வெறும் பருப்பு சாப்பிட்டா வெயிட் குறையாது... தமன்னா பிட்னஸ் சீக்ரெட் என்னவென்று உடனே தெரிந்துகொள்ளுங்கள்!

tamannaah-bhatia-fitness
tamannaah-bhatia-fitness
கிரி கணபதி

கிரி கணபதி, 8 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட எழுத்தாளர். Quora போன்ற தளங்களில் எழுதிய அனுபவம் உண்டு.. வீடியோ, பாட்காஸ்ட் வெளியிட்ட அனுபவமும், AI கருவிகளை கையாளும் திறனும் கொண்டவர். ஆரோக்கியம், தன்னம்பிக்கை, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வுப்பூர்வமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை வந்தவுடனேயே, பலரும் முதலில் தேடுவது புரோட்டீன் நிறைந்த உணவுகளைத் தான். அசைவம் சாப்பிடுபவர்களுக்கு பல ஆப்ஷன்கள் ஈஸியாக கிடைத்துவிடும். ஆனால் வெஜிடேரியன் உணவு சாப்பிடுபவர்களுக்குத் தான் இந்த புரோட்டீன் தேடல் ஒரு மிகப்பெரிய போராட்டமாகவே இருக்கும். 

அந்த நேரத்தில், ஆரோக்கியமானது என்று நினைத்து நாம் தினமும் சாப்பிடும் சில உணவுகள், உண்மையில் நமது எடை குறைப்பு பயணத்திற்குப் பெரிய முட்டுக்கட்டையாக இருக்கின்றன என்பது பலருக்கும் தெரியாத ஒரு ரகசியம். இது குறித்துப் பிரபல பாலிவுட் நடிகை தமன்னா பாட்டியாவின் பிட்னஸ் ட்ரைனர் ஒரு அதிர்ச்சியான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

புரோட்டீன் என நினைத்து நாம் ஏமாந்து கொண்டிருக்கும் அந்த மூன்று உணவுகள் என்னென்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

புரோட்டீன் ஆபத்து!

உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க வேண்டும் என்றால் புரதச்சத்து மிக மிக அவசியம். அதுதான் நமது தசைகளை வலுவாக வைத்துக்கொள்வதோடு, அடிக்கடி பசி எடுப்பதையும் கட்டுப்படுத்தும். ஆனால் சைவ உணவுகளில், அதிக புரோட்டீன் உள்ள உணவு எது, அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவு எது என்ற குழப்பம் பலருக்கும் எப்போதுமே இருக்கும். ஆரோக்கியமான உணவு என்பதற்கும், அதிக புரதம் உள்ள உணவு என்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இதை சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டால் உடல் எடை குறையவே குறையாது.

தவிர்க்க முக்கிய உணவுகள்!

முதலில் நாம் கவனிக்க வேண்டியது பீனட் பட்டர் எனப்படும் வேர்க்கடலை வெண்ணெய். ஜிம்முக்கு செல்பவர்கள் பலரும் இதை ஒரு சூப்பரான புரோட்டீன் உணவு என்று நினைத்து பிரட்டில் தடவி ரெகுலராகச் சாப்பிடுவார்கள். ஆனால் இதில் புரதத்தை விடக் கொழுப்புச் சத்து தான் ரொம்பவே அதிகமாக இருக்கிறது. 

அடுத்ததாக பாதாம் மற்றும் நட்ஸ் வகைகள். இவை உடலுக்கு ரொம்பவே நல்லது என்றாலும், இதில் கலோரிகளும் கொழுப்பும் மிக அதிகம். புரதத்திற்காக இதை அதிகமாகச் சாப்பிட்டால் உடல் எடை குறையாமல் ஏறிக்கொண்டு தான் போகும்.

இதையும் படியுங்கள்:
இட்லி, தோசைக்கு மட்டுமல்ல... சாதத்திற்கும் ஏற்ற 2 வகை 'ஹெல்தி' சட்னிகள்!
tamannaah-bhatia-fitness

இறுதியாக நாம் தினசரி வீட்டில் சாப்பிடும் பருப்பு. பருப்பில் புரதம் இருப்பது உண்மைதான், ஆனால் வெறும் பருப்பை மட்டுமே வைத்து உங்களின் கொழுப்பைக் குறைக்க முடியாது. ஒரு கப் பருப்பில் இருக்கும் புரதத்தின் அளவு எடை குறைப்புக்கு எந்த வகையிலும் பத்தவே பத்தாது.

சரியான உணவைத் தேர்ந்தெடுக்கும் வழி!

அப்படியென்றால் சைவ உணவுகளில் புரோட்டீன் இல்லையா என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். ஒரே ஒரு உணவை மட்டும் நம்பியிருக்காமல், உணவுகளைச் சரியாகக் கலந்து சாப்பிடப் பழக வேண்டும். வெறும் பருப்பை மட்டும் சாப்பிடாமல், அதோடு கொஞ்சம் பன்னீர் அல்லது தயிர் சேர்த்துச் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான புரதம் ஈஸியாகக் கிடைத்துவிடும். 

அதுமட்டுமில்லாமல் உங்களின் அன்றாட உணவில் டோஃபு, பன்னீர் மற்றும் கிரீக் யோகர்ட் போன்ற உண்மையான புரோட்டீன் உணவுகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ளுங்கள். அதேபோல எவ்வளவு நல்ல உணவாக இருந்தாலும், அதை எவ்வளவு அளவில் சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம்.

இதையும் படியுங்கள்:
அறிஞர்களும் கலைஞர்களும் ரசித்த ரகசியம்: சைவ உணவின் மாயம்!
tamannaah-bhatia-fitness

சைவ உணவு சாப்பிடுபவர்களும் எளிதாக உடல் எடையைக் குறைத்து ஃபிட்டாக மாற முடியும். அதற்குத் தேவை சரியான திட்டமிடல் மட்டுமே. ஒரு பொருளின் மேல் புரோட்டீன் என்று கொட்டை எழுத்தில் போட்டிருந்தால், அதை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு நம்பி வாங்கிச் சாப்பிடக் கூடாது. அதில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் எவ்வளவு இருக்கிறது என்பதை கவனமாகப் பார்க்க வேண்டும். 

பிரபலங்களின் பிட்னஸ் ட்ரைனர் சொல்லும் இந்த ஸ்மார்ட்டான டிப்ஸ்களை ஃபாலோ செய்து, உங்களின் வெயிட் லாஸ் பயணத்தை ஒரு மாபெரும் சக்சஸாக மாற்றுங்கள்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)