கைகளை ஒன்றுடன் ஒன்று தேய்ப்பது, பற்களை 'நர..நர..' வென்று கடிப்பது போன்றவை ஆப்சன்ஸ் சீசர் (Absence Seizure) அறிகுறிகள் ஆகும்.
இந்த அறிகுறிகள் அனைத்தும் 10 முதல் 20 வினாடிகள் வரை தான் இருக்கும். அதனால் இதை யாரும் வலிப்பு என்று சந்தேகப்பட மாட்டார்கள் பெற்றோர் ஆசிரியர்களும் இதனை கண்டு கொள்வதில்லை. சிலருக்கு இத்தகைய செயல்கள் ஒரு நாளைக்கு 200 முறை கூட வரும் சில குழந்தைகளுக்கு 70 முறை வரும் அதை அவர்களால் அறிந்து கொள்ள முடியாது. மூன்று மாத குழந்தைகளில் ஆரம்பித்தே ஆப்சன்ஸ் சீசர் (Absence Seizure) வரலாம்.
ஆப்சன்ஸ் சீசர் (Absence Seizure) தொடர்ச்சியாக வரும் குழந்தைகளுக்கு வளர்ச்சி அடைந்த பின் ஏ.டி.ஹச்.டி (ADHD) எனப்படும் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படும்.
சைலண்ட் சீசர் அல்லது ஆப்சன்ஸ் சீசரை உறுதிப்படுத்திய பின், ஆயுர்வேதத்தில் சிறந்த மருந்துகள் உள்ளன என்று கூறப்படுகிறது. எந்த வயதில் சைலண்ட் சீசர் வந்தது எத்தனை ஆண்டுகள் வலிப்புகள் உள்ளது என்பதை அறிந்து அதற்கு தக்கவாறு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆயுர்வேத சிகிச்சை அல்லது வேறு மாற்று சிகிச்சையை நாடுவதற்கு முன், ஒரு நரம்பியல் நிபுணரை அணுகி, அவர்களின் மேற்பார்வையின் கீழ் மட்டுமே சிகிச்சை எடுக்க வேண்டும்.
முற்றியநிலையில் இருந்தால், அலோபதி மருத்துவம் தேவைப்படும். சிலர் கூடுதல் சிகிச்சைகளை நாடும்போது, கால்-கை வலிப்பு (வலிப்புக் கோளாறு) என்பது ஒரு தீவிர நரம்பியல் நிலையாகும். இது பொதுவாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஆண்டிபிலெப்டிக் மருந்துகளை (AEDs) பயன்படுத்தி நரம்பியல் நிபுணரால் நிர்வகிக்கப்பட வேண்டும். நிரூபிக்கப்படாத மாற்றுகளுடன் பரிந்துரைக்கப்பட்ட AED களை நிறுத்துவது அல்லது மாற்றுவது கடுமையான, உயிருக்கு ஆபத்தான வலிப்புத் தாக்கங்களுக்கு வழிவகுக்கும்.
சைலண்ட் சீசர் என்பது பெரும்பாலும் குழந்தைகளுக்கு தான் ஏற்படுகிறது. சில சமயங்களில் மிடில் ஏஜ் பெண்களுக்கும் ஏற்படுகிறது. எனவே வருமுன் காப்பது சிறந்ததாகும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)