தினமும் 10,000 அடிகள் நடக்க வேண்டுமா? ஆராய்ச்சி சொல்லும் உண்மை!

உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் எத்தனை அடிகள் நடக்க வேண்டும் என்ற உண்மையை அறிந்துகொள்ளுங்கள்.
Walking | நடைப்பயிற்சி
Walking | நடைப்பயிற்சி
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

தினமும் 10,000 அடிகள் நடப்பது உடலுக்கு மிகவும் நல்லது என்றாலும், முழுமையான ஆரோக்கியத்திற்கு 10,000 அடிகள் கட்டாயமில்லை என்பதே நவீன மருத்துவ ஆய்வுகள் சொல்லும் உண்மையாகும்.

தினமும் நடப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்த பலன்களைத் தரும் என்று சர்வதேச மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. தினமும் 10,000 அடிகள் நடப்பது உடலுக்கு மிகவும் நல்லது என்றாலும், அது அனைவருக்கும் கட்டாயமான விதி அல்ல.

நீங்கள் தினமும் 10,000 அடிகள் நடந்து விட்டால் உங்களது உடல் ஆரோக்கிய இலக்கை அடைந்துவிட்டதாக உங்களது செல்போனோ, ஸ்மார்ட் வாட்சோ கூறும். இந்த விஷயத்தில் டெக்னாலஜியை நம்ப வேண்டாம். ஏனெனில் தினமும் 10,000 அடிகள் நடந்தால் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள் என்று எந்த ஆய்வும் கூறவில்லை.

10,000 அடிகள் என்ற இலக்கு மருத்துவ ஆய்வின் மூலம் உருவானதல்ல. 1965-ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் போது, ஒரு ஜப்பானிய நிறுவனம் தனது பெடோமீட்டர் (Pedometer) கருவியை விற்பனை செய்வதற்காக 'மன்போ-கெய்' (Manpo-kei - 10,000 அடிகள் மீட்டர்) என்ற பெயரில் விளம்பரப்படுத்தியதே இதற்குக் காரணம். அந்த விளம்பரம் உலகெங்கிலும் பிரபலமானது. மன் என்றால் 10,000. போ என்றால் காலடித்தடம். கெய் என்றால் அளவி. இப்படியாக தான் இந்த எண் நிலைக்கொண்டது.

அதாவது, தினமும் 10,000 அடிகள் நடப்பது உடலுக்கு மிகவும் நல்லது என்றாலும், முழுமையான ஆரோக்கியத்திற்கு 10,000 அடிகள் கட்டாயமில்லை என்பதே நவீன மருத்துவ ஆய்வுகள் சொல்லும் உண்மையாகும். உண்மையில் 10,000 அடிகள் என்பது அனைவரும் அடைய முடியும் எளிதான அளவு இல்லை.

இதனால் பலரும் தங்களுக்கு முடிந்த 5,000 அல்லது 8,000 அடிகளை இலக்காக மாற்றியுள்ளனர். தீவிரமாக உடற்பயிற்ச்சியில் ஈடுபடும் சிலர் 10,000 இலக்கை எட்டியதும் போதுமென்ற மனநிலைக்கு வந்துவிடுகின்றனர்.

ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 7,000 முதல் 8,000 அடிகள் (Steps) நடப்பதே இதய நோய், மன அழுத்தம், அகால மரணம் மற்றும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கப் போதுமானது என்று சமீபத்திய ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

Walking | நடைப்பயிற்சி
Walking | நடைப்பயிற்சிImage Credit: Gemini

மேலும் உங்கள் இதயம், மூளை மற்றும் நீண்டகால ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, தினமும் 7,000 அடிகள் நடப்பதே சரியான அளவு என்று புதிய உலகளாவிய ஆய்வு கண்டறிந்துள்ளது.

10,000 அடிகள் நடக்க முடியவில்லை என்று கவலைப்படத் தேவையில்லை. உங்கள் வயது, உடல்நிலை மற்றும் தற்போதைய ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு (உதாரணமாக 6,000 முதல் 7,000 அடிகள் வரை) இலக்கை நிர்ணயித்துக் கொள்வதே சிறந்தது. எதை விடவும் நடைப்பயிற்சியின் வேகம் மற்றும் தொடர்ச்சியான நிலைத்தன்மை (Consistency) முக்கியமானது.

