வடக்கே தலை வைத்து தூங்கலாமா? அறிவியல் சொல்லும் அதிர்ச்சி உண்மை என்ன?

வடக்கு திசையில் தலை வைத்துப் படுப்பது குறித்து அறிவியல் மற்றும் வாஸ்து நம்பிக்கைகள் என்ன சொல்கின்றன? விரிவான அலசல்.
Sleeping head towards the north | வடதிசையில் தலை வைத்து தூங்குவது
Sleeping head towards the north | வடதிசையில் தலை வைத்து தூங்குவதுImage Credit: ChatGPT
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

இந்தியாவில் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படும் வாஸ்து சாஸ்திரம், தூங்கும் திசைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. வடக்கு திசையில் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்பதற்குப் பின்னால் அறிவியல் காரணங்களும், பாரம்பரிய நம்பிக்கைகளும் உள்ளன. நம் முன்னோர்கள் இதை வெறும் மூடநம்பிக்கையாகச் சொல்லாமல், மனித உடலின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டே இவ்வாறு அறிவுறுத்தினர்.

அந்த வகையில், நம்மில் பலரும் சிறு வயதில் இருந்தே இந்த அறிவுரையைக் கேட்டிருப்போம், 'வடக்கு திசையில் தலை வைத்து படுக்காதே!' என்று. இது இந்தியாவின் பல வீடுகளில், குறிப்பாக தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் இன்றும் பின்பற்றப்படும் ஒரு முக்கியமான வழக்கமாகும்.

வாஸ்து படி, வடக்கு திசையில் தலை வைத்து தூங்குவது மிகவும் ஆகாதது. இது மன அமைதியின்மை, துரதிர்ஷ்டம் மற்றும் உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

வடக்கு திசை என்பது மரணத்துடன் தொடர்புடையது என்றும், இறந்தவர்களை வடக்கு நோக்கி தலை வைத்து அடக்கம் செய்வதால், உயிருடன் இருப்பவர்கள் அந்த திசையில் தூங்கக்கூடாது என்றும் ஒரு நம்பிக்கை நீண்ட காலமாகவே உள்ளது. சில குடும்பங்களில் இது முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையும் திசை என்றும் கருதப்பட்டது. இந்த பாரம்பரிய அறிவுரைக்கு பின்னால் ஏதேனும் அறிவியல் காரணம் இருக்கிறதா என்று பலர் யோசிக்கிறார்கள். வாங்க இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

அறிவியல் சொல்லும் உண்மைகள்:

வடக்கே தலை வைத்து தூங்குவதால் இரத்தத்தில் உள்ள இரும்புச்சத்தை பூமியின் காந்தப்புலம் இழுத்து மூளைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. இது பல காலமாகப் பரவி வரும் ஒரு கட்டுக்கதையே தவிர, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல.

பூமியின் காந்தப்புலம் (சுமார் 25 முதல் 65 மைக்ரோடெஸ்லா வரை) மிக மிகக் குறைவானது. ஒரு சிறிய ஃப்ரிட்ஜ் மேக்னட்டின் (Fridge magnet) காந்த சக்தியை விடப் பூமியின் காந்த சக்தி பல மடங்கு குறைவு. இதனால் ரத்த ஓட்டத்தில் எந்த அழுத்தமும் ஏற்பட வாய்ப்பில்லை.

பூமியின் காந்தப்புலம் மிகவும் வலிமை குறைந்தது (சுமார் 25 முதல் 65 மைக்ரோடெஸ்லா வரை மட்டுமே). அதாவது, பூமியின் மேற்பரப்பில் உள்ள காந்தப்புலம் சுமார் 25,000 முதல் 65,000 நானோடெஸ்லா (nanotesla) மட்டுமே. மருத்துவமனையில் எடுக்கப்படும் எம்.ஆர்.ஐ (MRI) ஸ்கேன் இயந்திரம் பூமியின் காந்தப்புலத்தை விட 20,000 மடங்கு அதிக சக்தி கொண்டது. அந்த இயந்திரத்திற்குள் படுக்கும்போதே நம் இரத்தத்தில் உள்ள இரும்பு மூளைக்கு இழுக்கப்படுவதில்லை எனும்போது, மிகவும் பலவீனமான பூமியின் காந்தப்புலத்தால் இரத்த ஓட்டத்தை தடுக்க முடியாது.

ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினில் (Hemoglobin) இரும்பு அணுக்கள் உள்ளன என்பது உண்மைதான். ஆனால், அவை சாதாரண இரும்புத் துண்டு போல காந்தத்தால் ஈர்க்கப்படும் தன்மை (Ferromagnetic) கொண்டவை அல்ல.

