ஜிம்முக்கு போறதெல்லாம் பழசு! ஊர்ந்து போறது தான் புதுசு!

'வேலையைப் போல உடற்பயிற்சியை செய்யாமல் விளையாட்டை போல செய்யுங்கள்'
Active fun at the outdoor fitness park
outdoor fitness park social fitness adult playgrounds trend Img credit: AI Image
Published on

உடற்பயிற்சி என்பது உடலை வருத்தி வியர்வை சிந்தி செய்வது என்பது 2026 ஆம் ஆண்டில் மாறிவிட்டது. அதாவது மன அழுத்தத்தைக் குறைத்து மற்றவர்களுடன் சேர்ந்து சந்தோசமடையும் உடற்பயிற்சியை பெரும்பாலானவர்கள் விரும்புகின்றனர். தனியாக ஜிம்மில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு பாடலை கேட்டபடியே எடையை தூக்கி உடற்பயிற்சி செய்யும் பாணி முற்றிலும் மாறி Social Fitness என்னும் புதிய முறை உலகம் முழுவதும் விரைவாக பரவி வருகிறது.

அந்த வகையில் பெரியவர்கள் குழுவாக இணைந்து விளையாடுவதற்காக பெரியவர்களுக்கான விளையாட்டு மைதானங்களில் விளையாடும் வகுப்புகள் மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றன. இதனுடைய தாரக மந்திரமாக 'வேலையைப் போல உடற்பயிற்சியை செய்யாமல் விளையாட்டை போல செய்யுங்கள்' என்பதாக இருக்கிறது.

அடல்ட் பிளேகிரவுண்ட்ஸ் (Adult Playgrounds):

குழந்தைகளாக இருந்த பொழுது பூங்காக்களில் ஊஞ்சல் ஆடியது, ஏணியில் ஏறியது போல நவீன தொழில்நுட்பத்துடன் இதே முறையில் பெரியவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

அமைப்பு:

ஜிம்மில் இருக்கும் ட்ரெட்மிலுக்கு பதில் 'மங்கி பார்ஸ்' (Monkey Bars), குழுவாக இணைந்து விளையாட பிரம்மாண்டமான ஊஞ்சல்கள், குழுவாக தாண்டும் தடைகள் இருக்கின்றன.

நோக்கம்:

உடலை வருத்தி செய்யும் உடற்பயிற்சியை விட விளையாட்டாக மற்றவர்களுடன் இணைந்து விளையாடியபடியே உடற்பயிற்சி செய்யும்போது மூளை 'எண்டோர்பின்' என்னும் மகிழ்ச்சியை சுரக்கும் ஹார்மோனை அதிகம் சுரக்கச் செய்வதே இதன் நோக்கமாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
கோடைக்கு ஏற்ற 'குளுகுளு' பழைய சோறு... அத இப்படி சாப்பிடணும் பாஸ்!
Active fun at the outdoor fitness park

'கார்டிசோல்’ மற்றும் விளையாட்டின் அறிவியல்:

ஜிம்மில் தனியாக அதிக எடையை தூக்கி உடற்பயிற்சி செய்யும் போது சில நேரங்களில் ஒருவித அழுத்தம் ஏற்பட்டு இதனால் கார்டிசோல் அளவு அதிகரித்து தூக்கமின்மை மற்றும் சோர்வு உண்டாகிறது.

உண்மை நிலவரம்:

ஒருவருக்கொருவர் இணைந்து சமூகமாக விளையாடுவதால் மற்றவர்களுடைய சிரிப்பும், பேச்சும் நமது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி கார்டிசோல் அளவை 30% வரை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2026-ல் பிரபலமாக உள்ள ‘மூவ்மென்ட் கிளாஸ்கள்’:

Animal Flow:

உடல் மற்றும் மனதின் நெகிழ்வு தன்மையை அதிகரிக்க விலங்குகளை போல தரையில் ஊர்ந்து செல்லும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

Tag Rugby & Frisbee:

சிறுவயதில் மற்றவர்களுடன் ஓடி பிடித்த விளையாட்டுகள் பெரியவர்களுக்கு அளிக்கப்படுகின்றன.

Dance Fitness Party:

இருட்டு அறையில் வண்ண விளக்குகளை எரியவிட்டு நடனமாடும் உடற்பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேற்கூறிய 'மூவ்மெண்ட் கிளாஸ்கள்' அனைத்தும் தற்போது மிகப்பெரிய நகரங்களில் பிரபலம் அடைந்து ஹவுஸ் ஃபுல் ஆக உள்ளன.

இதையும் படியுங்கள்:
முடி கொட்டுதா? ஹார்மோன் குறைபாடா? உணவில் சத்துகள் குறைபாடா? காரணம் என்ன?
Active fun at the outdoor fitness park

மாற்றத்தின் அவசியம்:

தற்போதைய 2026 ஆம் ஆண்டின் டிஜிட்டல் உலகில் வேலை செய்பவர்கள் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் லேப்டாப்பின் முன் அமர்ந்து வேலை செய்து சோர்வடைந்து விடுகின்றனர். அதன் பிறகு ஜிம்மிற்கு சென்று தனியாக மெஷின் முன்னால் நிற்பது கூடுதல் மனசோர்வை தரும். அதனால் தான் தற்போது சமூகமாக மற்றவர்களுடன் இணைந்து விளையாடி உடற்பயிற்சி செய்து மகிழ்ச்சி அடைவது உடல் நலத்திற்கும் மனநலத்திற்கும் மருந்தாக இருக்கிறது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com