இதயத்திற்கு 'சிவப்பு' கம்பள வரவேற்பு: ஆரோக்கியம் தரும் 7 சிவப்புப் பழங்கள்!

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிவப்பு பழங்கள் மற்றும் அவற்றில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாங்க...
Heart-Protecting Red Fruits
Heart-Protecting Red Fruits
Published on

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, லைகோபீன் (Lycopene), ஆந்தோசயனின் (Anthocyanins) மற்றும் பொட்டாசியம் நிறைந்த சிவப்பு நிற பழங்கள் சிறந்தவை. இவை ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, வீக்கத்தைக் குறைத்து, கொழுப்பைக் குறைப்பதன் மூலம் இதயத்தை நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன. அந்த வகையில் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிவப்பு பழங்கள் பற்றி பார்ப்போம்.

தக்காளி :

தக்காளி இதயத்திற்கு நலம் சேர்க்குமா என்று ஆச்சரியப்படலாம். வாரத்திற்கு ஐந்து முறைக்கு மேல் தக்காளி போன்ற லைகோபீன் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது, இதய நோய் அபாயத்தை 26 சதவீதம் குறைக்கும் என்பது அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள டப்ட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இதில் உள்ள லைகோபீன் (Lycopene) என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட், பொட்டாசியம் மற்றும் நார்சத்து, கெட்ட கொழுப்பை (LDL) குறைத்து, இரத்த அழுத்தத்தை சீராக்கி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
மண்ணுக்கு அடியில் புதைந்திருக்கும் ஆரோக்கியம்! கிழங்கு சாப்பிட்டால் இந்த நோய்கள் போயிந்தே!
Heart-Protecting Red Fruits

மாதுளை :

ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் (புனிகலகின்ஸ்) மற்றும் அந்தோசயனின்கள் அதிகம் உள்ளதால், இது தமனிகளில் ஏற்படும் அடைப்பைத் தடுத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் மாதுளை ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கெட்ட கொழுப்பை (LDL) குறைக்கவும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், தமனிச் சுவர்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மாதுளைச் சாறு தமனிகளில் அடைப்பு உருவாவதைக் குறைத்து, அவற்றின் நெகிழ்வுத்தன்மையைப் பராமரிக்கும் திறனைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

செர்ரி :

செர்ரி ஜூஸ், உலர்ந்த செர்ரி, புளிப்பு செர்ரி மற்றும் இனிப்பு செர்ரி என அனைத்து செர்ரிகளும் சுவையானவை. அவற்றில் ஆந்தோசயின்கள் நிறைந்துள்ளதால், இது இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் ரத்த நாளங்களை பாதுகாக்க உதவிடும். இதில் உள்ள அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை இதய நோய்களைத் தடுக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்கவும் உதவுகின்றன. செர்ரி பழங்களை சாலட்டுகளில் சேர்த்தோ, பிற உணவு பதார்த்தங்களில் கலந்தோ உட்கொள்ளலாம்.

ராஸ்பெர்ரி :

இந்த பழமும் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இயற்கையின் இனிப்புகள் என்று அழைக்கப்படும் இவை ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும், கெட்ட கொழுப்பை குறைக்கவும் துணை புரியும். இதில் உள்ள அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து (Fiber) மற்றும் பொட்டாசியம் ஆகியவை இதய நோய்களைத் தடுக்க உதவுகின்றன. மேலும், இது தமனிகளில் பிளேக் (plaque) உருவாவதைத் தடுத்து, இதயச் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக, தினமும் அல்லது அடிக்கடி ராஸ்பெர்ரியை உணவில் சேர்த்துக்கொள்வது இதயத்திற்கு நன்மை பயக்கும்.

ஆப்பிள் :

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுவது எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொழுப்பை 40 சதவீதம் வரை குறைக்கும் என்று அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாநில பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி முடிவு கூறுகிறது. ஆப்பிள் சாப்பிடுவது இதய நோயால் இறக்கும் அபாயத்தை குறைப்பதோடு தொடர்புடையது என்று அமெரிக்காவின் லோவா மகளிர் சுகாதார ஆய்வகம் தெரிவிக்கிறது. 18 ஆண்டுகளாக, மாதவிடாய் நின்ற 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. ஆப்பிள் பழத்தின் தோலில் அதிக ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன. எனவே சாறாக குடிப்பதற்கு பதிலாக பழமாக சாப்பிடுங்கள். மேலும் இதில் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து (Fiber) மற்றும் பாலிபினால்கள் (Polyphenols) இருப்பதால், இது கொழுப்பைக் குறைத்து இதயத் துடிப்பைச் சீராக்குகிறது.

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது இதய தமனிகளில் கொழுப்பு படிவதைத் தடுத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

தர்பூசணி :

இதய ஆரோக்கியத்திற்குத் தேவையான லைகோபீன் மற்றும் சிட்ருலின் சத்து நிறைந்தது. இதில் உள்ள லைகோபீன், சிட்ரூலின் (Citrulline)மற்றும் பொட்டாசியம் ஆகியவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன, இதனால் இதய நோய் அபாயம் குறைகிறது. இது குறைந்த கலோரி மற்றும் அதிக நீர்ச்சத்து கொண்டதால், ஒட்டுமொத்த இதய செயல்பாட்டிற்கும் சிறந்த பழமாகும். மிதமான அளவில் சாப்பிடுவது நல்லது. நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிடுவது சிறந்தது.

ஸ்ட்ராபெர்ரி :

ஸ்ட்ராபெர்ரி பழத்தை தினமும் சாப்பிடுவது இதயத்தை பலப்படுத்தும். அதில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் பெக்டின் நொதி போன்றவை கெட்ட கொழுப்பை குறைக்கும். மேலும் இதில் உள்ள அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் C, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து ரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய பாதிப்பிலிருந்து காக்கிறது. தினசரி ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவது கெட்ட கொழுப்பைக் (LDL) குறைத்து, இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. வாரத்திற்கு மூன்று முறைக்கு மேல் ஸ்ட்ராபெர்ரி சாப்பிடும் பெண்களுக்கு மாரடைப்பு அபாயம் 32% வரை குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
வீட்டுலேயே இருக்குது உங்க நோய்க்கான தீர்வு!
Heart-Protecting Red Fruits

- இந்த பழங்களை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது, குறிப்பாக இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை வெகுவாகக் குறைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com