ஓமத் தண்ணீர் யார் குடிக்கலாம்? நன்மைகளும் எச்சரிக்கைகளும்!

ஓமத் தண்ணீரின் மருத்துவ குணங்கள் மற்றும் பலன்களைப் பற்றிப் பொதுநல மருத்துவர் Dr. பிரகதீஷ், MBBS அவர்கள் வழங்கிய ஆலோசனைகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட கட்டுரை இது.
Oma Water - ஓமத் தண்ணீர்
Oma Water - ஓமத் தண்ணீர்
மகாலெட்சுமி சுப்ரமணியன்

நான் மகாலெட்சுமி சுப்ரமணியன்.கல்கி குழுமத்தின் நெடுநாள் வாசகி.எனக்கு எழுதுவதிலும்,படிப்பதிலும் ஆர்வம் அதிகம்.வீட்டிலிருந்தே சிறிய அளவில் தோழியின் விழாக்களுக்கு கேட்டரிங் செய்து கொடுக்கிறேன்.வீட்டு தோட்டத்தில் விளைந்த காய்,கனிகளை சிறிய அளவில் விற்பனை செய்கிறேன்.பிசியாக என்னை வைத்துக் கொள்வதில் ஆர்வம் கொள்கிறேன்.

Updated on: 

ஓமம் வெப்பத் தன்மையும், கார்ப்புச் சுவையும் கொண்டது. ஓமச் செடிகளிலிருந்து இதன் விதைகளை பெறுகிறோம். உணவின் சுவையைக் கூட்ட பயன்படுத்தப் படும் ஓமம் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.

ஓமத்தை கொதிக்க வைத்து கிடைக்கும் ஓமத் தண்ணீர் பலவிதங்களில் பயன்படுகிறது. முன்பெல்லாம் ஓமத் தண்ணீரை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி உபயோகிப்போம். தற்போதெல்லாம் அவ்வாறு தரமானதாக, நம்பகத் தன்மையோடு கிடைப்பதில்லை.

எனவே வீட்டிலேயே ஓமத் தண்ணீரை எளிதாக தயாரித்து கொள்ளலாம். ஓமத்தை இலேசாக வறுத்துக் கொண்டு அதனுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு பாதியானதும் இறக்கி விடவும். இதை குழந்தைகளுக்கு எனில் 50 கிராம் எடுத்துக் கொண்டால் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி மருத்துவர் சொன்ன அளவில் உபயோகிக்க வேண்டும். ஓமத் தண்ணீர் பலவிதங்களில் பயன்படுகிறது.

ஓமத் தண்ணீர் செரிமானத்திற்கு உதவுவதுடன், வீக்கம், அஜீரணம், வாய்வு போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. பசியின்மையை போக்குகிறது.

ஆஸ்த்துமா மற்றும் மூச்சுக் குழாய் அழற்சி போன்ற சுவாச தொந்தரவுகளை போக்க ஓமத் தண்ணீர் உதவுகிறது. இது சளியை அகற்றும். நெஞ்செரிச்சலைப் போக்கும். மாதவிடாய் வலிக்கு ஓமத் தண்ணீரை குடிக்கலாம்.

நம் பெரியவர்கள் எதையும் அளவாக எடுத்துக் கொள்ள சொல்வார்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது போல அதிகமாக ஓமத் தண்ணீரை குடித்தால் உடல் சூட்டை அதிகரிக்கும். நெஞ்செரிச்சலை அதிகமாக்கி விடும். ஓமத் தண்ணீரை அளவாக எடுத்துக் கொள்ள பிரச்சனை இல்லை.

டைவர்டிகுலிடிஸ் (Diverticulitis - செரிமானப் பாதையில் உருவாகக் கூடிய சிறிய, வீங்கிய பைகளில் வலி மற்றும் வீக்கம்), அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி (அழற்சி குடல் நோய்) மற்றும் கல்லீரல் நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓமத் தண்ணீரை பருகுவது, பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

வயிற்று புண் இருந்து ஓமத் தண்ணீரை அடிக்கடி அருந்தினால் அது புண்ணை அதிகப்படுத்தலாம். மேலும் சிலருக்கு வாந்தி, குமட்டல், தலைவலி, தோல் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும்.

மாதவிடாய் சுழற்சி சரிவர இருக்கவும், பெண்களின் சிறுநீரக பாதை தொற்றுக்களை தவிர்க்கவும், அடிவயிற்று வலியை நீக்கவும், கர்ப்பிணிகளின் அஜீரணம் பிரச்சனைகளை சரிசெய்யவும் ஓமத் தண்ணீர் உதவுகிறது.

Oma Water - ஓமத் தண்ணீர்
Oma Water - ஓமத் தண்ணீர்https://www.onlymyhealth.com

சதைப் பிடிப்புகளை இளக்கி குணமாக்கும். மலச்சிக்கலை போக்கி குடல் இயக்கத்தை மேம்படுத்தும். ஓமத்தில் உள்ள தைமால் சுவாசப் பாதையை மெலிதாக விரிவுப் படுத்தி சுவாசத்தை சீர்படுத்தும்.

ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியம் குறிப்பாக வயிற்று பிரச்சனைகளை சரிசெய்யும். உரிய அளவில் தகுந்த இடைவெளியில் மருத்துவ ஆலோசனை படி கொடுக்க பிரச்சனை இராது.

இதையும் படியுங்கள்:
குழந்தைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டும்போது செய்யக்கூடாத தவறுகள்!
Oma Water - ஓமத் தண்ணீர்

மொத்தத்தில் ஓமத் தண்ணீரை யார் யாரெல்லாம் எடுத்துக் கொள்ளலாம் என்றால்,

  • அஜீரணம், நெஞ்செரிச்சல் பிரச்சனைகளை சரிசெய்வதால் பெரியவர்கள் கால்கப் ஓமத் தண்ணீரோடு, வெந்நீர் சேர்த்து தேவையெனில் தேன் கால் டீஸ்பூன் சேர்த்து அருந்தலாம்.

  • சளி, இருமல் உள்ளவர்கள் ஓமத் தண்ணீரை அளவோடு பருகலாம்.

  • உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஓமத் தண்ணீரை அருந்தலாம்.

  • மலச்சிக்கல், வயிற்று உப்புசம் இருந்தால் ஓமத் தண்ணீரை அருந்தலாம்.

  • ஓமம் கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்தி விடக் கூடும் என்பதால் கர்ப்ப காலத்தில் பெண்கள் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

  • வயிற்று புண் அதிகம் இருப்பவர்கள் ஓமத் தண்ணீரை அதிகம் எடுத்துக் கொள்ள நெஞ்செரிச்சலை கொடுத்து, வயிற்று புண்ணையும் அதிகரித்து விடும்.

  • உடல்சூடு உள்ளவர்கள் ஓமத் தண்ணீரை தவிர்க்க வேண்டும்.

  • மலச்சிக்கல், உடல் வறட்சி உள்ளவர்கள் இதை சுயமாக அருந்துவதை தவிர்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
மாத்திரை அட்டையில் சிவப்பு கோடு இருக்கா? உஷார்! இல்லனா உயிருக்கே ஆபத்து!
Oma Water - ஓமத் தண்ணீர்
  • பிறந்து ஆறுமாத குழந்தைகளுக்கு‌ ஓமத் தண்ணீர் தேவையில்லை. தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு தேவையான எதிர்ப்பு சக்தி இருப்பதால் இதை தர அவசியம் இல்லை.

  • சிறிய குழந்தைகளுக்கு எனில் (ஒரு வயதுக்கு மேல்) அரை டீஸ்பூன் ஓமத் தண்ணீரை கொடுக்கலாம்.

  • பெரியவர்கள் அலர்ஜி எதுவும் இல்லாத பட்சத்தில் தினமும் ஒருவேளை அரை கப் ஓமத் தண்ணீருடன், வெந்நீர் சேர்த்து தேன் கலந்து அருந்தலாம்.

இவ்வாறு ஓமத் தண்ணீரை அளவோடு உபயோகிக்க நம் ஆரோக்கியத்திற்கு நல்லது.

தீபாவளி அன்று அதிகாலையில் லேகியம் சாப்பிடும் பாரம்பரிய வழக்கத்தின் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மைகள் மற்றும் செரிமான நன்மைகள்.

logo
Kalki Online
kalkionline.com