ஆக்ஸிஜன் ஏற்றிய இரத்தம் காந்தத்தை விலக்கும் தன்மையும் (Diamagnetic), ஆக்ஸிஜன் இல்லாத இரத்தம் மிகச்சிறிய அளவில் ஈர்க்கும் தன்மையும் (Paramagnetic) கொண்டது. எனவே, காந்தத்தால் இரத்தத்தை இழுக்க முடியாது.

நீங்கள் எந்தத் திசையில் தலை வைத்துப் படுத்தாலும், பூமியின் காந்தப்புலம் உங்கள் உடல் வழியாக ஒரே அளவில்தான் ஊடுருவும். படுக்கும் திசையை மாற்றுவதால் காந்த ஈர்ப்பு சக்தி அதிகரிக்கவோ குறையவோ போவதில்லை.

ஒரு ஆய்வில், மனித மூளை காந்தப்புல மாற்றங்களுக்கு மிக நுண்ணிய அளவில் எதிர்வினையாற்றுவது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், வடக்கே தலை வைத்துத் தூங்குவதால் தூக்கம் கெடும் என்றோ, இரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்றோ நிரூபிக்க எந்த வலுவான மருத்துவ ஆய்வுகளும் இல்லை.

Sleeping head towards the north | வடதிசையில் தலை வைத்து தூங்குவது
Sleeping head towards the north | வடதிசையில் தலை வைத்து தூங்குவது

எனவே, இது காலங்காலமாகப் பரவி வரும் ஒரு தவறான நம்பிக்கையே தவிர, அறிவியல் உண்மை அல்ல. தூங்கும் திசையை விட, காற்றோட்டமான அறை மற்றும் நிம்மதியான தூக்கமே உடல் நலத்திற்கு முக்கியம்.

பாரம்பரிய மற்றும் வாஸ்து நம்பிக்கைகள்:

அறிவியல் ஆதாரம் இல்லாவிட்டாலும், வாஸ்து சாஸ்திரம் மற்றும் பழங்கால நம்பிக்கைகளின் அடிப்படையில் சில காரணங்கள் கூறப்படுகின்றன:

இந்து மரபுப்படி, இறந்தவர்களின் உடலை மட்டுமே வடக்கு திசையில் தலை வைத்துக் கிடத்துவார்கள். ஆன்மா உடலை விட்டு எளிதாகப் பிரிந்து செல்ல இவ்வாறு செய்யப்படுகிறது. எனவே, உயிருடன் இருப்பவர்கள் அந்த திசையில் தலை வைத்துப் படுப்பதைத் தவிர்க்கிறார்கள்.

வாஸ்து சாஸ்திரப்படி, வடக்கு திசையில் தலை வைத்துப் படுப்பது எதிர்மறை ஆற்றலை ஈர்த்து, நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்கும் என்று நம்பப்படுகிறது.

மனித உடலின் தலைப்பகுதி வட துருவமாகவும், கால் பகுதி தென் துருவமாகவும் கருதப்படுகிறது. ஒரே துருவங்கள் ஒன்றையொன்று விலக்கும் என்பதால், வடக்கே தலை வைத்துப் படுத்தால் தூக்கம் கெடும் என நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சாப்பிட்டவுடன் கண்ணைச் சுற்றும் தூக்கம் ஏன்? அடிக்கடி வந்தால் எப்போது மருத்துவரைப் பார்க்க வேண்டும்?
Sleeping head towards the north | வடதிசையில் தலை வைத்து தூங்குவது

எந்த திசையில் தலை வைத்துப் படுப்பது சிறந்தது?

தெற்கு திசை பூமியின் காந்தப்புலமும், மனித உடலின் காந்தப்புலமும் ஒன்றையொன்று ஈர்ப்பதால், ரத்த ஓட்டம் சீராக இருக்கும்; ஆழ்ந்த, நிம்மதியான தூக்கம் கிடைக்கும் என்பதால் இந்த திசை மிகவும் சிறந்தது.

சூரியன் உதிக்கும் திசையான கிழக்கில் தலை வைத்துப் படுப்பது மன அமைதியையும், நேர்மறை ஆற்றலையும் தரும். குறிப்பாக மாணவர்களுக்கு இது மிகவும் நல்லது.

அதேசமயம், படுக்கும் திசையை விட, தூங்கும் சூழலும் உடல் நிலையும் தான் ஆழ்ந்த தூக்கத்திற்கு முக்கியம் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

இதையும் படியுங்கள்:
கண்களை 'பொன்னைப் போல்' பாதுகாக்க...இரவு தூங்கும் முன் செய்ய வேண்டிய முக்கியமான ஒரு செயல்!
Sleeping head towards the north | வடதிசையில் தலை வைத்து தூங்குவது

Reference: