நாம் அறியாமலேயே நம் உடலை அழிக்கும் சைலண்ட் கில்லர்... தப்பிக்க சிம்பிள் வழி இதோ!

Vitamin D defficiency
Vitamin D deficiency
Published on

இன்றைய நவீன காலகட்டத்தில் நாம் அனைவரும் ஏசி அறைகளிலும் லேப்டாப் திரைக்கு முன்னாலும் மணிக்கணக்கில் முடங்கிக் கிடக்கிறோம். குறிப்பாக வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு சூரிய வெளிச்சம் உடலில் படுவதே ஒரு அபூர்வமான விஷயமாக மாறிவிட்டது. இப்படி வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதால் நம்மை அறியாமலேயே ஒரு பெரிய ஆபத்து நமக்குள் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதுதான் வைட்டமின் டி குறைபாடு. 

ஒரு காலத்தில் இது வெறும் எலும்புகளின் உறுதிக்கு மட்டும்தான் தேவை என்று பலரும் நினைத்திருந்தார்கள். ஆனால் மருத்துவ உலகமோ இது நமது ஒட்டுமொத்த உடல் மற்றும் மன நலனையே ஆட்டிப்படைக்கும் ஒரு மாஸ்டர் சாவி என்று எச்சரிக்கிறது. இந்த வைட்டமின் பற்றாக்குறையால் நமது உடலில் என்னென்ன விபரீதங்கள் நடக்கும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

மன நலன், மூளைச் செயல்பாடு!

நமது உடலில் இந்த சத்து சரியான அளவில் இருக்கும்போது, மூளையில் செரோடோனின் எனப்படும் மகிழ்ச்சிக்கான ஹார்மோனைத் தூண்டிவிடுவது இந்த வைட்டமின் தான். ஒருவேளை இதன் அளவு உடலில் கணிசமாகக் குறைந்துவிட்டால் செரோடோனின் உற்பத்தியும் அப்படியே முடங்கிவிடும். 

இதனால் தேவையில்லாத எரிச்சல், இரவில் சரியாக தூக்கம் வராமல் தவிப்பது, செரிமானக் கோளாறு மற்றும் கடுமையான மனச்சோர்வு போன்ற பல பிரச்னைகள் வரிசைகட்டி வந்து நிற்கும். அதுமட்டுமில்லாமல் மூளையின் சிந்தனைத் திறனும் பெருமளவு குறைந்துவிடும். சின்னச் சின்ன விஷயங்களைக் கூட எளிதாக மறந்துபோவது, எந்த ஒரு முடிவையும் சரியாக எடுக்க முடியாமல் தடுமாறுவது போன்ற தேவையற்ற சிக்கல்கள் ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
உடல் எடையை மளமளவென குறைக்கணுமா? 10 நிமிஷத்துல ரெடியாகும் 'வெஜிடபிள் மசாலா ஓட்ஸ்'!
Vitamin D defficiency

உடல் வலி, நரம்புத் தளர்ச்சி!

இது மனதை மட்டுமல்ல நமது உடலையும் மிக மோசமாகப் பாடாய்ப்படுத்திவிடும். நமது நரம்பு மண்டலத்தில் உள்ள செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து பலவீனமடையத் தொடங்கும். இதனால் நரம்புகளில் வீக்கம் ஏற்பட்டு நாள்பட்ட வியாதிகள் வர அதிக வாய்ப்புகள் உள்ளன. 

நாம் தினமும் சாப்பிடும் உணவில் எவ்வளவுதான் கால்சியம் இருந்தாலும் அதனை நமது உடல் உறிஞ்சி எடுத்துக்கொள்ள இந்த வைட்டமின் டி கட்டாயம் தேவை. இது இல்லாத பட்சத்தில் எலும்புகள் மிகவும் பலவீனமாகி லேசாக அடிபட்டால் கூட உடையும் அபாயம் உள்ளது. மேலும் அடிக்கடி மூட்டு வலி, முதுகு வலி மற்றும் எப்போதுமே ஒருவிதமான அதீத உடல் சோர்வு போன்ற தொல்லைகள் நம்மை நிம்மதியாக வேலை செய்ய விடாது.

சூரிய ஒளி!

உண்மையில் இது நமது உடலிலேயே இயற்கையாக உற்பத்தியாகும் ஒரு அற்புதமான சத்து. ஆனால் அந்த மெஷினை ஆன் செய்வதற்கு சூரிய ஒளி என்ற ஒரு சாவி நமக்குத் தேவைப்படுகிறது. காலையில் வெயில் நமது சருமத்தில் பட்டவுடன் அங்குள்ள ஒரு குறிப்பிட்ட வேதிப்பொருள் தூண்டப்பட்டு முதலில் கல்லீரலுக்குப் பயணிக்கிறது. பின்னர் அங்கிருந்து சிறுநீரகத்திற்குச் சென்று முழுமையான வைட்டமின் டி ஆக உருமாறுகிறது. 

இதையும் படியுங்கள்:
பணத்தை விட 'உடல்நலமே' பெரிய செல்வம்... அமைச்சர் நிதின் கட்கரி கற்ற பாடம்!
Vitamin D defficiency

இவ்வளவு பெரிய நன்மைகளைத் தரும் இந்த அரிய சத்தை நாம் காசு கொடுத்து மாத்திரைகள் மூலமாகத் தேட வேண்டிய அவசியமே இல்லை. தினமும் காலையில் குறைந்தது ஒரு அரை மணி நேரமாவது மொட்டை மாடியில் வெயில் படும்படி வாக்கிங் செல்வது அல்லது சின்னதாக ஒரு வொர்க்அவுட் செய்வது உடலுக்கு மிகப்பெரிய நன்மையைத் தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com