தொப்பை
தொப்பைIntel

இந்தப் பொடியை சாப்பிட்டால் போதும்; தொப்பை கடகடவென குறையும்!

Published on

ண்கள், பெண்கள் என பலருக்கும் இருக்கும் பெரிய பிரச்னை தொப்பைதான். தொப்பைக்கு முக்கியக் காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவதுதான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமேதான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்துக்காக தேர்ந்தெடுத்து வாழ்கிறோம்.

இன்னும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதுபோன்ற உணவு முறையைப் பின்பற்றுகின்றனர். தொப்பையைக் குறைப்பது மிகவும் எளிதுதான். அதற்கு முதலில் செய்ய வேண்டியதெல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வதுதான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, தொப்பையையும் எளிதில் குறைக்கலாம். அதிலும் குறிப்பாக. வீட்டிலேயே சில பொருட்களை வைத்து பொடி செய்து தொப்பையை குறைக்கலாம்.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து தொப்பையை மறைய செய்யவும், வயிற்றைச் சுற்றி உள்ள ஊளை சதையை குறைக்கவும், உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் இந்தப் பொடி பயன்படும். இந்தப் பொடியை தயாரித்து தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து குடிக்க வேண்டும். இதனால் பானை போல இருந்த வயிறும் மள மளவென கரையை ஆரம்பிக்கும். மேலும், செரிமானப் பிரச்னை, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் வரவே வராது. இனி, இந்தப் பொடியை தயாரிக்கும் முறையைக் குறித்துத் தெரிந்துக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
பெண்களின் உடல் நலத்தில் பெரும் பங்காற்றும் அவகோடா பழம்!
தொப்பை

சீரகம் - 1 கப், ஓமம் - 1 கப், சோம்பு - 1 கப் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். முதலில் ஒரு சிறிய கப் அளவு சீரகத்தை எடுத்துக் கொள்ளவும். அடுத்து, இதில் ஓமம் சேர்க்க வேண்டும். ஓமத்தில் கால்சியம், பொட்டாசியம் என ஏராளமான சத்துக்கள் உள்ளன. அடுத்து சோம்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள். மூன்றையும் ஒரே கப்பில் அளந்து எடுத்துக் கொள்ளவும். இந்த மூன்று பொருளையும் நன்றாக வாணலியில் வறுத்து ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ளவும். நன்றாக காற்று போக முடியாத பாட்டிலில் ஸ்டோர் செய்து வைக்கவும்.

ஒரு டம்ளரில் சுடு தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் அரைத்த பவுடரை ஒரு ஸ்பூன் சேர்க்கவும். இதை உணவுக்கு அரை மணி நேரம் முன்பு எடுத்துக்கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற நோக்கம் இருப்பவர்கள் இந்த முறையை பின்பற்றலாம். இதனால் நீங்கள் எதிர்பார்க்காத அளவு உடல் எடை குறையும்.

logo
Kalki Online
kalkionline.com