இதையும் படியுங்கள்:
அதிகாலை நடைப்பயிற்சி: உடல் நலத்தை தாண்டி உங்களுக்கு கிடைக்கும் உன்னத நன்மைகள்!
Walking | நடைப்பயிற்சி

நவீன ஆய்வுகள் சொல்லும் முக்கிய உண்மைகள்:

சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் மற்றும் தரவுகளின்படி, நடைபயிற்சிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் இடையிலான தொடர்பு கீழ்க்கண்டவாறு உள்ளது.

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 6,000 முதல் 8,000 அடிகள் நடப்பதே நீண்ட ஆயுளுக்கான முழுமையான பலன்களைத் தருகிறது. 60 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 8,000 முதல் 10,000 அடிகள் வரை பலன்கள் கிடைக்கின்றன.

தினமும் சுமார் 8,900 முதல் 9,800 அடிகள் நடப்பது மூளையின் செயல்திறனை மேம்படுத்துவதோடு, டிமென்ஷியா (மறதி நோய்) ஏற்படும் அபாயத்தை 50% வரை குறைப்பதாக Neurology மற்றும் Scientific Reports ஆய்வுகள் கூறுகின்றன.

நீங்கள் தற்போது குறைவாக நடப்பவராக இருந்தால், ஒரேயடியாக 10,000 அடிகளை நோக்கி ஓட வேண்டியதில்லை. தினசரி நடைபயிற்சியில் கூடுதலாக 500 முதல் 1,000 அடிகளைச் சேர்த்தாலே ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும்.

அதேசமயம் நீங்கள் தினமும் 4,000 – 5,000 அடிகள் நடப்பவராக இருந்தால், உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறையின் பாதிப்புகள் குறைந்து, அடிப்படை இதய ஆரோக்கியம் மேம்படும்.

தினமும் 7,000 – 8,000 அடிகள் நடப்பதால், அகால மரண அபாயம், சர்க்கரை நோய் மற்றும் மன அழுத்தம் ஆகியவை கணிசமாகக் குறையும் உச்சகட்டப் பலன் கிடைக்கும்.

தினமும் 9,000 – 10,000+ அடிகள் நடப்பதால், எடை குறைப்பு, கூடுதல் கலோரி எரிப்பு மற்றும் மூளை ஆரோக்கியம் (டிமென்ஷியா தடுப்பு) ஆகியவற்றிற்கு மிகவும் உதவும்.

இதையும் படியுங்கள்:
தினசரி 10,000 அடிகள் நடப்பது உடல் எடையைக் குறைக்க உதவுமா? 
Walking | நடைப்பயிற்சி

கவனத்தில் கொள்ள வேண்டியவை :

தினமும் 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்ற இலக்குடன் மிக வேகமாக நடப்பதை விட, தினமும் சீராக நடப்பதே நீண்ட கால ஆரோக்கியத்திற்கு முக்கியம் என NIH ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

மூட்டு வலி, இதயப் பிரச்சினைகள் அல்லது பிற உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் 10,000 அடிகள் என்ற இலக்கை வலுக்கட்டாயமாக அடைய முயற்சிக்காமல், தங்கள் உடலுக்கு ஏற்ற அளவில் நடப்பதே பாதுகாப்பானது.

சிலருக்கு தினமும் 10,000 அடிகள் நடந்து நம் இலக்கை அடையும் போது கிடைக்கும் மகிழ்ச்சி முக்கியமானது. ஆனால் ஆய்வுகள், அப்படி இலக்குகள் எதுவும் இல்லாமல் நடப்பதை பழக்கமாக கொண்டவர்கள் இன்னும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறுகின்றனர்.

குறிப்பாக வயது முதியவர்கள் தினமும் ,முதல் 9,000 அடிகள் வரை நடப்பது அவர்கள் மரணிக்கும் வாய்ப்புகளைக் குறைக்கிறது என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

நவீன மருத்துவ ஆய்வுகளின்படி, 10,000 அடிகளை மறந்துவிடுங்கள், உங்கள் ஆரோக்கியத்துக்காக முடிந்தவரை நடப்பதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு மகிழ்ச்சி தரக் கூடிய இலக்குடன், (10,000 அடிகள் என்பது கட்டாயமில்லை) அல்லது எந்த இலக்கும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் நடப்பது உங்களுக்கு சிறந்த பலனை அளிக்கும் மற்றும் பெரும்பாலான ஆரோக்கிய நன்மைகளைப் பெறப் போதுமானது.

இதையும் படியுங்கள்:
உடல் எடையை குறைக்க தினமும் 10,000 அடிகள் நடைப்பயிற்சி மட்டும் போதுமா?
Walking | நடைப்பயிற்சி

Reference: