உலகிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்ட கோடீஸ்வர அரசியல் தலைவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? சரி வாருங்கள் அவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
என்னதான் இவர் மிகப்பெரும் நாட்டின் அதிபராக இருந்தாலும் அவருக்கு ஆண்டு சம்பளமாக ஒரு கோடி ரூபாய் மட்டுமே கொடுப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் அவரது அதிகாரத்தை பயன்படுத்தி பல லட்சம் கோடி சொத்துக்களை இவர் சேகரித்து வைத்துள்ளார். இது பற்றி உண்மைகளை பல சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
இந்த அரசியல் தலைவருக்கு 800 சதுர அடியில் ஒரு அப்பார்ட்மெண்ட்டும் மூன்று கார்களும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவர் உண்மையில் வாழும் வாழ்க்கையை பார்க்கும்போது ஒரு சர்வாதிகாரியைப் போல பெரும் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இவர் பெயரைக் கேட்டாலே அனைவருக்கும் கொஞ்சம் நடுக்கம் ஏற்படும். அவர்தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். உலகின் பெரும் பணக்கார அரசியல் தலைவர்.
இன்றைய நிலவரப்படி அவரது சொத்து மதிப்பு சுமார் 16 லட்சம் கோடி என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். தனக்காக ஒரு பிரமாண்ட கோட்டையை ரஷ்யாவின் கருங்கடல் பகுதியில் இவர் கட்டி வருகிறார். குறிப்பாக அந்த கோட்டையில் கிரேக்க கடவுள்களின் சிலை வைக்கப்பட்டுள்ளதாம். உலகின் தலைசிறந்த இன்டீரியர் பொருட்கள் அனைத்தும் இந்த மாளிகையில் இடம் பெற்றுள்ளன.
கடந்த சில மாதங்களாக இந்த கருங்கடல் மாளிகை சார்ந்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த மாளிகையில் உள்ள டைனிங் ஹாலை 4 கோடி செலவில் கட்டியுள்ளார்களாம். மேலும் இவருக்கு 19 வீடுகள், 700க்கும் அதிகமான கார்கள், 58 ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் போன்ற பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளது.
இவருக்கு அதிகப்படியான சொத்துக்கள் இருந்தாலும் அதன் உண்மைத் தன்மை முழுவதுமாக வெளியே தெரிவதில்லை. ஏனெனில் இவர் பற்றிய ரகசியங்களை வெளியிடுவோர் சிறிது காலத்தில் காணாமல் போய்விடுகிறார்கள். அந்த அளவுக்கு பலம் பொருந்திய அரசியல் தலைவராகத் திகழ்கிறார் விளாடிமிர் புதின்.