'கொழுப்பு' என்று சொன்னாலே பயமா? 44 வகை உடல் செயல்பாடுகளுக்கு இது தேவையாச்சே!

cholesterol
cholesterolImg credit: AI Image
நடேஷ் கன்னா

என் பெயர் நடேஷ் கன்னா. எனது உண்மை பெயர் சிவராம சுப்ரமணியன். எனது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் களக்காடு. தற்போது கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கல்லிடைக்குறிச்சியில் வசித்து வருகிறேன். நான் கடந்த 57 ஆண்டுகளாக பத்திரிகைகளுக்கு எழுதி வருகிறேன். சிறுகதை கட்டுரைகள் கவிதைகள் துணுக்குகள் ஜோக்ஸ் என எழுதி உள்ளேன். நான் கல்கி, தீபம், மங்கையர் மலர், குமுதம், விகடன், சாவி இதயம் பேசுகிறது முத்தாரம், ராணி, தேவி, ஜூனியர் விகடன், நக்கீரன், துக்ளக், தினமலர், போன்ற அனைத்து பத்திரிகைகளுக்கும் எழுதியுள்ளேன். எனக்கு ஆரம்ப காலத்தில் எழுத தூண்டியது கல்கி வார இதழ். அதில் நான் எழுதிய முதல் துணுக்கு இடம் பெற்றது அன்றிலிருந்து இன்று வரை எழுதி வருகிறேன். நான் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி. என்னை எழுத தூண்டிய கல்கிக்கு வாழ்த்துக்கள்.

Updated on

ரத்தத்தில் LDL (கெட்ட கொழுப்பு) அல்லது Triglycerides (டிரைகிளிசரைடுகள்) அளவுகள் அதிகமாக இருந்தால், அது இதய ஆரோக்கியம் குறித்த கவலையை ஏற்படுத்துவது இயல்பானதுதான். இரண்டின் அளவும் அதிகம் இருந்தால் அவ்வளவுதான்; நம்மை அறியாமல் ஒரு பயம் வந்துவிடுகிறது. அதற்கு ஏற்றார் போல் டாக்டர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், கொழுப்பை குறைக்க பலவித ஆலோசனைகள் சொல்கின்றனர். 

சமீபத்தில் வெளியான ஆராய்ச்சி முடிவுகள் நல்ல கொழுப்பான ஹச்.டி.எல்,, கெட்ட கொழுப்பு, ட்ரை கிளிசரைடு ஆகியவை ரத்தத்தில் எந்த அளவு உள்ளது என்பதை வைத்து மாரடைப்பு பக்கவாதம் வரும் அபாயத்தை கணிக்க உதவும்; ஆனால் அது மட்டும் வைத்து உறுதியாக சொல்ல முடியாது என அறிக்கை வெளியிட்டுள்ளது.

ரத்தத்தில் மெழுகு போன்ற அடர்ந்த கொழுப்பு, அதன் மூலக்கூறுகளை பொறுத்து நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு ட்ரை கிளிசரைடு உட்பட பல வகைகளாகவும் உட்பிரிவுகளாகவும் உள்ளன. 

நம் உடல் செல்களுக்கு சக்தி தருவதில் துவங்கி 44 வகை உடல் செயல்பாடுகளுக்கு அவசியமானது கொழுப்பு. 

மூளை வளர்ச்சிக்கு அவசியமான ஏ, டி, இ, கே ஆகிய வைட்டமின்கள் கொழுப்பில் கரையக்கூடியவை. சில கொழுப்பு வகைகள் இதய, ரத்த நாளங்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. வலிமையான எலும்பு உற்பத்திக்கும் ஹார்மோன்கள் சுரப்பதற்கும் கொழுப்பு அவசியம். 

கெட்ட கொழுப்பு:

கெட்ட கொழுப்பில் உள்ள நுண்ணிய துகளான அபோலிபோபுரோட்டீன் பி தான் ஆபத்தானவை. இவை நாம் உபயோகிக்கும் எண்ணெய், விலங்கு மாமிசத்தில் உள்ளது.

அதை விடுத்து கொழுப்பு என்று சொன்னாலே பயப்பட வேண்டியது இல்லை. இதை தவிர்த்து மீதம் உள்ள கொழுப்பு ஆரோக்கியத்திற்கு நல்லது. இதயம், மூளை, ரத்த நாளங்களை பாதுகாக்கிறது. 

இதையும் படியுங்கள்:
Food Coma: காலை நேர சோர்வு - பிரச்னை தூக்கத்தில் இல்ல; உங்க சாப்பாட்டில் இருக்குங்கோ!
cholesterol

பரிசோதனை செய்தல்: 

ரத்தக் கொழுப்பின் அளவை தெரிந்து கொள்ள பொதுவாக செய்யப்படும் லிபிட் ப்ரொபைல் பரிசோதனையில் அபோலிபோபுரோட்டீன் பி உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியாது. இதற்கென்று பிரத்தியேகமாக பரிசோதனைகள் தேவை.

நாம் என்ன செய்யலாம்? 

கொழுப்பை பற்றி அதிகமாக கவலைப்படாமல் உடல் பருமன் இல்லாமல் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை பராமரிக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் இருக்கவே கூடாது. ரத்த சொந்தத்தில் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும். தினசரி உணவில் நிறைய காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் சேர்த்துக் கொள்ள வேண்டும் 

உடற்பயிற்சியை தவிர்க்க கூடாது. தினசரி அரை மணி நேரம் நடை பயிற்சி இருக்க வேண்டும். பத்து நிமிடம் வேகமாகவும், பத்து நிமிடம் குறைவாகவும் நடக்கலாம். 

நடைப்பயிற்சியின் போது மொபைல் பார்ப்பது பேசுவது என்று எதுவும் செய்யக்கூடாது. இதை தினசரி ஒழுங்காக கடைப்பிடித்தால் மாரடைப்பு பக்கவாதம் எதுவும் வராது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com