Shekhar Home 
சின்னத்திரை / OTT

விமர்சனம்: ஷேகர் ஹோம் - இந்தியன் Sherlock Holmes!

நா.மதுசூதனன்

பிபிசி தயாரிப்பாக வெளியான ஷெர்லாக் ஹோம்ஸ் தொடரை விரும்பிப் பார்க்காதவர்கள் குறைவு. ஒவ்வொரு எபிசோடும் ஒரு திரைப்படம்போல எடுக்கப்பட்டிருக்கும். சில இரண்டு மணி நேரம்வரை கூட நீளும். ஷெர்லக்காகப் பெனடிக்ட் கம்பர் பேச்சும் டாக்டர் வாட்சனாக மார்ட்டின் பிரீமனும் நடித்து அசத்தியிருப்பார். என்னடா இதுபோல ஒரு தொடர் இந்தியாவில் இன்னும் வரவில்லையே என்று நினைத்த மாத்திரத்தில் ஜியோவில் வெளியானது ஷேகர் ஹோம் என்ற தொடர்.

பெயரைப் போலவே அதைத் தழுவி இந்தியாவிற்காக மாற்றி எடுக்கப்பட்ட தொடர்தான். மூலப் பாத்திரங்களான ஹோம்ஸ், வாட்சன், வீட்டு ஓனர் பெண்மணி பாத்திரம், ஹோம்ஸின் அண்ணன் போன்றவற்றை வைத்துக் கொண்டு ஆறு எபிசோட்கள் கொண்ட சீரியசாக இதை எடுத்து இருக்கிறார்கள். தொண்ணூறுகளில் நடைபெறுவதாகக் காட்டப்படுவதால் நம்பகத் தன்மைக்காக இந்தக் குழு மெனக்கெட்டுள்ளது. சேகர் ஹோமாகக் கே கே மேனன் கச்சிதம். வாட்சன் போல ஜெயவிருத் என்ற பாத்திரத்தில் ரன்வீர் ஷோரி. முதல் நான்கு எபிசோட்களும் தனித்தனி கதைகளாக இருக்க ஐந்து மற்றும் ஆறாவது மற்றும் ஒரே கதையாக விரிகிறது.

இது போன்ற கதைகளில் மூலக கதாபாத்திரங்களின் நடிப்பு கச்சிதமாக அமைய வேண்டும். இதில் கேகே மேனன் கொஞ்சம் கிறுக்குத் தனமான துப்பறிவாளரான ஷெர்லாக் பாதத்திரத்தை இயன்ற வரை இயல்பாகச் செய்து கைதட்டலை அள்ளிக் கொள்கிறார். ஒவ்வொரு குற்றத்தையும் அவர் அணுகும் விதம், க்ளூக்களை அசாத்தியமாகக் கவனித்து அதை விடுவித்தல், தேவையான நேரத்த்தில் அதிகமாகப் பேசித் தேவையற்ற நேரத்தில் யோசிப்புடன் நகர்த்துதல் என்று அசத்தி விட்டார்.

அந்தக் காலகட்டத்திற்கு ஏற்ப மாளிகைகளும், ஹோட்டல்களும், கடைசி எபிசோட்களில் கல்கத்தாவை இவர்கள் காட்சிப் படுத்திய விதமும் ரசிக்க வைத்தன. மூலக கதையான ஆங்கில சீரியஸின் இசையை அப்படியே உல்டா செய்துவிட்டாலும் அது மிகப் பெரிய பலம், இவர்கள் இருவர் மற்றும் ரசிகா துக்கலைத் தவிர தெரிந்த முகங்கள் இல்லாமல் இருப்பது கொஞ்சம் அந்நியமாக்குகிறது. அதே போல முப்பது வருடங்களுக்கு முந்தைய செட்டிங்குகள் சில காட்சிகளை நாடகத் தனமாகக் காட்டுகின்றன. ஒளிப்பதிவு தேவையான அளவு லைட்டிங்குகளோடு பொருந்தி இருக்கிறது.

பாஸ்கர் வில்லா, மற்றும் விதவைகள் தொடர்பான இரண்டு எபிசோட்களும் தரம். எல்லாம் கிடைக்க கடைசி அத்தியாயத்தில் கடைசி ஐந்து நிமிடங்களில் வைத்தார்கள் பாருங்கள் ஒரு டுவிஸ்ட். நிச்சயம் எதிர்பார்க்க இயலாத ஒன்று தான். ஷெர்லாக் ஹோம் சேரியசில் மோரியார்ட்டி என்று அவரையே அலைக்கழிக்கும் வில்லன் ஒருவர் வருவார். அதுபோல இங்கேயும். ஆனால் அந்தப் பரபரப்பு கொஞ்சம் மிஸ்ஸிங்.

எல்லாம் இருக்க, துப்பறியும் கதைகள், அதுவும் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் படித்தவர்களுக்கு இந்தச் சீரியஸ் கண்டிப்பாகப் பிடிக்கும். இரண்டு எபிசோட்களில் மட்டும் சிறிய அடல்ட்ஸ் ஒன்லி காட்சிகளைப் புகுத்திவிட்டதால் குடும்பத்தோடு பார்க்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும். 

ஸ்ரீஜித் முகர்ஜியும், ரோஹன் சிப்பியும் இணைந்து இயக்கியுள்ள இதை, ஜியோ சினிமாவில் ப்ரீமியம் சந்தாதாரர்கள்  கண்டு ரசிக்கலாம்.  

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT